தமிழைப் பாதுகாப்பதாகவும் பரப்புவதாகவும் கூறிக் கொண்டு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு எழுத்துச் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் பிற அனைத்து மொழிகளுடனும் ஒப்பிடுகையில் மிகச் சிறந்ததாயும் அறிவியல் முறையில் அமைந்ததாயும் உள்ள ஒரே வடிவப் பாங்கு தமிழ் மொழிக்குரிய வரி வடிவ அமைப்பாகும். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாத சிலர் தாங்களும் குழம்பிப் பிறரையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையோர் மிகச் சிலராய் இருப்பினும் இவர்கள் செல்வாக்கு உள்ள இடங்களில் உள்ளமையாலும் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறி உண்மையாக இருக்குமோ எனப் பிறரை ஐயப் படுகுழியில் தள்ளப் பார்ப்பதாலும் நாம் மறுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்த வகையில் தமிழ் வரிவடிவச் சீர்மையையும் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளும் சிதைவு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் தேவையையும் நாம் காணலாம்.
குறைபாடுள்ள ஒன்றைத் திருத்துவதே முறையானது. மாறாகச் சீராக உள்ளதைத் திருத்துவது என்பது சீரழிப்பே ஆகும். அந்த வகையில் சீராக உள்ள தமிழ் வரிவடிவங்களில் சிதைவு ஏற்படுத்த வலியுறுத்துபவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எளிய கவிதைகள் மூலம் தமிழன்னையை அழகுபடுத்தும் அறிஞர் வா.செ.குழந்தைசாமி ஆவார். அவர் குறிப்பிடும் கருத்துகளில் முதன்மையானவை தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதாலும் உயிர் மெய்க் குறியீடுகள் சீராக அமையாமையாலும் படிக்க முடியாமல் போகின்றது என்பதாகும். உண்மையில் தமிழ் எழுத்துகளில் உயிர் மெய்க் குறியீடுகள் என்பன அட்டவணை 1 இல் குறிப்பிட்டாற்போன்று கால், பிறை, விலங்கு, கீற்று, கொம்பு என ஐந்தாகும். இவற்றுள் கொம்பும் காலும் இணைந்த கொம்புக்கால் என்பது ஊகாரத்திலும் ஔகாரத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. இது ள என்னும் எழுத்து போன்று இருந்தாலும் (கொம்பும் காலும் இணைந்த) தனிக் குறியீடு என்பதால் அட்டவணை 1 இல் தனியாகக் காட்டப்பட்டுள்ளது. natpu
ஐந்து உயிர் மெய்க் குறியீடுகளே அட்டவணை இரண்டில் குறிப்பிட்டாற்போன்று எழுத்துடன் இணைந்தும் முன்னால் அல்லது பின்னால் அல்லது முன்னும் பின்னுமாகச் சேர்ந்தும் பதினெட்டு வகையாகக் காட்சியளிக்கின்றன. natpu
இவற்றுடன் மெய்யெழுத்தில் உள்ள புள்ளி நீக்கப்படுவதன் மூலம் உயிர்மெய் அகரம் உருவாகிறது. எனவே, உயிர்மெய் அமையும் வகை பத்தொன்பது என்று கொள்ளலாம். இவற்றை அட்டவணை 3 அ, அட்டவணை 3 ஆ, அட்டவணை 3 இ ஆகியவை விளக்குகின்றன. natpu natpu natpu
இவற்றுள் ணா, றா, னா ஆகியவை மிக மிகத் தொடக்கக்காலத்தில் இவ்வாறேதான் எழுதப்பட்டு வந்துள்ளன. இவற்றைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களும் குறிப்பிட்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கலைச்சொல் அகர முதலியிலும் ஆறாயிரம் எனத் துணைக்காலுடன் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது குறிக்கப் பெற்றுள்ளது. பின்னரே எழுதும்பொழுது ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகப் பிறை என்னும் வடிவமிட்டு எழுதியுள்ளனர். முன்பே இவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது போல் இப்போது ஏற்றுக் கொண்டால் என்ன என்று சிலர் வினவலாம். குறியீடுகளை அறிவியல் முறையில் அமைக்கும் பொழுதே எழுதும் முறைக்கு முதன்மை கொடுத்து இவ்வாறு அமைத்துள்ளனர். ஆனால் கல்வெட்டுகளில் பெரியார் எழுத்து என்று இப்பொழுது நாம் சொல்லும் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். இவைபோல்தான் ணை, லை, ளை, னை ஆகியன எழுதுகையில் ஏற்படும் எழுத்து மயக்கத்தை அல்லது குழப்பத்தைப் போக்குவதற்காக துதிக்கை எழுத்து என்று இப்போது அறியாமல் அழைக்கப்படுகின்ற முன்வளைத் தலைகீற்று பயன்படுத்தப்பட்டது. இதனால் சுழிகளாக இணைந்து வருகையில் ஏற்படும் ஐயப்பாடு நீங்கியது. டி, டீ ஆகிய எழுத்துகள் உள்ளவாறே மேல் விலங்கு இடப்பட்டால் பி, பீ என்ற எழுத்து போல் தோன்றும் என்பதால் சற்று உள்வாங்கிக் குறியீடுகள் போடப்பட்டுள்ளமை போல்தான் மேலே குறிப்பிட்ட சில ஆகார ஐகாரக் குறியீடுகள் அறிவியல் முறையில் எழுதப்படுவதற்கு வாகாக அமைந்துள்ளன. இவற்றை அறியாமல் நாம் 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றதாகும். எனவே, மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்துவதே சிறந்ததாகும்.
அடிப்படையில் அனைவரும் தவறாக எண்ணிவரும் உகரக் குறியீடுகள் அனைத்தும் அறிவியல் முறையில் மிகச் செம்மையாக அமைந்துள்ளன என அட்டவணை நான்கைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். உகரக் குறியீட்டின் பொதுப்பெயர் கீற்று என்பதாகும். எழுத்து முடியும் இடத்திற்கேற்ப இதனைத் தொடர்ந்து குறிப்பிடும் வகையில் உகர உயிர்மெய் எழுத்துகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் என்றால், க என்னும் எழுத்துடன் கீற்றைக் (க+|)குறிப்பிடுகையில் த என்ற குழப்பம் வரக் கூடாது என்பதற்காகக் கீழ் விலங்குக் கீற்றாக ( ) அமைத்துள்ளனர்; த என்னும் எழுத்தில் முடியும் இடத்தில் கீற்றைக் குறிப்பிடுகையில் த எழுத்தில் இருந்து வேறுபடுத்த முடியாது என்பதால் மடக்கேறு கீற்றாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வடிப்படையில்தான் ஊகாரக் குறியீடுகளும் நேர்த்தியாயும் எழுதுவதற்கு வாகாகச் சீரியதாயும் அமைந்துள்ளன.
பெரும்பான்மைத் தமிழறிஞர்கள் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு எதிர்ப்பவர்கள் - தம் வாதத்தை எடுத்துரைக்கும் பொழுது தெரிவிக்கும் சில கருத்துகளைக் கொண்டு அவர்களும் - எழுத்துச் சிதைவை ஆதரிப்பதாக எழுத்துச் சிதைவாளர்கள் தவறாகக் கூறுகின்றனர். சான்றாக அறிஞர் வா.செ.கு. அவர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பன்மொழியறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலிய சிலர் எழுத்துச் சிதைவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். எழுத்துச் சீரமைப்புக் குழுவில் இருந்தாலும் மீனாட்சி சுந்தரனார், எழுத்துச்சிதைவிற்கு எதிராகத், தமிழ் மிகப் பழைய மொழி என்பதனை மறக்க முடியாது. பழமையை அழிப்பதில் ஏன் இந்த விறுவிறுப்பு? தமிழ் எழுத்து கண்ணைக் குத்துகிறதா? கொலை செய்கிறதா? எனக் கடிந்து கூறியுள்ளார் (சித்த யோகி சாமி சுந்தரமகாலிங்கம் அவர்களின் உண்மை வெளிப்படுகின்றது என்னும் கட்டுரை: செந்தமிழ்ச் செல்வி சனவரி, 1952: தரவு-புலவர்மணி இரா.இளங்குமரனாரின் எழுத்துச் சீர்திருத்தமா? எழுத்துச் சீரழிப்பா? என்னும் நூல் பக்கம் 13). சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், எழுத்துச் சீர்திருத்தவாதிகள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை பேசுகின்றனர். .... எழுத்துச் சீர்திருத்தவாதிகளுக்கு நானும் ஒரு பட்டம் தரலாம். அது குழப்பவாதிகள் என்பதாகும். .... உண்மை என்னவென்றால், தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்லூரிகளில் பயிற்சிமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ, யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுகின்றனர் (எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? 1995) என எழுத்துச்சிதைவிற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்துள்ளார். கூறாததைக் கூறியதாகக் கூறும் வஞ்சனையை அன்றே சிலம்புச் செல்வர் உணர்த்தியுள்ளார். இவர்களைப் போல், கப்பலோட்டிய தமிழர் அறிஞர் வ.உ.சிதம்பரனார், செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் வ.சுப.மாணிக்கம், பாவலர் பெருஞ்சித்திரனார், முதுமுனைவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ம.இல.தங்கப்பா, அறிஞர் வெ.கோவலங்கண்ணன், அறிஞர் ஔவை நடராசன், கணிஞர் மு. மணிவண்ணன், பேராசிரியர் இ.மறைமலை, பேராசிரியர் பா.இறையரசன், பொறிஞர் இராமகிருட்டிணன், முனைவர் இளங்கோவன், அறிஞர் க.சி.அறிவுடைநம்பி, அறிஞர் சீனிநைனா மொகமது, பேராசிரியர் செல்வகுமார், அறிஞர் சுப.நற்குணன், அறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன் முதலிய பலரும் வரிவடிவச் சிதைவு முயற்சிகளில் இருந்து தமிழைக் காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர்; மேலும் பலர் குரல் கொடுத்தும் வருகின்றனர்.
மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரிவடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால் மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கிவந்த தமிழ் மொழி புதிய புதிய வரிவடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக்கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச் சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ் நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை. ஒலியே மொழி என்றும் வரிவடிவம் மொழியன்று என்றும் கூறும் தவறான வாதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஐ என்று மட்டும் ஒலித்தால் தமிழா ஆங்கிலமா வேறு மொழியா எனத் தெரியாது. ஆனால், ஐ எனத் தமிழில் எழுதும்பொழுது, உயிரெழுத்துகளில் ஒன்றாகவும், தலைவன் என்னும் பொருள் உடைய சொல் என்றும் புரிந்து கொள்ளலாம். இதனையே ஆங்கிலத்தில் ஐ என எழுதும்பொழுது தனி எழுத்தாயின் (I) உயிரெழுத்தையும் நான் என்னும் பொருளையும் குறிப்பதாகவும் எழுத்துச் சேர்க்கையாக அமையின் (Eye) கண் என்னும் பொருள் வருவதையும் புரிந்து கொள்ளலாம். ஆக ஒலிவடிவம் பல மொழிகளில் பொதுவாக இருப்பதையும் வரிவடிவமே மொழியை வேறுபடுத்துவதையும் புரிந்துகொள்ளலாம். எனவே, வரிவடிவத்தைச் சிதைப்பது மொழியைச் சிதைப்பதாகும் என உணர்ந்து அம் முயற்சியைக் கைவிடவேண்டும்.
ஐரோப்பிய மொழிகளில் உயிர் மெய்யெழுத்தில்லை எனக் கூறி அவ்வாறு உயிர் மெய் அமைப்பிருக்கும் தமிழின் சிறப்பைக் குறையாகக் கூறுகின்றனர். ஊனமுற்றவர்களைக் காட்டி, முழு நலத்துடன் இருக்கின்றவரைக் கைகால்களை உடைத்துக் கொள்ளச் சொல்லும் அறியாமைக்கு என்னென்பது? உயிர்மெய்எழுத்துகள் இருப்பதால் நாம் ஒவ்வோர் எழுத்தாக ஒலிக்க வேண்டிய தேவையில்லை. த+மி+ழ் என்றால் தமிழ் என்றாகிறது. மாறாக உயிர் மெய் எழுத்துகள் இல்லாமல் இருந்தால் அவர் குறிப்பிடும் ஆங்கிலம் முதலான பிற மொழிகள் போல் த்+அ+ம்+இ+ழ் என எழுத்தொலிகளைக் கூட்டிச் சொல்லை உச்சரிக்க வேண்டியிருந்திருக்கும். சொல்லின் அளவும் நீளமாகும். இதேபோல்தான் சிதைவு முறைப்படி எழுதும் பொழுதும் அளவு கூடும். சான்றாகப் புது என்பதை எழுதும் பொழுது ப+உகரக்குறியீடு+த+உகரக்குறியீடு எனச் சொல்லின் அளவு நீளும். உழைப்பு, தாள், மை, தேய்மானம் ஆகியவை கூடும்: செலவு பெருகும். குறைந்த முயற்சியும் குறைந்த உழைப்பும் நிறைந்த சிக்கனமும் எளிமையும் உடைய எழுத்தமைப்பைக் குறை கூறுவதில் இருந்தே ஆழமான சிந்தனை இன்றி மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் 26 என்ற குறைந்த எழுத்துடைய ஆங்கில மொழியினைக் கற்க முதன்மை கொடுப்பதாகவும் 247 என்னும் மிகுதியான எண்ணிக்கை உடைய தமிழைக் கற்க அஞ்சி ஓடிவிடுவதாகவும் அவ்வப்பொழுது தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. எழுத்துகளின் எண்ணிக்கையைப் பார்த்து யாரும் மொழியைக் கற்க முடிவெடுப்பதில்லை. தேவை கருதிப் பெரும்பான்மையரும் ஆர்வம் கருதி மிகச் சிறுபான்மையரும் மொழியைக் கற்கின்றனர். மேலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான உள்ளன என்பதும் தவறாகும். ஆங்கில வரிவடிங்கள் தலைப்பெழுத்து, சிறிய எழுத்து, அச்சுப் பெரிய எழுத்து, அச்சுச் சிறிய எழுத்து என நால்வகையாக உள்ளன. சான்றாகப் பின்வரும் இரண்டு எழுத்துகளைப் பார்ப்போம் : F, f, g , f - G, g, g, g, என்பன வெவ்வேறு வகையாக உள்ளன அல்லவா? ஆங்கில வரிவடிவத்தில் மொத்தம் 524 வகை உள்ளதாக ஆங்கிலப் பேராசிரியர் ஐயாதுரை என்பார் கூறியுள்ளார். அவை அனைத்தையும் அறியா விட்டாலும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஒருவர் இந்நால்வகை வடிவமுறைகளையும் கற்றால்தான் அவரால் ஆங்கிலத்தைப் படிக்க முடியும். இல்லையேல் பயனில்லை. எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான் உள்ளன என்று சொல்பவர்கள் உண்மையை மறைப்பது ஏன்?
ஆதலின், ஆங்கில வரிவடிவ எண்ணிக்கை 26 எனக் குறைவாக உள்ளதால்தான் ஆங்கிலத்தைக்கற்பதாகக் கூறுவது போன்ற கயமைத்தனம் வேறு கிடையாது. தமிழ் எழுத்துகள் என்பன உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆய்த எழுத்து1 ஆகிய 31 எழுத்துகள்தாம். தமிழில் நெடிலெழுத்துகள் உள்ளமையால் எதையும் சரியாக ஒலிக்க முடிகின்றது; எழுத்தொலியைக் கூட்டினாலே சொல் பிறப்பதால் படிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. பெரும்பாலான மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆங்கிலத்தில் ஆர்,ஏ,எம்,ஏ (R,A,M,A) என்று ஒலித்தால் ரமா என்று சொன்னால் பெண்ணாகவும் ராமா என்று சொன்னால் ஆணாகவும் மாறும் குழப்பம் தமிழில் இல்லை. என், ஓ (NO) என்றால் நோ; என், ஓ, டபுள்யூ (NOW) என்றால் நௌ; கே, என்,ஓ,டபுள்யூ (KNOW) என்றாலும் நோ என்பன போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை. 26 எழுத்துகளையும் நான்கு வகையாக - ஆக 104 - எழுத வேண்டியுள்ளது போன்று தமிழில் எழுத வேண்டிய தேவையில்லை. அறிவியல் ஒலிப்பு முறையில் அமைந்த தமிழின் சிறப்பை மறைத்துவிட்டுக் குறைபாடுடைய மொழிகளின் ஒலிப்பு முறைகளைப் பாராட்டுவது அறியாமையே. (எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)
தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக் கற்பதைச் சுமையாகப் பலர் கருதுகின்றனர். அவ்வாறில்லாமல் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் வழங்கினால் அனைவரும் தமிழுக்கு முதன்மை அளிப்பர். எனவே, தமிழைக் கற்பதற்கும் வரிவடிவ எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை. தமிழ் படிக்கத் தொடங்கிய யாரும் எழுத்துகளின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது என்றும் குறியீடுகள் சீர்மையாக இல்லை என்றும் கூறித் தமிழ் மொழிக் கல்வியை நிறுத்தினாரில்லை. இன்னும் சொல்லப்போனால், அயலக அறிஞர்கள் இங்கு வந்த பொழுது தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றித் தமிழைப் படித்துப் புலமை பெற்றார்களே அன்றி, ஒருவர்கூட, தமிழைப்படிக்க முனைந்தோம்; எழுத்துச் சுமையால் கைவிட்டோம் எனக் கூறினாரல்லர்.
தட்டச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது ஏறத்தாழ 42 விசைகளைக் கொண்டிருந்த விசைப் பல கைக்கேற்ப சப்பானியரும் சீனரும் நெடுங்கணக்கு எண்ணிக்கை மிகுதியாக உடைய பிற மொழியினரும் தத்தம் மொழியைச் சிதைக்கவில்லை. சான்றாகச் சப்பானியர் 3 அடுக்கு விசை இழுவைப் பலகையை அமைத்தனர். முதல் அடுக்கில் 1850 எழுத்துகள் + 351 குறியீடுகள் என 2201; இரண்டாம் அடுக்கில் 858 பட எழுத்து; மூன்றாம் அடுக்கில் 2297 பட எழுத்து என மொத்தம் 5356 எழுத்துகளுக்கான விசைகளை அமைத்தனர். இதனால் சப்பானிய எழுத்துகளைக் குறைத்ததாகப் பொருள் இல்லை. பயன்பாட்டு எண்ணிக்கைக்கேற்ப அடிக்கடி தேவைப்படுவன, அவ்வப்பொழுது தேவைப்படுவன, எப்போதாவது தேவைப்படுவன என்ற முறையில் பகுத்து வைத்துள்ளனர். பின்னர் அனைத்து சப்பானிய வரிவடிவங்களையும் பயன்படுத்தும் வகையில் கருவி அமைத்தனர். கணிணியையும் தம் வரிவடிவம் சிதைவின்றி அச்சிடப்படும் வகையில் அமைத்தனர்.
கஞ்சி எனப்படும் சீன அல்லது சப்பானிய பட எழுத்துகளை எழுதுவதாயின் ஒன்றிலிருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட வளைவுகளும் மடக்குகளும் உள்ளன. சான்றுக்குச் சில:
இச்சிக்கலான வடிவமைப்பால் அவர்கள் எழுத்துகளைச் சிதைக்கவில்லை. நாம் ஆங்கில எழுத்தில் கணியச்சிட்டால் தமிழ் எழுத்து வரும் முறையையும் கொண்டிருப்பது போல் அவர்கள் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் எழுத்தொலிக்கான விசையைக் கணியச்சிட்டால் படவெழுத்து அச்சிடப்படும் வகையில் கணியச்சை வடிவமைத்துள்ளனர். அஃதாவது தொப்பியின் அளவிற்கேற்பத் தலையை வெட்டி உயிரிழக்கும் அறியாமையில் மூழ்காமல் தலைக்கேற்றவாறு தொப்பியை வடிவமைத்துக் கொண்டனர். இங்குள்ள சிலரோ இல்லாத குறைகளை இருப்பதாகக் கூறிக் கொண்டு தொப்பிக்கேற்றவாறு தலையைச் சிதைக்க வேண்டும் என்கின்றனர். எனவே, வரி வடிவ எண்ணிக்கைக்கும் தமிழ்க் கல்வி குறைந்துபோவதற்கும் தொடர்பு இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல,உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசிற்கும் இந்தியக் கூட்டரசிற்கும் உள்ளன. கடமையில் இருந்து தவறும் அரசுகளைக் கண்டிக்காமல் வரிவடிவ எண்ணிக்கையினால்தான் தமிழ் பயில்வோர் குறைவதாகக் கூறுவது ஏதோ தமிழ்ப் பற்றின் காரணமாக வரிவடிவச் சிதைவை வலியுறுத்துவதாக எண்ண வேண்டும் என்பதற்காகத்தானே தவிர வேறு அல்ல.(எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)
திபேத்திய மொழி, சீன மொழி, சப்பானிய மொழி முதலான மொழிகளில் கருவிகளைத் தங்கள் மொழிவடிவேற்கேற்ப அமைத்த அறிவார்ந்த பாங்கை விளக்குவதற்காகப் படம் 1 முதல் படம் 4 வரை விசைப்பலகைப் படங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளன.
இவையும் மொழிப்பயன்பாட்டிற்காகத்தான் கருவிகளே தவிர கருவிகள் பயன்பாட்டிறக்காக மொழியல்ல என்பதை நன்கு விளக்கும். எனவே, அடிப்படை எழுத்துகள் 31 மட்டுமே உள்ள தமிழ்மொழியின் வரிவடிவ எண்ணிக்கையைக்காட்டி வரிவடிவச் சிதைவுமுயற்சியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.
மாறுவது என்பது இயற்கை; எனவே, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதுவரை எத்தனையோ முறை மாறியுள்ள வரிவடிவத்தை இப்பொழுது மாற்றினால் என்ன? என்பது போன்ற வாதங்களைச் சிதைவாளர்கள் எடுத்து வைக்கின்றனர். காலந்தோறும் கல்வெட்டுகளில் வரிவடிவங்கள் மாறி வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் வரிவடிவம் மிகத் தொன்மையான காலத்தில் இருந்து மாறாமல் வந்துள்ளது. பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் natpu
முதலானோர் இக்காலச் சுருக்கெழுத்துபோன்ற கல்வெட்டு வடிவங்கள் வேறு என்றும் பெரிதும் இவை தமிழறியா அயலவர்களால் செதுக்கப்பட்டவை என்றும் கூறுவர். தமிழ் இலக்கண நூல்களும், தொல்லை வடிவின எல்லா எழுத்தும் எனக் கூறுகின்றன. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. எனினும் முதன் முறையாக, வீரமாமுனிவர் காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தமது அறுவகை இலக்கணம் என்னும் நூலில் எகர ஒகர வடிவங்களில் புள்ளி நீக்கி எழுதப்படுவது குறித்துத் தெரிவித்துள்ளார். இகரத்தைச் சுழித்து ஈகாரம்ஆக்குதல் கூட்டெழுத்துகள் முதலான பிற பற்றியும் இந்நூலில் தெரிவித்திருந்தாலும் பரவலாக natpu
ஏற்கப்படாமை குறித்தும் கூறியுள்ளார். எனவே, உள்ளபடியே பிற வரிவடிவங்கள் காலந்தோறும் மாறிவந்திருந்தன எனில் இலக்கண ஆசிரியர்கள் அவை குறித்துக் கூறாதிருந்திருக்க மாட்டார்கள். ஆதலின் வரிவடிவங்கள் காலந்தோறும் மாறி வந்துள்ளன எனச் சிதைப்பாளர்கள் கூறுவது அறியாமையின்பாற்பட்டதே.
ஓலைச்சவடிகளைக் காலந்தோறும் படியெடுத்து வந்துள்ளனர். சிதைப்பாளர்கள் கூறுவதுபோல் வரிவடிம் மாறியிருப்பின் வெவ்வேறுவகையான ஓலைச்சுவடிகள் நமக்குக்கிடைத்திருக்க வேண்டும். அறிஞர் சி.வை.தாமோதரனார், அறிஞர் உ.வே.சாமிநாதய்யர் முதலானோர் தாம் ஓலைச் சுவடிகளை அச்சுவடிவமாக்கப்பட்ட இன்னல்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது இவற்றையும் குறிப்பிட்டிருப்பர். ஆனால் பாட வேறுபாடுகள் இருப்பினும், எழுத்து முறையில் மாறுபட்ட ஓலைச்சுவடிகள் இல்லாமையே எழுத்து வடிவம் மாறாதிருந்துள்ளது என்பதற்குத் தக்க சான்றாகும்.
எழுத்துச் சிதைப்பாளர்கள் சிலர் பெரியார் முகமூடி அணிந்து கொண்டு எழுத்துச் சிதைப்பு முயற்சிகளுக்கு வரவேற்பு தேட முயல்கின்றனர். பெரியார் அன்பர்களும் பெரியாரின் பிற கொள்கைகளைப் பின்பற்றாத இத்தகையோரின் கூற்றுக்களை நம்பி வரிவடிவ மாற்றம் தேவை என நம்புகிறன்றனர். தந்தை பெரியார் அவர்கள் அச்சுப்பணியில், எழுத்துவடிவில் பற்றாக்குறை ஏற்பட்டபொழுது ஆகாரங்களுக்கு ஒன்றுபோல் துணைக்காலைப் பயன்படுத்தியும் ஐகாரங்களுக்கு ஒன்றுபோல் இரட்டைக் கொம்பினைப் பயன்படுத்தியும் வந்தார். ஆனால், அவர் எழுதும்பொழுது இம்முறையைப் பின்பற்றவில்லை என்பதைத் தமக்கு எழுதிய மடலைச் சான்றாகக் கொண்டு மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் விளக்கியுள்ளார்கள். பகுத்தறிவு, தன்மான உணர்வு, இன உணர்வு முதலானவற்றில் பெரியார் பாதையில் செல்லாதவர்கள்தாம், பெரியார் வாழ்ந்தபோதும் அவரது கொள்கைகளுக்காக அவர் பின்னர் அணிவகுக்காதவர்கள்தாம் இப்பொழுது பெரியார் வழியில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதாகக் கூறுகின்றனர். எழுத்துச் சிதைப்பைப் பெரியாரின் இலக்கு எனத் தவறாக எண்ணும் பெரியார் அன்பர்கள் சிலரும் ஏமாற்றப்பட்டு இப்பாதையில் பார்வை செலுத்துகின்றனர். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு உடன்பாடானவர் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
தந்தை பெரியார் அவர்கள், எழுத்தைச் சிதைக்கவுமில்லை; புதிய குறியீடு எதையும் புகுத்தவுமில்லை. நடைமுறையில் உள்ள குறியீடுகளின் அடிப்படையில் ஒன்று போல் அமைக்கலாம் எனக் கருதி அவர் அதனை அச்சில் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். 1950ஆம் ஆண்டில் மெயில் என்னும் ஆங்கில நாளேடு தமிழ்ச்சிதைவு முயற்சியில் ஈடுபட்டபொழுது அதற்கு மறுப்பாகப் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய மறுப்பு மடலைத் தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் வெளியிட்டுள்ளார் என்பதில் இருந்தே பேராசிரியரின் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்துகள்தாம் தந்தை பெரியாருக்கு உடன்பாடானவை எனப் புரிந்துகொள்ளலாம்.
இதே போல் திராவிட இயக்கப் பாவலரான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1.2.1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பாடல்களில் பின்வருமாறு பதிந்துள்ளார்.
தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித்
தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இதுதான்
சீர்திருத்தம்
எழுத்துத் திருத்த்த்திலும் எண்ணத் திருத்தம் வேண்டும்
எழுத்துக்களைச் சீர்திருத்தும் ஆர்வலர்க்கு ஓர் விண்ணப்பம்
எதற்காக இந்த வேகம்?
பழுத்துக் கனிந்திட்ட மொழிக் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்
ஒழுக்கத்தில் ஓரழகு வேண்டுமாயின்
உயர்பெரியார் திருத்த்த்தை ஏற்க மேலும்
கழுத்தறுப்பு வேலைதனைச் செய்வதெல்லாம்
காளைகளைக் காயடிக்கும் செயலை ஒக்கும்
மொழிக்குரிய உயர்கருத்தும் உலகலாவும்
முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள்
வெதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம்!
கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்,
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா உங்களது சீர்திருத்தம்?
தோல்விழுங்கிச் சுளைகளை ஏன் எறிகின்றீர் நீர்?
மக்களெல்லாம் தாய் மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்கு
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கஒரு தகுதியினைப் பெற்றார்போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல் வேண்டா!
பெரியார் காலத்தில் அவர் பின்பற்றி வந்த வரிவடிவ மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பெரியார் அன்பரான முனைவர் பொற்கோ அவர்களும் இன்றைய கணினிஉலகச் சூழலில் உலக மொழிகளில் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியில் சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச் சிதைவு தேவையில்லை என்றும் தமிழ் மொழியின் வரிவடிவங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். (புதிய தலைமுறை (வார இதழ்), நாள்: மே 13, 2010). ஆதலின், தந்தை பெரியார் இன்றிருந்தால் இத்தகைய வரிவடிவச் சிதைவு முயற்சி இந்தியா முழுவதும் ஒரேமொழி – ஒரேவடிவம் என்பதற்கான பாதை எனப் புரிந்துகொண்டு கடுமையாக எதிர்த்திருப்பார்.
இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 29(1)இல் மொழியையும் எழுத்து வடிவத்தையும் பேணிக்காக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் எழுத்து வடிவம் அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனம் அழியும் என்னும் வரலாற்று உண்மையை அதனை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவேதான் சமற்கிருதத்தில் 500க்கு மேற்பட்ட வரிவடிவம் இருப்பினும் பிற இந்திய மொழிகளில் வரிவடிவ எண்ணிக்கை 500க்குச் சற்றுக் குறைவாக அல்லது சற்றுக் கூடுதலாக அமைந்திருப்பினும் சீர்திருத்தம் என்ற பெயரில் அவற்றைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அறிவியல் முறையில் சீராகவும் செம்மையாகவும் அமைந்துள்ள தமிழ் மொழியிலும் வரிவடிவ நிலைப்பே தேவை. ஆதலின், அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக வரிவடிவச் சிதைவினை வலியுறுத்துவோர்க்குத் தண்டனை வழங்கவும் இத்தகைய படைப்புகளைத் தடை செய்யவும் நம் அரசு முன்வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ஒலிவடிவமாகிய உயிரைக்காக்க
வரிவடிவமாகிய உடலைப் பேணுவோமாக!
தமிழ் மொழியைக் காக்க, மொழிவழி தமிழ் இனத்தைக் காக்க
நாம் நமது வரிவடிவத்தைக் காப்போமாக!
Comments
Thank you for commenting!
by HTML Comment Box
[login]
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
அன்பிற்குரிய மணாவிற்கு எழுத்துக் காப்பில் இணைந்தமைக்குத் தனிப்பட்ட முறையிலும் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தொண்டு தொடரவும் நட்பூ சிறக்கவும் வாழ்த்துகிறேன். நான் கடுங்காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்ந்திருந்தேன். நேற்று இரவுதான் இல்லம் திரும்பினேன். இப்பொழுதுதான் கட்டுரையைக் கண்ணுற்றேன். இரு சார்பு கருத்துகள் இடம் பெறுகையில் உலகம் தமிழ் எழுத்துப் பாதுகாப்புப் பக்கம் இருப்பதைப் புரிந்து கொள்ளும் . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் +++++++++
(1 days ago) kumaran said:
எழுத்தைச் சிதைப்பது இனத்தைச் சிதைப்பதே , என்பதைச் சான்றுகளுடன் தெளிவாக்கியுள்ளது கட்டுரை.எதிர்வரும் தலைமுறை தடுமாறாமலும் தடம் மாறாமலும் இருக்க எழுத்தைக் காப்பாற்றித்தான் ஆக வேண்டும்.திருவள்ளுவனின் திருப் பணித் தமிழ்ப் பணியே,தொடரட்டும்.
(Sept 30, 2010) Anonymous said: எல்லாமே மாற்றம் அடையும் பொழுது மாற்றம் வேண்டாம் என்று பழமைவாதிகள் கூறுவது ஏன் எனக் கட்டுரைப் பக்கத்தைப் பார்த்தேன். அட்டவணைகள் படிக்கத் தூண்டின. படித்து முடித்தும்தான் புரிந்தது தமிழ் எழுத்துகளில் ஏன் மாற்றம் கூடாது என்று. எழுத்தை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் கூறுகின்ற பொய்யான காரணங்களுக்கெல்லாம் தவிடு பொடியான ஆதாரங்களை கூறியிருக்கிறார். எழுத்தை அழிப்பது நம் இனத்தை அழிக்கும் முயற்சி என்பதை நன்கு புரிய வைத்துள்ளார் இலக்குவனார் திருவள்ளுவன் இதற்குப் பிறகும் நாம் சும்மா இருக்கக் கூடாது. எழுத்தைக் காக்க நாமும் பாடுபட வேண்டும். நல்ல படைப்பை நட்பு வெளியிட்டுள்ளதற்குப் பாராட்டுகள்.
++++++++++++++++++
(2 days ago) Ilakkuvanar Thiruvalluvan said:
திரு கரிகாலன் அவர்களுக்கு நன்றி. எழுத்தைக் காக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்காக நண்பர்கள் பிறரையும் படிக்கச் சொல்லுங்கள். நட்பூ இதழாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். முந்தைய பதிவுகளையும் நீக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(2 days ago) karikalan said:
ஐயா! தமிழ்மொழியின் எழுத்தைச் சிதைப்பதற்கு முனைகின்ற சிலருக்கும், அவர்களை முட்டுக்கொடுத்துத் தாங்கி நிற்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கும் முகத்தில் அடித்தாற்போன்றது தங்களுடைய "எழுத்தைக்காப்போம்! இனத்தைக்காப்போம்!!" என்கிற விளக்கமான கட்டுரை.
தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்
"எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இது தான்" என்று 01.02 .1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பதிந்துள்ள பாவேந்தர் அவர்களுடைய பாடலின் தலைப்பை மாற்றி "தமிழகம் மீள வேண்டும் திரிவடுகர் ஆட்சி ஒழிய வேண்டும்" எனவும், கடைசி வரிகளை ..."தமது நிலையினை உயர்த்தத் திரிவடுகரின் உள்ளம் இது தான்" என்று மாற்றி எழுதுவது தான் இப்போது பொருத்தமாக இருக்கும் என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ௦
இது போன்ற ஆக்கங்களைத் தாங்கள் தொடர்ந்தும் வெளியிட வேண்டுகிறேன்.
வணக்கம்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன்பு மாநாடு நடத்தப்பட வேண்டுமா வேண்டாமா எனப் பட்டிமன்றம் நடந்தது போல் மற்றொரு கருத்துப் போரும் நடைபெற்றது. தமிழ் எழுத்தை மாற்றியமைத்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் மாநாட்டு முடிவில் எழுத்துச் சீர்திருத்த ஆணை வரும் என்று சொல்லியும் எழுதியும் வந்தனர்.
இது கண்டு பொங்கி எழுந்த தமிழறிஞர்கள் எழுத்துச்சிதைவு முயற்சிகளுக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்தரங்கங்கள் நடத்தியும் இணையம் வாயிலாகவும் தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் சிங்கப்பூரிலும் பெரும் கருத்துப் போரினை நடத்தினர். உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள் இது கண்டு பல்வகையிலும் இதனைத் தடுக்க முறையிட்டனர். இதனால் தமிழக முதல்வர் சார்பாக மாநாட்டுக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரான தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவ்வாறு எத்தகைய முயற்சியும் தமிழ் எழுத்துஅமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை என அறிவித்தார். அத்துடன் நில்லாது முதல்வர் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் குழுவரங்கம் முதலியவற்றை நீக்கச் செய்தார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகக் கட்டுரைகள் வாசிக்க மொழியியல் பிரிவில்தான் ஆய்வரங்கம் ஒதுக்கினார்.
25.06.10 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணிக்குக் கோவூர் கிழார் அரங்கத்தில் இவ்வாய்வரங்கம் நடைபெற்றது. சிங்கப்பூரில் இருந்து பேராசிரியர் மணியம் (எழுத்துத் திருத்தம் தேவையா ? - இவர் அதே நேரம் வேறு ஆய்வரங்கத்தில் தலைமை தாங்கியமையால் இவர் சார்பில் பிரான்சில் இருந்து வந்த பேராசிரியர் லெ.பொ, பெஞ்சமின் கட்டுரையை வாசித்தார்.), துபாயில் இருந்து பொறியாளர் நாக.இளங்கோவன் (தமிழ் எழுத்துத் திருத்தத்தில் பொதிந்த பெருங்கேடுகள்), பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் (தமிழ் எழுத்து முறையின் தனித்தன்மையும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும்) தமிழ்நாட்டில் இருந்து திரு இலக்குவனார் திருவள்ளுவன் (வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு) ஆகியோர் ஆய்வுரை வழங்கினார்கள். (பேராசிரியர் லெ.பொ.பெஞ்சமின் 27.06.10 நண்பகல் 12.30 மணிக்குச் சாத்தனார் அரங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருந்துமா? என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.)
பெரும்பாலான ஆய்வரங்கங்களில் சிலரே பார்வையாளராக இருந்த நிலைக்கு மாறாக இவ்வரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பி இருந்தனர். பலர் இடமில்லாமல் திரும்பிச் சென்றனர். சிங்கப்பூர், மலேசியா எனக் கடல்கடந்துவந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பின்னர் இரு நாளும் மாநாட்டு அறிஞர்கள் இவ் வாய்வரங்கச் சிறப்பு குறித்தே பேசினர் எனில் இவ்வாய்வரங்கச் சிறப்பு குறித்தும் எழுத்தைச் சிதைக்கக் கூடாது என்பதில் உலகெங்கும் உறுதியான கருத்து இருந்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அத்துடன் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாகத் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தம் கட்டுரையில் மேலும் சில கருத்துகளைச் சேர்த்து எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! எனச் சிறு கையேட்டையும் வெளியிட்டார். இக் கையேட்டிற்கும் மாநாட்டில் பெரும் வரவேற்பு இருந்தது. மாநாட்டுக் கட்டுரையின் தொடர்ச்சியாக அமைந்த இக்கட்டுரையை நட்பு வெளியிட்டு ஒரு விவாதக் களத்தைத் தொடங்கி வைக்கிறது. எனவே, உங்கள் கருத்துகளைச் சான்றுகளுடன் பதியுங்கள்.
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
எழுத்துச்சிதைவு முயற்சிகள் தோற்கும். தமிழ் வெல்லும்! ஆனால், கட்டுரை எங்கே? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
திரு கரிகாலன் அவர்களுக்கு நன்றி. எழுத்தைக் காக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்காக நண்பர்கள் பிறரையும் படிக்கச் சொல்லுங்கள். நட்பூ இதழாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். முந்தைய பதிவுகளையும் நீக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(8 hours ago) karikalan said:
ஐயா! தமிழ்மொழியின் எழுத்தைச் சிதைப்பதற்கு முனைகின்ற சிலருக்கும், அவர்களை முட்டுக்கொடுத்துத் தாங்கி நிற்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கும் முகத்தில் அடித்தாற்போன்றது தங்களுடைய "எழுத்தைக்காப்போம்! இனத்தைக்காப்போம்!!" என்கிற விளக்கமான கட்டுரை.
தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்
"எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இது தான்" என்று 01.02 .1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பதிந்துள்ள பாவேந்தர் அவர்களுடைய பாடலின் தலைப்பை மாற்றி "தமிழகம் மீள வேண்டும் திரிவடுகர் ஆட்சி ஒழிய வேண்டும்" எனவும், கடைசி வரிகளை ..."தமது நிலையினை உயர்த்தத் திரிவடுகரின் உள்ளம் இது தான்" என்று மாற்றி எழுதுவது தான் இப்போது பொருத்தமாக இருக்கும் என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ௦
இது போன்ற ஆக்கங்களைத் தாங்கள் தொடர்ந்தும் வெளியிட வேண்டுகிறேன்.
வணக்கம்.
‘தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று’உணர முடியாத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த மக்கள் இன்று தம் நிலை கெட்டுத் தறிகெட்டுத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வீழ்ந்து கிடக்கும் நிலை ஏன்? ‘தாய்த்திருநாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பாமல்’ ‘மானமொன்றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருப்பது’ஏன்? ‘சொந்த நாட்டிற் பரர்க் கடிமை செய்தே வாழ்ந்திடோம்-இனி-அஞ்சிடோம்’என்று உரைக்காமல், ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி’ ‘கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி’ ‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும் சிந்தை இரங்காமல்’வீழ்ந்து கிடப்பதேன்? ‘ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராதுபோல வந்த மாமணியைத்’தோற்கச் செய்தது ஏன்? ‘ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனையடுத்த தீவுகள் பலவினும் பூமிப்பந்தின் கீழ்ப்-புறமுள்ள பற்பல தீவினும் பரவி இவ் வெளிய தமிழச் சாதி, தடியுதை யுண்டும் காலுதையுண்டும் கயிற்றடி யுண்டும், வருந்திடுஞ் செய்தியும்’எரிகுண்டடி பட்டும் கொத்துக் குண்டு வீச்சிலும் மடிந்துஎஞ்சியோர் மண்ணகழ் பொறிகளால் மண்ணிலே புதைக்கப்பட்டுப் போயும் அவற்றினும் மிஞ்சியோர் திறந்தவெளி வதைக்கொட்டடியில் உதைபட்டு அடிபட்டு வதைபட்டு உறுப்பிழந்தும் உணர்விழந்தும் பசியிலும் நோயிலும் நலிந்தும் அழிந்தும் போவது கேட்டும் நல்லுணர்வின்றி நமக்கென்ன வந்தது என்று பொன்னும் மண்ணும் பொருளும் பிறவும் சேர்த்தும் பதவிகளும் உதவிகளும் பெற்றும் தம்மை உயர்த்தியும் தமிழை உயர்த்த மறந்ததேன்? தமிழர்களைக் காக்க மறந்ததேன்? அவர்களின்குறைகளைப் போக்க மறந்ததேன்? ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’என்பதை உணர்ந்தும் ‘வாழ்வும் தாழ்வும் தமது கைகளில்’என்பதை அறிந்தும் உயர் வாழ்வினை மறந்து தாழ்ந்து வீழ்ந்து கிடப்பதேன்? இந்நிலை மாறி நன்னிலை வரும் நாள் எந்நாளோ? எவராலோ? உலக நாடுகள் அனைத்திலும் தமிழ் உயரிய நிலை எய்திடும் நாள் எந்நாளோ? எவராலோ? உலக முனையின் ஒரு சிறு முனையிலும் சீரிய தமிழருக்குச் சிறு கேடு நிகழும் எனில் சீறியே தமிழர் துடைத்திடும் பொன்னாள் எந்நாளோ? எவராலோ? கட்சித் தலைமைக்கும் நடிப்புக் கூட்டத்திற்கும் கொத்தடிமையாய் இராமல் தன்னுணர்வு கொண்டு தமிழுணர்வு பெற்று தரணியை வென்றிடும் நன்னாள் எந்நாளோ? எவராலோ? ‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு’எங்கள் பகைவர் எங்கோ மறையும் நாள் எந்நாளோ? எவராலோ? ‘நாமடைந்த துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத்’துடைக்க ‘துறைதோறும் துறைதோறும் சீறிவந்தே செயல் செய்வார்’உளரோ? இலரோ?உலகெங்கும் உள்ள உண்மைத் தமிழர்களின் உள்ளம் கேட்கும் இத்தகைய வினாக்களுக்கு விடை தருவார் யாரோ? எவரோ?
இமயத்தில் கொடியேற்றிய தமிழர், உலகெங்கும் வெற்றி உலா வந்த தமிழர், உலகெங்கும் உள்ள மொழிகள், பண்பாடுகள், கலைகள், நாகரிகங்கள் தோற்றத்திற்கும் மாற்றத்திற்கும் வளமைக்கும் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வித்தாய் விழுதாய், ஊனாய் உணர்வாய் விளங்கிய தமிழர், அறத்திலும் மறத்திலும் சிறந்தோங்கிய தமிழர் அடைந்திருந்த வளமார் வாழ்வையும் அடைந்துள்ள தகையிலாத் தாழ்வையும் அறிஞர் பலர் ஏற்கெனவே எடுத்துரைத்துள்ளனர். ஆகவே, நான் புதியதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் தாழ்வுகளுக்குக் காரணமான தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவற்றைப் போக்குவதற்கு ஆற்ற வேண்டிய அரும்பணிகள் மொழிக்காப்பும் இனத் தொண்டுமே ஆகும். எனவே அவற்றுள் சிலவற்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
1. உலக நூல்களைப் படைத்திடுக!
சிந்துவெளி நாகரிகம், அரப்பா நாகரிகம், மொகஞ்சதாரோ நாகரிகம் ஆகியன தமிழர் நாகரிகமே! பிற உலக நாகரிகங்களும் தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடையனவே! ஆனால், இவை பற்றிய நூல்கள், கட்டுரைகள், பிற படைப்புகள் ஆகியவற்றில் தமிழர் நாகரிகம் பற்றிய சிறு குறிப்பு கூடஇடம் பெறுவதில்லை. எனவே, உலக வரலாறு, உலகப் பண்பாடுகள், உலக நாகரிகங்கள், உலகக் கலைகள், உலக வணிகம், உலக மொழிகள், உலக இனங்கள், உலக மொழிகளில் அகராதிகள், பொருள் களஞ்சியங்கள், அறிவியல் களஞ்சியங்கள் என உலகளாவிய நூல்களைப் படைக்க வேண்டும். அவற்றைத் தமிழ் இனத் தோற்றம், தமிழ் நிலத் தோற்றம், தமிழ் மொழித் தோற்றம், தமிழ்ப் பண்பாட்டுத் தோற்றம், தமிழ் நாகரிகத் தோற்றம், தமிழ்க் கலைகள் தோற்றம், தமிழ் வணிகத் தோற்றம்,என்பனவற்றைத் தொடக்கமாகக் கொண்டு படைக்க வேண்டும். இந்திய வரலாறும் உலக வரலாறும் குமரி முனையில் இருந்து தொடங்கப் பெற வேண்டும் எனப் பல்துறை அறிஞர்கள் பலர் கூறினும் இந்திய வரலாற்று நூல்களிலேயே ஒரு சில பக்கங்கள்தாம் தமிழுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு இல்லாமல் அனைத்து நாட்டு வரலாற்று நூல்களும் தமிழ்நிலத் தோற்றத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும்.
உலகப் புகழ் பெற்ற அகராதிகளைப் புரட்டிப் பார்த்தால் மறைவாக நமக்குள்ளேயே பழங்கதைகள் பேசப்படும் தமிழ்நாடு என்பது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. மொழி என்ற அளவில் பார்த்தால்தான் சில அகராதிகளில் மட்டும் தமிழ் என்றால் என்ன என்று குறிக்கப் பெற்றிருக்குமே தவிர அவ்வகராதிகள் வழங்கும் மொழிப் பட்டியலில் தமிழ் இடம் பெறவில்லை. இவ்வாறு இல்லாமல் எல்லா மொழி அகராதிகளிலும் அந்தந்த மொழிச் சொற்களில் தமிழில் இருந்து நேரடியாக உருவானவை பற்றிய குறிப்பும் தமிழில் இருந்து பிற மொழிக்குச் சென்று அவ்வம் மொழியில் இடம் பெற்ற சொற்கள் பற்றிய குறிப்பும் அந்தந்த சொற்களுக்கு நேராகவே குறிக்கப்பட வேண்டும். இத்தகைய அகராதிகளை உலகெங்கும் உள்ள மொழிகளில் உருவாக்க வேண்டும். தமிழ் நிலத்திற்கு அண்மையில் உள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலான தமிழ்ச் சேய் மொழியினரேதமிழின் தாய்மையை அறியாமலும் அறிந்தாலும் ஏற்காமலும் உள்ள சூழலில் உலகளாவிய இத்தகைய மொழி அகராதிகளே தமிழின் தாய்மையையும் தொன்மையையும் உலகறியச் செய்யும்.
பிற நாட்டு அறிவியல் களஞ்சியங்களும் தமிழ் அறிவியலோடு தொடர்புபடுத்தி உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பயிரினங்களுக்கு உயிர் உள்ளமை பற்றிய குறிப்பு எனில் தொல்காப்பியர் கூறும் ‘ஒன்றறிவதுவே உற்றறிவதுவே’என்னும் நூற்பாவைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். ‘இராடார்’ எனப்படும் ‘பார்வல்’பற்றிய குறிப்பு எனில் புறநானூறு கூறும் ‘பார்வல் பாசறை’பற்றிய குறிப்பு இடம் பெற வேண்டும். வானூர்தி பற்றிய தெனில், ‘வலவன் ஏவா வான ஊர்தி’பற்றியும் சீவக சிந்தாமணி குறிப்பிடும் மயில் விமானம் பற்றியும் கம்பர் குறிப்பிடும் வானூர்தி பற்றியும் இவ்வாறான பிற குறிப்புகள் பற்றியும் இடம் பெற வேண்டும். வான்குடை பற்றிய செய்தி எனில் போகர் சித்தர் பறப்பித்த வான்குடை பற்றியும் இடம் பெற வேண்டும். வானியலாயின் தமிழ் வானியல் செய்திகளும் இடம் பெற வேண்டும். இவ்வாறு தமிழ் அறிவியல் செய்திகளுடன் இணைத்துப் பிற நாட்டு அறிவியல் களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டால்தான் தமிழின் அறிவியல் சிறப்பைப் பிறர் அறிவர்.
கலை, பண்பாட்டு, நாகரிக, இறையியல் நூல்களிலும் தமிழோடு உள்ள தொடர்பை முன்னிலைப்படுத்தி எழுத வேண்டும். குரவைக் கூத்து, தெருக்கூத்து, நாட்டியம் முதலான தமிழ்க்கலைகளுடனான தொடர்பு குறித்துக் குறிக்கப் பெற வேண்டும்.பிறநாட்டு அறுவடை விழாக்களைப் பற்றிக் குறிக்கும் பொழுது பொங்கல் விழாவுடன் உள்ள தொடர்பு குறித்துக் குறிக்கப் பெற வேண்டும். தமிழ் நாட்டு நாகரிகச் சிறப்பால் அந்தந்த நாட்டு நாகரிகங்கள் பற்றிய வளர்ச்சி குறிக்கப் பெற வேண்டும். இறை வழிபாட்டிலும் தமிழ்நாட்டோடு உள்ள தொடர்பு குறிக்கப் பெற வேண்டும். எடுத்துக்காட்டாக சப்பானிய அகராதியில், சேவற்கொடியும் மயிலும் உடைய முருகன் படம் இருக்கின்றது; ஆனால் சப்பானிய நாட்டுச் சிறு தெய்வமாகத்தான் குறிப்பு உள்ளது. அவ்வாறில்லாமல், தமிழ்க்கடவுள் முருகன் என்ற குறிப்புடன் பொருள் விளக்கம் அமைய வேண்டும். இவ்வாறே தமிழோடு தொடர்புடைய சொற்கள் தக்க விளக்கத்துடன் பிற மொழிகளில் குறிக்கப்பட வேண்டும்.
கடல் வணிகமாயின் வரலாற்றிற்கு முந்தைய காலத்திலேயேதமிழர் மேற் கொண்ட கடல் பயணங்கள் பற்றியும் கடல் வணிகம் பற்றியும் தமிழ் நாட்டோடு கொண்டிருந்த வணிகத் தொடர்பு பற்றியும் குறிப்பு இடம் பெற வேண்டும். பல நாடுகளின் வரலாறு, நாகரிகம், மொழி வரலாறு பற்றிய செய்திகளில் அவை தோன்றும் முன்பே தோன்றிச் சிறந்திருந்த தமிழக வரலாறு, நாகரிகம், மொழிச் சிறப்பு பற்றிக் குறிப்பிட வேண்டும். உலகின் பல பகுதிகளில் புல் பூண்டு கூட முளைக்காத காலக் கட்டத்தில் சிறந்தோங்கி வளர்ந்திருந்த தமிழகச் சிறப்பினைப் பிறர் அறியச் செய்ய வேண்டும்.
உலகெங்கும் பரந்துள்ள அறிவும் ஆற்றலும் தீரமும் துணிவும் கொண்ட ஈழத் தமிழர்கள் , தாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டின் பல்துறை நூல்களிலும் தமிழ் பற்றிய குறிப்பு இடம் பெறும் வகையில்புதிய நூல்கள் பல இயற்றிட வேண்டும். பிற நாடுகளில் குடிபுகுந்து அந்நாட்டு வளத்தை மேம்படுத்த உழைத்து வரும் தமிழ் மக்களும் அந்தந்த நாட்டு இலக்கியங்கள், தொழில், அறிவியல் முதலான துறைகளில் தமிழின் முதன்மையை அறியும் வகையில் நூல்கள் படைக்கவேண்டும். ‘செய்க பொருளை’என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கட்டளையை ஏற்றுப் பொருள் ஈட்டினால்தான் செல்வாக்கு கிடைக்கும்;செல்வாக்கு கிடைத்தால்தான் சொல்வாக்கு வெற்றி பெறும் என்பதை உணர்ந்து வள வாழ்விலும் உயர வேண்டும். இத்தகைய நேர்வில் உலகளாவிய நூல்களைப் படைக்கவும் இயலும்;அவ்வாறு படைக்கப்படும் நூல்களுக்கு மதிப்பும் கூடும். எனவே, உலகப் படைப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டாக முன்முறையாக நாம் தமிழ்நோக்கிலான உலக நூல்களைப் படைக்க வேண்டும்.
2. உலகத் தமிழ்ப் பரப்பு மையம் நிறுவிடுக!
பிழையற்ற தமிழில் பேசவும் எழுதவும் அனைவரும்பயிற்சி பெறும் வகையில் உலகத்தமிழ்ப் பரப்புக் கழகம் நிறுவ வேண்டும். அந்தந்த நாட்டு மொழிகளின் வாயிலாகத் தமிழ்க் கற்றுத் தரப்பட வேண்டும். வெவ்வேறு நிலைகளுக்கான தேர்வுத் திட்டங்களை வகுத்து, கால வேறுபாடின்றியும் அகவை வேறுபாடின்றியும் ஒருவர் ஒரு நிலையிலான தேர்வில் வெற்றி பெற்றார் என்றால் அடுத்த நிலையிலான தேர்விற்குத் தகுதியானவர் என்ற வகையில் பாடமுறை அமைய வேண்டும்.
கொச்சைத் தமிழ்ப் படைப்புகள் தடுக்கப்பட்டு அதை மீறி வெளியிடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொருவரும் தத் தம் மொழிக்குத் தாயான தமிழ் மொழியை அறிவதில் பெருமை கொள்ளும் வகையிலும் தமிழ் அறியாததை இழிவாகக் கருதும் வகையிலும் தமிழ் உணர்வை உருவாக்க வேண்டும். தமிழ் இலக்கியச் செழுமை, தமிழ்ப் பண்பாட்டுப் பெருமை, தமிழ் நாகரிக வளமை, தமிழ் வரலாற்றுச் சீர்மை முதலானவற்றை அனைத்து நாட்டினரும் தத்தம் மொழியில் பயிலும் வண்ணம் உலகக் கல்வியகங்களின் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
நோபிள் பரிசினும் உயர்வான பரிசுத் தொகையைத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு வழங்கும் வண்ணம் உலகளாவிய பரிசுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கும் என இரு வகையிலும் தமிழ்ப் படைப்புகளுக்கு, பிற மொழிகளில் தமிழ் பற்றி வரும் படைப்புகளுக்கு என இரண்டிரண்டு பிரிவுகளிலும் பரிசுகள் அமைய வேண்டும். எல்லா நாடுகளிலும் அந்தந்த நாடுகளில் தமிழ்ப்படைப்புகளுக்கான உயர் பரிசுகள் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
தமிழ் தொடர்பான எந்த உலக அமைப்பாயினும் தமிழ் நாட்டவர் தலைமைப் பொறுப்பில் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ் நாட்டில் எத்தனைக் கட்சிகள்இருக்கின்றனவோ அத்தனைப் பிரிவுகள் இத்தகைய அமைப்பில் உருவாகி விடும். பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் தோன்றித் தமிழ் அமைப்புகளைக் குலைக்காமல்இருக்க வேண்டுமென்றால் இம் முடிவை எடுத்துத்தான் ஆக வேண்டும்.
3. உலகத்தமிழ்க்கலை ஆணையம் அமைத்திடுக!
கலைதான் வளர்ச்சிக்கு ஊடகம். ஆனால், கலை வெளிப்பாடு தமிழாக இல்லை. சமசுகிருதம், தெலுங்கு முதலான பாடல்களுக்கு ஆடுபவர்கள்தாம் மிகுதி. தமிழ்க்கலை பண்பாட்டை எதிரொலிப்பன அரசு சார்பான அல்லது தமிழ் அமைப்புகள் சார்பான நிகழ்ச்சிகளில் சில அமையலாமே தவிரப் பொதுவாகப் பெரும்பாலும்இல்லை. தமிழ்க்கலைகளே தாய்க் கலையாக இருப்பினும் பிற கலைகளுக்கே தமிழ்நாட்டில் முதன்மை கொடுக்கும் அவலம் இன்னும் நீங்கவில்லை. இசைக்கல்வியில் முன்பை விடத் தமிழ்ப் பாடல்கள் சற்றுக் கூடுதலாகக் கற்றுத் தரப்பட்டாலும் அயல்மொழிப் பாடல்கள் கற்பிக்கப்படும் அளவிற்குத் தமிழ்ப்பாடல்கள் கற்றுத் தரப்படவில்லை. இசை, நாட்டியம் முதலான துறைகளிலும் தமிழ்க் கலைச் சொற்கள்நல்ல முறையில்கற்றுத் தரப்படுவதில்லை. தமிழகக் கலைத்துறை மூலம் பயன் பெற்றவர்கள் பிற மாநிலத்தவரே மிகுதி. ஆனால் அவர்கள் தமிழும் அறியார்; தமிழுணர்வும் இல்லார்.
“என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூ றாக
ஒன்றேனும் தமிழர் நடை யுடைபா வனைகள்
உள்ளதாய் அமைக்க வில்லை; உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவ தாயில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!”
என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அந்த நிலை இன்னும் மாறவில்லை. தமிழ் முத்திரை பதிக்கும் வண்ணம் திரைத்துரையோ பிற கலைத்துறையோசீராகவில்லை. அதே நேரம், தமிழ் நாட்டால்வாழ்வு பெறும் அயற் கலைஞர்கள்தாம் மிகுதி. ஆனால் அவர்கள் தமிழுக்கு நன்றியுடையவர்கள் ஆகும் வண்ணம் விளங்கச் செய்யவில்லை நாம். கலைஞர்களுக்குச் சூட்டும் பெயர்களும் தமிழில் இல்லை; அவர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரப் பெயர்களும் தமிழாய் இல்லை. திரைப்படங்களில் நல்ல தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டவன் ஊழல் புரிபவனாக, மக்கள் நல எதிராளியாக, நாட்டுப் பகைவனாகக் காட்டப்படுவதே மிகுதி. தமிழில் பெயர் மாற்றம் செய்து தமிழ் உணர்வை வளர்த்தத் தலைவர்களும் இது குறித்துக் கவலைப்படாத பொழுது வேறு யார் கவலைப்படுவார்கள். கைந்நூல் - கதர் - ஆடை அணிந்தவர்களை நேர்மையான அரசியல்வாதியாகக் காட்டட்டும்; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், மோசமான அரசியல்வாதிப் பாத்திரத்திற்கும் ஒழுக்கக் கேடானவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் மக்கள் பகைவர்களுக்கும் நல்ல தமிழ்ப் பெயர் சூட்டுவது எந்த வகையில் அறமாகும்? இதைத் தட்டிக் கேட்க யாருமில்லையே! திராவிட இயக்கம் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் இச்சிறுமை கண்டு நாண வேண்டாவா? இக் களங்கத்தைத் துடைக்கக் கிளர்ந்தெழ வேண்டாவா? அவ்வாறான பாத்திரப் படைப்புகளை உருவாக்கிய கதையாசிரியர்கள், இயக்குநர்கள், பட உருவாக்குநர்கள், பங்கேற்ற கலைஞர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாவா?தத்தம் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களாக மாற்றித் தமிழுணர்வை விதைத்தவர்கள் ஆட்சியிலேயே தமிழ்ப் பெயர்களுக்கு இழுக்கு ஏற்பட விடலாமா? ‘திராவிட இயக்கத்தினர்’எனக் கூறிக் கொள்பவர்களின் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிப் படங்களிலும் படைப்புகளிலும் வெட்கங் கெட்ட இதுதான் நிலைமை எனில், தமிழ் அழிப்பையே தலையாயப் பணியாகக் கொண்டவர்கள் பற்றி என்ன கூறுவது? எனவே, தணிக்கைக் குழுவில் தமிழ்க்கலை பண்பாட்டு உணர்வாளர்களை உறுப்பினர்களாகநியமிக்க வேண்டும். தீய மாந்தர்களுக்கு நற்பண்பு சார்ந்த தமிழ்ப் பெயர் இடப்படும் படைப்புகளுக்குத்தடை விதிக்க வேண்டும்.
இயல் இசை நாடகங்களில்தான் தமிழ்ப் புறக்கணிக்கப்படுகின்றது என்றால் ஓவியம், கல்தச்சு (சிற்பம்) முதலான கலைகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ்க்கடவுள் படிமங்களைக் கூட ஆரிய உருவில் படைப்பதுதான் கல்தச்சர்களின் தலையாய பணியாக இருக்கின்றது. தமிழ் வரலாற்று நாகரிகப் பண்பாட்டு இலக்கியச் சிறப்புகளைப் பாரெங்கும் பரப்பும் வகையில் ஓவியங்களும் கல்தச்சுகளும் இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டின் உயரிய பல விருதுகள் பிற மாநிலத்தவருக்கே கிடைக்கின்றன. சான்றாகக் கல்பனா சாவ்லா விருதைக் குறிப்பிடலாம். மறைந்த இந்த அம்மையார் போற்றுதலுக்கு உரியவர்தான். ஆனால், இந்தியக் குடியுரிமையைத் துறந்து அயலகக் குடியுரிமையைப் பெற்றுச் சிறந்த இவரைத் தலையில் வைத்துக்கொண்டாடத் தேவையில்லை. தமிழக அரசின் சார்பில் இவர் பெயரில் விருது வழங்குவதே தவறு. அப்படி வழங்கப்பட்ட முதல் விருதும் தமிழ்ப் பெண்மணி ஒருவருக்குத் தரப்படவில்லை. மலையாளப் பெண்தான் பெற்றார். அதுபோல், கலை விருதுகளும் தமிழ்க் கலைவாணர்களை அணி செய்யும் வகையில் வழங்கப்படவில்லை. எடுத்துக்காட்டிற்கு ஒன்று காண்போம். ‘ஊதொலி’ (சாக்சபோன்) இசை தமிழகக் கலையன்று. அவ்விசையில்சிறந்த கலைஞராய் இருப்பினும், தமிழ்க் கலை வளர்ச்சிக்குத் துரும்பளவேனும் செயல்பட்டிராத ஒருவருக்கு எதற்குத் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட வேண்டும்.இவருக்கு மட்டுமல்ல; பெரும்பாலான கலைமாமணி விருதுகள் உடல் கவர்ச்சி மூலம் பணம் ஈட்டுவதில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றனவே தவிர, தமிழ்க்கலை பண்பாட்டு அடிப்படையில் வழங்கப்படுவதுஇல்லை. தமிழகச் செல்வம் அயலவரால் சுரண்டப்படுவது போதாது என்று தமிழக அரசும் அரசின் துறைகளும் எந்தத் திட்டமாகஇருந்தாலும் இவ்வாறு அயலவருக்குப் பரிசுகளை வாரி வழங்குவது முறைதானா? தமிழ் மொழி, இலக்கிய, கலை ஈடுபாடு மிக்க அயலவருக்குத் தனியாகப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தி அத்திட்டத்தின் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தலாமே!
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை
1. இமாலயக் கலை பண்பாட்டு மரபைப் பேணவும் பரப்பவும், 2. புத்த ஃ திபேத்திய கலை பண்பாட்டினைப் பேணவும் பரப்பவும் என ஆண்டு தோறும் இந்தியா முழுமையும் தன்னார்வத் தொண்டு அமைப்பினருக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இதே போல் ஆண்டுதோறும்
1. தமிழ்க் கலை பண்பாட்டைப் பேணவும் பரப்பவும்
2. தமிழக நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி அளிக்கவும்
3. தமிழக மரபுக் கலைகளில் பயிற்சி அளிக்கவும்
4. தமிழ்க் கலைகளை ஆவணமாக்கவும்
5. தமிழ்க் கலைப் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கவும்
6. தமிழ் நூலகங்கள், படிப்பகங்கள் அமைக்கவும்
எனத் தனித்தனியே தன்னார்வத் தொண்டு அமைப்பினருக்கு நிதி உதவிகள் வழங்க வேண்டும்.**
கலை வளர்ச்சியைத்தமிழ்நாட்டுடன் நிறுத்திக் கொள்õளமல், தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் மரபுக் கலைகளையும் நாட்டுப்புறக் கலைகளையும் பயிற்சி, வளர்ச்சி, மேம்பாடு என்ற நிலைகளில் செயல்படுத்த உலகத்தமிழ்க்கலை ஆணையம் தோற்றுவிக்கப்படவேண்டும். பயிற்சி நூல்கள், பயிற்சி ஒலிப் பேழைகள், பயிற்சி ஒளிப்பேழைகள், பயிற்சிக் குறுவட்டுகள் முதலான அனைத்து வகையிலும் வெளியீடுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கலைகளைப் பற்றியும் முழுமையான தொகுப்பு நூல் வெளியிடப்பட வேண்டும். உலக நாடுகள் எங்கும் பயிற்சி அளிக்கவும், உலக மக்கள் இங்கு வந்து பயிற்சி பெறவும் வழிவகை செய்ய வேண்டும். தமிழ்க்கலைப் பொருள்கள், கலைஆடைகள் அடங்கிய அருங்காட்சியகங்களைப் பன்னாடுகளிலும் அமைக்க வேண்டும். அனைத்து நாட்டுக் கலைகளுக்கும் அடிப்படையாய் உள்ளன தமிழ்க்கலைகளே என்பதை உலகோர் உணரச் செய்ய வேண்டும். கலைகளின் வாயிலாகவும் தமிழ்ச் சிறப்புகளைப் பரப்ப வேண்டும். இத்தகைய ஆணையம் ஒப்பியல் கலை ஆய்வுக்கும் உலக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என்பதிலும் ஐயமில்லை.
4. தலைமை வழிபாட்டுணர்வைப் போக்குக!
தமிழக மக்களிடம் உள்ள தலைமை வழிபாட்டுணர்வே பல அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதனால்தான் திரைப்படப் பாத்திரங்களை ஏற்று நடிப்போரை வாழும் ஆன்றோர்களாகக் கருதிக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் போக்கும் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. இந்த எண்ணப் போக்குக் கட்சித் தலைமையிடமும் ஏற்படுவதால். பொது மக்கள் நலனுக்காகக் கட்சி என்பதை மறந்து விட்டுத் தம் சொந்த மக்கள் நலனுக்காகக் கட்சி என்று தலைவர்கள் திகழ்ந்தாலும் அவர்களைக் கண்டிக்கும் போக்கு இன்றி எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளும் போக்கு மேலோங்குகிறது. எனவேதான், ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைகள் கண்டு உள்ளம் வெதும்பித் துடித்துப் பதைபதைத்தாலும் கட்சித்தலைமைகளின் மாறான போக்குகளைக் கண்டிக்காமல் ஊமை மக்களாய் உணர்வு மரத்தவர்களாய் விளங்குகின்றனர். ஆதலின் தமிழ் மக்கள் நலனுக்காகத்தான் தமிழகக் கட்சிகள் என்பதை உணர்த்தி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தலைமை வழிபாட்டாளர்களைக் கொள்கைப் பிடிப்பாளர்களாக மாற்ற வேண்டும். இதற்குக் கட்சி சார்பற்ற அமைப்புகளும் மனவளத் தொண்டர்களும் கட்சிக் கொத்தடிமைப் போக்கிற்கு எதிரான பரப்புரையை மேற் கொள்ள வேண்டும்.தமிழ், தமிழர் நலன்களுக்கு எதிராகக் கட்சித் தலைமை செயல்படும் பொழுது அதனைத் தூக்கி எறியும் உள்ள உறுதியும் துணிவும் வரவேண்டும். இவ்வாறான தமிழ்க்காப்பு போக்குக் காணப்பட்டாலே எந்தக் கட்சித்தலைமைக்கும் தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படும் எண்ணம் முளைவிடாது. எனவே, ஈழப் பேரழிவில் இருந்தாவது பாடங் கற்றுக் கொண்டு தமிழ் ஈழ மக்கள் இனியேனும் தங்கள் தாயகத்தை நிறுவ, தமிழர் தரணி எங்கும் தலைநிமிர்ந்து வாழத், தலைமை வழிபாட்டுணர்வை அறவே அகற்ற வேண்டும்.
5. ஊடகங்கள் தமிழ் நலம் பேணுவதைக் கடமையாய்க் கொள்க!
தமிழர் யார் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும். தமிழில் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகி விட முடியாது. ஆரியப் பரப்புரை மேற்கொள்பவர்கள் தமிழில் பேசுவதாலேயே தமிழர்கள் ஆகி விட முடியாது. ஆனால் என்ன கொடுமை என்றால் எந்தச் சிறப்பு நாள் என்றாலும், குறிப்பாகத்தமிழர் திருநாள் என்றாலும் தமிழ்நலத் தலைவர்களை விட்டு விட்டு இத்தகையோர் வாழ்த்தை வெளிப்படுத்துவதே ஊடகங்களின் வேலையாய்ப் போய்விட்டது. தமிழர் நலத்தை வெளிப்படுத்தும் ஊடகங்கள் கூட இத்தகைய போக்கைப் பின்பற்றுவதுதான் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. தமிழர் திருநாள்களில் முதல் வாழ்த்தைக் கூறி ஆரியநச்சைவிதைப்பதற்கு இவர்களுக்கும் உரிமை யில்லை. தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தாலும் தமிழ் அழிவு வேலையில் ஈடுபடும் இரண்டகர்களுக்கும் உரிமையில்லை.
ஊடகங்களில்வேண்டுமென்றே பிராமணப் பேச்சு வழக்கையேகையாளுகின்றனர். வருங்காலத்தவர் அவர்கள் மட்டுமே வாழ்ந்ததாக அல்லது தலைமை நிலையில் இருந்ததாகஎண்ணும் வகையில் இப்போக்கு தவறானதாக மாறும். அல்லது சென்னைக் கொச்சை வழக்கிற்கு முதன்மை அளிக்கின்றனர். இதுதான் இக்காலத்தமிழ் எனப் பிற்காகலத்தவர் தவறாகக் கருத மாட்õர்களா?சில ஆண்டுகளுக்கு முன்பு நாளிதழ் ஒன்றின் கிழமை மலரில் வந்தமலையாள எழுத்தாளர் செவ்வி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அளவிற்கு மீறிக் கொச்சை வடிவிலும் பிராமண வழக்கிலும் பேசுவதுபோல் அமைந்திருந்தது. தமிழ் கற்று வருபவர்; எனவே, கொச்சையாகப் பேசுகிறாரா? அப்படியே அவர் பேசினாலும் எடுத்தெழுதுபவர் நல்ல நடையில் எழுதியிருக்கலாமே! அல்லது வேண்டுமென்றே எடுத்தெழுதுபவர் பிழையான நடையைக் கையாளுகிறாரா என்ற ஐயங்கள் ஏற்பட்டன. உசாவி அறிந்ததில் அந்த மலையாளஎழுத்தாளருக்குத் தமிழ் தெரியாது என்றும் ஆங்கிலத்தில் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார் என்றும் எடுத்தெழுதியவர் உரியவர் அதைப் படிக்கப் போவதில்லையே என்பதால் தன் விருப்பம் போல் எழுதி அவருக்கு அவப் பெயர் ஏற்படுத்தி விட்டார் என்றும் அறிந்தேன். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம்தான் இந்த எடுத்துக் காட்டு. இப்படித்தான் ஊடக எழுத்தாளர்கள் தத்தம் விருப்பம் போல் மொழிக் கொலைபுரிந்து நடப்பியல் என்கின்றனர்.
மொழித் தூய்மையை இழந்ததாலேயே தமிழ் மண்ணின் பெரும்பகுதியை இழந்தோம் என்பதை உணர்ந்து மொழித் தூய்மையை அனைவரும் பேண வகை செய்ய வேண்டும். மொழிக் கொலை புரியும் ஊடகங்கள் தடைசெய்யப்பட வேண்டும். இறைநெறியும் அடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்களின் பண்பாட்டு நெறிதான். ஆனால், அதே நேரம், இறைநெறி என்ற போர்வையில் மூட நம்பிக்கைகளும் ஆரியப் புரட்டுகளும் அரங்கேற இடந் தரக் கூடாது. இவற்றின் விளைவாக மக்கள் நல்வாழ்விற்கு எனக் கூறிப் பிறமொழி வழிபாட்டு முழக்கங்களை அல்லது பாடல்களை -சுலோகங்களை - ஓதினால் நன்மை விளையும் என்ற புரட்டுச் செய்தியுடன் அவற்றைப் பரப்புகின்றனர். இறைவனால்உருவாக்கப் பட்டதாகவும் ஓதப்பட்டதாகவும் கற்கப் பட்டதாகவும் கற்பிக்கப்பட்டதாகவும் சிறப்பிக்கப்படும் தமிழ் மொழிக்கு இல்லாத சிறப்பு வந்தேறி மொழிகளுக்கு வந்ததாக மக்கள் நம்பும் அறியாமையைப் போக்க வேண்டும்.
“தொண்டர்நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும் எலும்புபெண் உருவாக்
கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச் சொல்லோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்!”
என்று அன்றே பரஞ்சோதியார்உணர்த்தியதை இன்றும் கூட உணராமல் மக்கள் நாவில் நடமிடா மொழியால் இறைவனை வாழ்த்தும்நிலை இருப்பது ஏன்? இந்நிலை மறைந்து இன்னிலை எய்த ஊடகங்கள் இறைநெறி தொடர்பான புரட்டுக் கதைகளை வெளியிடாதிருக்கவும் தமிழிறைப் பாடல்களை மட்டுமே வெளியிடவும் ஆவன செய்ய வேண்டும்.
1974 இலிலிருந்து அனைத்து இந்திய வானொலிகளில் சமசுகிருதத்தில் குறுஞ்செய்தி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதுபோல், அனைத்து வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ்ச் செய்தி ஒலி பரப்பவும் ஒளிபரப்பவும் செய்யப்பட வேண்டும். வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமசுகிருத வகுப்பு, கூட்டுப்பாடல் பயிற்சி சமசுகிருத நாடகம் அளிக்கப்படுவது போல், தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். சமசுகிருதத்தில் திரைப்படம் உருவாக்கவும் நாடகம் உருவாக்கவும் முழு நிதியுதவி அளிக்கப் படுவது போல், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க்கலை நாகரிகச் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் விளக்கும் நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் குறும் படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் உலக அளவில் நிதியுதவி அளிக்கப்படவேண்டும்.++
நட்சத்திரப் பலன்கள் என்றும்எண் கணியம் என்றும் கூறிக் கொண்டு அயல்மொழிப் பெயர்களைப் புகுத்தும் போக்கு ஊடகங்களிடம் மிகுதியாக உள்ளது. தமிழ்ப் பெயர்களை அரசே வரையறை செய்து அப்பட்டியலில் உள்ள பெயர்களை மட்டுமே சூட்ட வேண்டும் என்னும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பட்டியலில் இடம் பெறாதப் பெயராயின் அரசின் இசைவைப் பெற வேண்டும். அது தமிழ்ப் பெயராகத்- தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்கும் பெயராக - இருந்தால் மட்டுமே அதனை ஏற்றுப்பட்டியலில் சேர்க்க வேண்டும்.
உலகெங்கும் தமிழ்ப் படைப்புகள் ஏற்கப்படும் நிலை நிலவ, பேச்சு நடையையும் கொச்சை நடையையும் எழுத்து நடையாக்கும் போக்கை நிறுத்த வேண்டும். பேச்சுநடையே உயிர்ப்புள்ளது எனக் கூறிக் கொச்சை நடையை வேண்டுமென்றே பரப்புவதையும் வரிவடிவச் சிதைவையும் நிறுத்த வேண்டும்.##
இவ்வாறு வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் அறிவுத் துறைகளிலும் பிறவற்றிலும் ஊடகங்கள் தமிழையே பயன்பாட்டு மொழியாகக்கையாள வேண்டும்.
இந்தியத் தமிழர்கள் - தமிழகத் தமிழர்கள் - அடிமை மனப்பான்மையினர். போராட்ட உணர்வுள்ளவர்களும்ஆரவாரத்துடன்அடங்கி விடுவர். உணர்வுமிக்கச் சிறுபான்மையர் உணர்வுகள் காட்டில் நிலவாய் கடலில் மழையாய் உரிய பயன் இன்றி வீணே போகின்றது. தமிழர்களின் அடிமைத்தனம் தொலைந்தால் ஒழிய தமிழர்களுக்கு விடிவு இல்லை. கல்வியில் கலைகளில் ஆட்சியில் நீதிமன்றங்களில் வணிகத்தில் கோயில்களில் தொழிலில் ஊடகங்களில் எங்கும் தமிழ்க் கொலைதான் நடைபெறுகிறது. இக் கொலை நிகழ்வுகளை எடுத்துக்காட்டிற்காகக் குறிப்பிடக் கூடக் கை கூசுகின்றது; அதை எண்ணிப் பார்க்கக்கூட மனம் நோகின்றது. எனவே, அனைவரும் அறிந்த நாளும் ஊடகங்களில் நடைபெறும்தமிழ்ப்படுகொலைகளை எடுத்து இயம்ப இயலவில்லை. இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தினால்தான் தமிழ் உணர்வு தழைத்தோங்கும். தமிழ் உணர்வு கிளர்ந்தெழுந்தால்தான் அடிமை மனப்பான்மை தொலையும். ஆதலின்எல்லா இடங்களிலும் தமிழின் தூய்மையைப் பேண வேண்டும். தமிழின் தூய்மையே நம் வாழ்வின் தூய்மை என்பதை நம் உள்ளத்தில் பதிய வைத்துக் காலங்காலமாய் தடம் புரளாமல் தமிழ் நடை போட அடித்தளத்தை இப்போதே அமைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்நலம் பேணுவதை மக்களிடையே வற்புறுத்துவதையும் பரப்புவதையும் செயலாக்குவதையும் ஊடகங்கள் தங்களின் தலையாயக் கடமையாகக் கொண்டு ஒழுக வேண்டும். கடமை தவறும்ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
6. தமிழ்நாட்டிலுள்ள தற்போதைய மொழிச் சூழலை மாற்றுக:
தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள மொழிச் சூழலை உணர வேண்டும். இங்கு, ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’, ‘இன்றும் தமிழ்! என்றும் தமிழ்!’, ‘அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!’என்பன போன்ற முழக்கங்கள் வெற்று ஆரவாரமாக உள்ளன என்பதுதான் உண்மை. கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சட்ட மொழியாகவும் இறைமொழியாகவும் ஊடக மொழியாகவும் பணிவாய்ப்பு மொழியாகவும் பேச்சு மொழியாகவும் தமிழின் நிலை தேய்பிறையாகத்தான் உள்ளது. ஒரு சாராரின் உரைகள் இவற்றை வளர்பிறையாக மாற்ற இயலாது. மேலும், தமிழ் என்னும் பொழுது ஒரு சில தமிழ்ச் சொற்கள் கலந்த பிறமொழி நடையை நாம் தமிழ் என்று ஏற்றுக் கொள்ள இயலாது. இங்குத் தமிழைத் தேய்ந்த நிலையில் விட்டு விட்டு, உலகெங்கும் செம்மொழித் தன்மையைப் பரப்புவோம் என்பது பெற்றோர்பசித்திருக்க மற்றோருக்கு உணவு அளிப்பதுபோல்தான். எனவே, நம் நாட்டில் எல்லாஇடங்களிலும் எல்லா நிலைகளிலும் தாய்த்தமிழ் ஏற்றமுடன் இருக்கச் செய்வதையும் செம்மொழி மேம்பாட்டிற்கான அடிப்படைத் திட்டமாகக் கருத வேண்டும்.
மொழிக்கல்வி என்ற முறையில் தமிழ்நாட்டில் பயிலுவோர் அனைவரும் தமிழை அறியச் செய்வதுபோல், கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் முதலான அனைத்துத் துறைகளிலும் மழலைநிலை முதல் உயராய்வுநிலை வரை தமிழ் இருக்கவும் இவ்வாறு தமிழைத் தெரிவுசெய்வோருக்கு உதவிகள் புரியவும் கல்விநிலையும் படிப்புதவி நிலையும் இருக்க வேண்டும். ++
தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் ஆங்கிலம், இந்தி, அரபி, உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, சமசுகிருதம், பிரெஞ்ச்சு, செருமன் ஆகிய பிற மொழிகளில்அவரவர் வகுப்பு நிலைக்கேற்றவாறு தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பாடு, தமிழ் நாகரிகம் முதலிய சிறப்புகளை உணரும் வகையில் பாடநூல்களில் கட்டுரைகளும் பாடல்களும் கதைகளும் நாடகங்களும் இடம் பெறவேண்டும். இவ்வாறு,அயல்மொழிக் கல்வியைப் படித்தாலும் அதில் செம்பாதி தமிழ் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால்தான் தமிழ்நாட்டில் பயின்று உயர்நிலை அடைந்த பலரும் தமிழை அறியாதவராகவும் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டில் பயின்று இந்தியாவின் உயர்நிலைப் பதவிகளை அடைந்தவர்களால்தாம், தமிழ்நாட்டின் பல பகுதி பிற மாநிலப் பகுதிகளில் சேர்ந்ததையும் இத்தகையோர் திருவள்ளுவரின் சிறப்பை அறியாமல் பிற மொழிவாணர்களைப் புகழ்வதையும் சங்கப் புலவர்களையும் தொல்காப்பியரையும் எண்ணிக்கூடப் பார்க்காமையையும் உணர்ந்தால் இத்தகைய நிலை அன்று முதல் இன்றுவரை இருப்பதை அறியலாம். எனவே, தமிழ்நாட்டில் கல்வி முழு நேரமாக இருந்தாலும் பகுதி நேரமாக இருந்தாலும் பிற இந்திய மொழிகளாக இருந்தாலும் பிற உலக மொழிகளாக இருந்தாலும் அம்மொழிப் பாடங்களில் உயர்தனிச்செந்தமிழ்ச் சிறப்பை உணர்த்தும்பாடப்பகுதிகள் வரும் கல்வியாண்டு முதலே இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ++
தமிழ் நாட்டுக் கல்வி நிலையங்களில் படித்துப் பயனடைந்த, புகழடைந்த அயலவர் மிகுதி. எனினும் தமிழகச் சூழலில் தமிழுக்கு மதிப்பில்லை யென்பதால் தமிழ் அறியாமலேயே தமிழகத்தில் வாழ்ந்து விடுகின்றனர். எனவே, தமிழில் சான்றிதழ்த் தேர்ச்சியாவது பெற்றிருந்தால்தான் கல்வியகம் நடத்த இயலும்; தொழில் தொடங்க இயலும்; பணியாற்ற இயலும்; கலைத்துறைகளில் ஈடபட இயலும்என்னும் தமிழ்ச் சூழலைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்திய நாட்டின் முதல் குடிமகனாக அறிவார்ந்த தமிழ் மகன் திகழ்ந்த போதும் அண்டை மாநிலங்களின் தமிழ் எதிர்ப்பை மாற்ற முடியவில்லை. உலகப் புலவர் திருவள்ளுவர் சிலையைக் கூடகருநாடக மாநிலத்தில் 18 ஆண்டுகளாகத் திறக்க இயலவில்லை. (இக்கட்டுரை முடிக்கப்பட்ட பொழுது இச்சிலை திறக்கப்பட்டது. எனினும் மூவாறு ஆண்டுகள் உலகப்பாவலரின் திருவுருவம் மூடிக்கிடந்த அவலக் கறை கறைதானே!) தமிழக உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்பட்டும் மீட்பார் இல்லை. தமிழ்ச் சேய்மொழியினரே தமிழுக்குப் பகையாக இருப்பதன் காரணம் உண்மை வரலாற்றை உள்ளபடி நாம் பிறர்க்கு உணர்த்தத் தவறியதே ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் சார்நத சூழல் இருப்பின் இங்குள்ள பிற இனத்தவரால் தமிழின் அருமை உணரப்பட்டு அவரவர் தாய்நிலங்களிலும் தமிழருமை பரவும். எனவே, தமிழ் நாட்டில் உள்ள பிற மொழியினரும் தமிழில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தமிழின் சிறப்புகளையும் அறியும் வகையில் நமதுதமிழ்ப்பணி அமைய வேண்டும். அவர்கள் வாயிலாகவே பிற மொழி பேசும் பகுதிகளிலும் தமிழ்நலச் சூழலை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாக நல்லுறவையும் ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தலாம்.
தமிழ் ஆட்சி மொழி என்றால் ஏதோ 2% அரசு ஊழியர்கள் ஒப்புக்கு நிறைவேற்றும் திட்டம் என்று பலர் கருதுகிறார்கள். அவ்வாறில்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநில, மைய, தனியார் துறைகள், அவைசார்ந்த அமைப்புகள், கல்வியகங்கள், வங்கிகள், அயலக நிறுவனங்கள்என அனைத்து அலுவலகங்களிலும் தமிழே அலுவல் மொழியாக ஆட்சி செய்ய வேண்டும். இதற்காகப் புதிய ஆட்சிமொழிச் சட்டம் ஒன்றைத் தமிழக அரசு பிறப்பித்து, அனைத்து நிலைகளிலும் அன்னைத் தமிழ் உடனே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்ற வரையறை இல்லாவிட்டாலும் இந்தியைத் தேசிய மொழியாக விளம்பரப்படுத்தப்படுவதை நிறுத்தச் செய்ய வேண்டும். மக்கள் மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள்தாம். பட்டியலிலுள்ள 31 மொழிகள் மட்டுமல்ல; பத்தாயிரத்திற்கும் குறைவில்லாத அளவில் பேசப்படும் பிற 100 மொழிகளும் தேசிய மொழிகள்தாம். பத்தாயிரத்திற்கும் குறைவாகப் பேசப்படும் மொழிகளையும் எண்ணிக்கை அடிப்படையில் அல்லாமல் இனத் தகுதி அடிப்படையில் தேசிய மொழிகள் என்று சொல்வதில் தவறில்லை. எனவே, தேசிய மொழி என இந்தி விளம்பரப்படுத்தப்பட்டு மிகுதியாகச் செலவினம் மேற்கொள்ளப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இந்திமொழியில் உருவாக்கப்படும் அகராதிகளின் முதன்மை நோக்கம் இந்திய மொழிகள் முழுமையும் சீரான ஒத்த கலைச்சொற்கள் நிலவ வேண்டும் என்ற போர்வையில் சமசுகிருத, இந்திச் சொற்களைத் திணிப்பதுதான். இந்தி மொழியில் கலைச்சொல்லகராதிகள், ஆட்சித்துறைச்சொற்கள் அகராதிகள் என்ற வகையில் அகராதிகள் வெளியிடுவதில் தவறில்லை. ஆனால், இந்திய மொழிகளுக்கான இந்தி அகராதி என்ற முறையில் வருவது பிறமொழிகளின் வளர்ச்சிக்கும் இந்தி முதன்மைக்கும் ஆழமாய் வழிவகுக்கும் என்பது விளக்காமலேயே புரியும். எனவே, குறைந்தது இந்நிலையிலாவது இதன் தீங்கைப் புரிந்து கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆந்திரா, பீகார், தில்லி( 2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும்மொழியானசமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும். தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். ++
விரும்பும் மொழியைப் பயிலஉரிமை உண்டு என்றும் இந்திய நாடு என்னும் போர்வையிலும் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பின், அவர்களை மக்கள் இல்லாப் பகுதிக்கு அனுப்பி அவர்கள் விருப்பம் போல் படித்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.
‘ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்
சாக இந்தியா என்று சாற்றிடுவோம்’
என்னும் பாவேந்தரின் முழக்கத்திற்குத் தேவையில்லாத சூழலை உருவாக்கி வலிவான பொலிவான இந்தியத் துணைக்கண்டத்தை உருவாக்க வேண்டும் எனில், தமிழே தமிழ்நாட்டின் கல்வி மொழி என்பதை நடுவணரசிற்கும் நாம் உணர்த்த வேண்டும்.ளூளூ
எல்லாக் கோயில்களிலும் தமிழிலும் அருச்சனை செய்யலாம் என இருந்து, இப்பொழுது தமிழில் அருச்சனை செய்யப்படும் என அறிவிப்பு உள்ளதும் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடலாம் என்பது நடைமுறைக்கு வந்தபின்பும் தமிழ் வழிபாட்டைப்பற்றிப் பெருமை கொள்ளாமல் இருக்கலாமா எனச் சிலர் எண்ணலாம். சிதம்பரம் கோயிலில் ஆரியவழிபாடு முடிந்தபின்பு வெளி மேடையில் சிறிது நேரம் தேவாரம் பாடத்தான் இசைவே அன்றி, தெய்வப் படிமம் உள்ள கருவறையில் தேவாரம் பாட இயலாது. மேலும், தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க் கோயில்களில் தமிழ்க் கடவுள்களுக்குத் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு அறிவிப்பு தேவைதானா? அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே தமிழில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்படவேண்டும். ஒரு சில கோயில்களில் மட்டுமே எழுத்து மூலமான வேண்டுகோளின் அடிப்படையிலேயே பிற மொழி வழிபாட்டிற்கு இசைவு வழங்கப்பட வேண்டும். ளூளூ
நாம் எண்ணுவது போலக் காலங்காலமாகச் சமசுகிருதம் கோயில் மொழியாக இல்லை. பிற்காலச் சோழர் காலத்தில்தான் ‘ரிக் ஓதும் மறையவர்க்கு ஒரு கோயில்’எனத் தனியாக சமசுகிருத வழிபாட்டிற்கு என ஒரு கோயில் ஒதுக்கப்பட்டது. பின்னர் எல்லாக் கோயில்களிலும் புகுந்து கொண்டு இப்பொழுது காலங்காலமாகத் தமிழ் வழிபாடு நடைபெற்று வரும் சிறு தெய்வ வழிபாட்டு இடங்களிலும் அம்மன் கோயில்களிலும் புகுந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தமிழர்வாழும் பிற நாடுகளிலும் கோயில் எழுப்பப்படும் பொழுது ஆரிய வழிபாடு சென்று அமர்ந்து கொள்கிறது. (உலகத் தமிழர்களே நீங்கள் உண்மையான இறைப்பற்றாளர் எனில், தமிழ் வழிபாட்டிற்கு மட்டுமே இடம் தாருங்கள்.)
சமய உரிமை அல்லது ஆகம வழிபாட்டு முறை என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களின் இறைவழிபாட்டு உரிமைக்கு எதிரானது எனச் சட்டம் கொண்டு வந்து அத்தகையோரின் அடாவடிப் போக்குகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்கள் வழிபாட்டிற்கு வந்தேறிகள்தடைபோடுவது அறமல்ல என்பதை உணர வேண்டும்.
இறைவழிபாடு தமிழில் அமையப் போராடிக் கொண்டிருக்கும் இச் சூழலில், சிறு பூசாரிகளுக்குப் பயிற்சி என்ற பெயரில் சமசுகிருத வழிபாட்டு முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அநீதி உடனே நிறுத்தப்பட வேண்டும். தமிழர்களுக்காகத் தமிழர்களால் தமிழர்களின் உழைப்பால் தமிழர்களின் பொருளால் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் ஒன்றுதான் ஆட்சி செய்ய வேண்டும். இதை விரும்பாதவர்கள் தமிழகத்திற்குவெளியே சென்று விரும்பியவாறு வழிபட்டுக் கொள்ளத் தடையில்லை.
‘இராமலீலா’என்ற பெயரில் ஆண்டுதோறும் இராவணன் உருவத்தை எரிப்பது தமிழர்க்கு எதிரான கொடும்போக்கு என்பதை உணர்த்தி அதைத்தடை செய்ய வேண்டும். இவ்விழாவானது தமிழர்க்கு - இலங்கைத் தமிழர்க்கு - ஈழத் தமிழர்க்கு - எதிரான உணர்வையே வடவருக்கு உண்டாக்கும் என்பதை உணர்ந்து நிறுத்த வேண்டும். பிற இன நல உணர்விற்கு எதிரான போக்கைச் சமய உணர்வு என்று கருதி ஏற்கக் கூடாது.
திரைப்படங்களோ, தொலைக்காட்சிகளோ, இதழ்களோ எவையாயினும் பெரும்பாலும் தமிழ்க்கொலையில் முதலிடம் பெறுகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் திரு என வரவேண்டிய இடங்களில் சிரீஎன மாற்றிய தணிக்கையை ஏற்றுக் கொண்ட நாம், இப்பொழுது தமிழ்க்காப்பிற்கெனத் தணிக்கையை அறிமுகப்படுத்தினால்தான் நாம் பிறநிலைகளில் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றி காணும் என்பதை உணர வேண்டும். பிறமொழிக் கலப்பின்றித் தமிழைத் தமிழாகப் பயன்படுத்தினால் மட்டுமே, அரசு விளம்பரங்களும் நல்கைகளும் கடன் உதவிகளும் விருதுகளும் வழங்கப்பெற வேண்டும். தமிழோசையும் மக்கள் தொலைக் காட்சியும் இம்முயற்சிகளில் வெற்றி கண்டு வரும் பொழுது, தினமணியின் ஒரு பகுதி நல்ல தமிழில் செய்திகளைத் தந்து வெற்றி ஈட்டிக் கொண்டிருக்கும்பொழுது சிற்றிதழ்கள் பலவும் இலக்கிய இதழ்கள் பலவும் நல்ல தமிழில் வந்து கொண்டிருக்கும் பொழுது பிறவற்றால் ஏன் இயலாது? தமிழ், தமிழ் என முழங்கும் எல்லாக் கட்சிகளும் தத்தம் கட்சி இதழ்களைக் கலப்பு நடையின்றித் தமிழில் நடத்தியும் தமிழில் உள்ள தமிழ் இதழ்களை மட்டுமே வாங்குமாறு தொண்டர்களுக்கு வற்புறுத்தியும் தமிழின உணர்வை வெளிப்படுத்த வேண்டும் அதாவது, பிற மொழி இதழ்களைப் படிக்கத் தடையில்லை. ஆனால் தமிழில் வரக் கூடிய இதழ்கள் எனில் உண்மையிலேயே பிழையற்ற நல்ல தமிழில் வந்தால் மட்டுமே படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என அடையாளம் காட்டி அறிவுறுத்தினால் போதுமே! பண்பாட்டுச் சீர் குலைவான படைப்புகளைத் தணிக்கையின் மூலம் தடுத்தால், நாடகங்கள், படங்கள், தொகுப்பு நிகழ்ச்சிகள் மூலம் நடைபெறும் மொழிக் கொலைகளைத் தடுக்க இயலுமே!ளூளூ
வணிக நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கும் பொழுதே, நல்ல தமிழில் பெயர் இருந்தால் மட்டும் ஏற்பு அளிப்பின், இயல்பாகவே விளம்பரப் பலகைகளில் தமிழைக் காண இயலுமே பொதியப் பட்ட எப்பொருளாயினும் அதன் உறைகளில் தமிழைக் காணலாமே அவ்வாறாயின் இயல்பாவே மக்கள் நாவில் நற்றமிழ் நடமாடுமே!
இவ்வாறு கூறுவதெல்லாம் புதிய திட்டங்கள் அல்ல. பல நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படுவனதாம். நம் நாட்டிலும் காலங்காலமாக வலியுறுத்தி வரப்படுவனவே. ளூளூ
தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையை ஆங்கிலத்திலும் (Madras எனக் குறிப்பிடாமல்) சென்னை என்றே குறிப்பிட வேண்டும் எனத் தமிழ் உணர்வாளர்கள் வேண்டுதலை ஆணையாக்கியது அரசு. ஆனால், உயர்நீதிமன்றம், பல்கலைக்கழகம் முதலான பல அரசுசார் அமைப்புகள், கல்வியகங்கள் இதனைப் பின்பற்றத் தேவையில்லையாம். சென்னை மருத்துவக் கல்லூரி என ஆங்கிலத்தில் பெயர் மாற்றப்பட்ட கல்லூரியின் பெயரை ஓர் ஆரிய மருத்துவர் கூறினார் என்பதற்காக மீண்டும் மதராசு மருத்துவக் கல்லூரி என்றே அழைக்கும்படித் தமிழாய்ந்த தலைவரே ஆணையிட்ட கொடுமை எங்கேனும் நடந்ததுண்டா? தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு எதிராகத்தமிழைப்பற்றி முடிவெடுக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பம்பாய் மும்பை எனவும் கல்கத்தா கொல்கத்தா எனவும் இவைபோல் பிற நகரங்கள் பெயர் மாற்றத்திற்கு ஆளாகும் பொழுதுஅந்தந்த மாநில மக்களின் உணர்விற்கு எதிராகச் செயல்படாமல் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், முதன்மைப் பொறுப்புகளில் அயலவர் ஆளுமை உள்ளமையால் அவர்களின் விருப்பம்தான் கோலோச்சுகின்றது. நாமும் வெட்கப்படாமல் ஏற்றுக் கொள்கின்றோம். ‘ஆரியர்க்குப் பாய்விரித்து ஆங்கிலர்க்குக்கற்பிழந்து பூரியர் செய் இந்திக்கு வால்பிடிப்போர்’நிறைந்துள்ள நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க இயலும்?
தமிழ்ப்பெயர் சூட்டப்படும்போது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் ‘பீடி’பல்கலைக்கழகம் எனச் சுருக்கப்படுவது போல் பெயர்கள் சுருக்கப்படக் கூடாது என்னும் நிலை வரவேண்டும். பேரறிஞர் அண்ணா தலைமைச் செயலகம் எனக் குறிப்பிட்டது ‘செக்கரட்டேரியட்டை’மட்டும்தான் என்று கூறி இன்றுவரை ‘செயிண்ட் சார்சு கோட்டை’எனக் குறிப்பவர்களே மிகுதியாக உள்ளனர். செயலக முகவரிகள், அமைச்சர்களின் மடலேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றிலும் இவ்வாறு குறிக்கப்படுவதை நாம் காணலாம். தலைமைச் செயலகம் தவிர, நடுவணரசின் அலுவலகங்கள், பல துறை அலுவலகங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஏன், இதனைத் தலைமைச் செயலக வளாகம் எனக் குறிக்கக் கூடாதா? இத்தகைய போக்கைப்போக்க, தமிழருக்கே உரிய ஐந்திணைப் பாகுபாட்டை உணர்த்த ‘ஐந்திணைக் கோட்டை’என்று பெயர் சூட்டக் கூடாதா? அல்லது ‘தமிழ்க் கோட்டை’என்று அழைக்கக் கூடாதா? பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் ‘கிரீன்வேய்சு சாலை என்று ஆங்கிலத்தில் இருக்க வேண்ணடுமா? பைந்தமிழ்ச் சாலை என்று மாற்றக் கூடாதா? வெள்ளையர் (whites) தெரு, கறுப்பர் (Blacks) தெரு, என்ற இனப்பாகுபாடு தேவைதானா? வெள்ளி வீதியார் தெரு அல்லது வெள்ளை நாகனார் தெரு, கார்நாற்பது தெரு எனப் புலவர்கள் நூல்களைச் சூட்டலாமே! இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் பல உள்ளன. காவல் ஆணையர் அலுவலகத் தெருவில் அவ்வலுவலகமே இப்போது இல்லை. சங்கப் புலவர் காவற்பெண்டு பெயரைச் சூட்டலாமே! மேலும் இவ்வாறான பெயர்கள் பல தமிழில் அமையாததால்அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அஞ்சலகங்கள் முதலியனவும் அயல்மொழிப்பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக ‘முனிசிபல் காலனி’மதுரையில் உள்ளது. அதனால் அந்தப் பெயரில் அஞ்சலகம் அமைந்துள்ளது. (மதுரை, மாநகராட்சியான பின்னும் அப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில்‘மெயின் கார்டு கேட்’உள்ளது. (கீழவாயில், மேலவாயில் போல) ‘தலைவாயில் அல்லது தலைவாசல்’எனலாமே! இருக்கின்ற தெருப் பெயர்களை மொழிபெயர்த்துக் கொண்டிராமல், ஒத்துவரக்கூடிய அல்லது முற்றிலும் புதிய பெயர்களைச் சூட்ட வேண்டும். உணர்வே இல்லாத மக்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் வெறும் அரசாணைகளால் என்ன பயன்?
‘தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’என்னும் நிலை மேலும் மோசமடைந்து வீட்டிலும் தமிழ் இல்லை என்னும் இழிநிலை வந்து விட்டதைப் போக்குவதற்கு இவ்வாறு கல்வி, தொழில், வணிகம், அலுவலகம், இறைவழிபாடு,என எல்லா நிலைகளிலம் தமிழே இருக்கவகை செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்ச் சூழல் மட்டுமே தமிழ்நாட்டில் துலங்கச் செய்ய வீட்டிலும் ஏட்டிலும்ஊரிலும் பாரிலும் தமிழே ஆட்சி செய்யுமாறு தமிழுக்குத் துறைதோறும் உணர்ச்சி கொண்டே ஊழியம் செய்ய வேண்டும்.
7. இந்தியா என்றால்‘இந்தி’யாவா?
இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற மொழியினர் பெற இயலாது.படைத்துறையில் சேர்ந்தபின்பும் இந்தி இந்தி இந்திதான். நமக்குத் தேவை இந்தி-யா? இந்திய ஒருமைப்பாடா?
நடுவணரசின் நோக்கம் ‘இந்தியா’என்றால் ‘இந்தி’என்பதுதான். காற்றில் வீசும் வாள்வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பு கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு விரைவாக நாம் பொங்கி எழுகிறோமோ அந்த அளவிற்கு நாம் அடங்கிவிடுவோம். சான்றாகச் ‘சடுகுடு’இடத்தைக் ‘கபடி’பிடிக்க முயன்ற பொழுது எழுந்த எதிர்ப்பு‘சடுகுடு’தொலைக்கப்பட்டதுபோல் தொலைந்து போயிற்று அல்லவா? எனவேதான் நடுவணரசின் திட்டங்கள் - ஊரக வளர்ச்சியாகட்டும், சிறு சேமிப்பாகட்டும், காப்பீடாகட்டும், வங்கியாகட்டும் - எங்காயினும் எதுவாயினும் இந்தியே வீற்றிருக்கிறது. எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர் பயிலும் தொழிற்பயிற்சி நிலையங்களின் வினாத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளது போல்,‘இந்தியா முழுமைக்கான’எதுவாயினும் இந்திதான் இடம் பெறுகிறது. ஆங்கிலம் அயல்மொழி எனக் கூறி இடம் பெயர்க்கப்பட்டு அந்த இடத்தில் அயல்மொழியான இந்திமொழி கால்பதித்து வருகிறது.தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் ஓட்டுநர், நடத்துநர் பதவி உயர்விற்கான தேர்வை ஆங்கிலத்தில்தான் நடத்துகிறது. இக்கொடுமையிலும் கொடுமையாக ‘ஒரே நாடு;ஒரே முறையான பயிற்சி’என்று நாளை இங்கு இந்திதான் வரப்போகிறது. தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனையினருக்கான நோய்கள் பெயர்ப்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு, சிறுதொழில் குறுந்தொழில் பெருந்தொழில்களுக்கான தொழில்வகைப் பெயர்ப்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு போன்ற அனைத்து இந்திய அளவிலான அனைத்துத் தொகுப்புகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. நடுவணரசு, நடுவணரசு சார்அமைப்புகளின் பணிகளுக்கு இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களையும் முனைவர் பட்டம் பெற்றவர்களையும் அமர்த்தம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டிலோ தமிழ் வளர்ச்சித் துறையிலேயே தமிழ் படித்தவர்கள் துரத்தப்படுகிறார்கள். னுனு
அன்றாடம் மக்கள் ‘வணக்கம்’என்பதை மறந்து ‘குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங், குட் நைட்’என்று ஆங்கிலத்தில் வாழ்த்தினைப் பரிமாறிக் கொள்ளும் அவலம் ஒரு புறம் இருக்க, மத்திய அரசுஅலுவலகங்களுடன் தொடர்பு கொண்டால் இனிய தமிழ் மறந்து ‘நமசுகாரம்’அல்லவா ஒலிக்கிறது? தொலைபேசிப் பொது எண்களுடன் தொடர்பு கொள்ளுகையில் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்காக உள்ள இத்துறை தமிழ் நாட்டு மக்களிடம் தமிழில் வணக்கம் சொல்லக்கூடாதா? என்ன பண்பாட்டுக் கொலை இது? கேள்வி கேட்பார் யாருமில்லையே?
அதுபோல் மத்திய அரசு அலுவலகங்கள் என்றால் தமிழ்த் ‘திரு’மறைந்து ‘சிரீ ‘ தான் ஆட்சி செய்கிறது, இதுதான் மத்திய அரசின் இந்திக் கொள்கை என்னும் பொழுது தமிழால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களாவது எதிர்த்து இம்முறையை ஒழிக்க வேண்டாவா?
தொலைக்காட்சி வானொலிகளில் விளையாட்டு குறித்த நேரடி வருணையாகட்டும் பிற குறித்த நேர்முக விளக்க உரையாகட்டும் தமிழ் நாட்டிலே நடைபெறும்நிகழ்ச்சி யாகட்டும், தமிழுக்கு இடமில்லையே! ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி வழங்கி இந்த நாடு இந்தி பேசுவோருக்கு மட்டுமே உரியது என மத்திய அரசு ஆணித்தரமாக அறைகிறதே! மாநிலத் தன்னாட்சியாளர்கள் உறங்குவது ஏன்?
தொலைவரிக்குச் சுருக்கப் பெயர்களைப் பதிந்து கொள்ளும் வாய்ப்பை அத்துறை தருகிறது. ஆனால், இப்பெயர் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். இது என்ன கொடுமை? தமிழ்நாட்டு நிறுவனம் அல்லது அமைப்பு நிறுவனப் பெயரைச் சுருக்கமாகத் தமிழில் வைக்கக் கூட உரிமை யில்லையா?
மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களும் சரி மத்திய உதவியுடன் தமிழ் நாட்டில் அமைக்கப்படும் ஊர்கள், நகர்ககளின் பெயர்களும் சரி தமிழில் இல்லை. எந்த இந்திக்காரன் பணத்தில் இதனை அமைக்கின்றனர்? தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே? பிறகு ஏன் இந்த அவலம்? நமது பணத்தால் பெறும் உதவிகளுக்கு இந்தி பேசும் பகுதிகளுக்குத்தமிழ்ப் பெயரையா சூட்டுகின்றனர்? வெட்கமின்றித் தமிழக அரசும் ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. சூடு சொரணையின்றி நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.இவ்வாறு பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்திய நாட்டில் தமிழர் அயலவராக நடத்தப்படும் பொழுது தமிழ் எங்கே வாழும்? வளரும்? மலரும்? தமிழ் நாட்டிலேயே தமிழ் தளரும் பொழுது பிற நாடுகளில் வாடத்தானே செய்யும்?
இந்தி விதைப்பு
வங்காளியர்’எனில் வங்காள மொழி பேசுநர்; ‘மலையாளியர்’எனில், மலையாள மொழிபேசுநர்; ‘பஞ்சாபியர்’எனில் பஞ்சாபி மொழி பேசுநர்; ‘மராத்தியர்’எனில் மராத்தி மொழி பேசுநர்; ‘குசராத்தியர்’எனில் குசராத்தி மொழி பேசுநர்; இவைபோல் ‘இந்தியர்’எனில் ‘இந்திமொழி பேசுநர்’;பேச வேண்டியவர்கள் என்ற தவறான எண்ணம் நம்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் தலைமையமைச்சரும் இந்தியில் பேச முடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார்; இந்தியில் உரையாற்ற இயலாமை இழுக்கு எனக் கருதி இந்தியில் உரையாற்றுகிறார். “இந்தியா’என்றால் ‘இந்தி’நாடு;‘இந்து’நாடு என்ற எண்ணம் மாற முதலில் நம் நாட்டின் பெயரே மாற்றப்பட்டாக வேண்டும்.
தமிழ் இந்தியா
உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தோன்றிய வளர்ந்த வாழும் பகுதியான ஆசியாக்கண்டத்தை நாம் ‘தமிழ்க்கண்டம்’என்றே அழைக்க வேண்டும். ‘இந்தியா’என்பது ‘தமிழ்க்கண்டக் கூட்டரசு நாடுகள்’என அழைக்கப்பெற வேண்டும்; அல்லது குறைந்தது ‘தமிழ் இந்தியா’என்றாவது அழைக்கப்பட வேண்டும். னுனு
இலங்கைத்தீவு முழுமையுமே தமிழ் நிலமே! ஆனால் வந்தேறிகளான சிங்களர்கள், பெரும்பகுதியை வஞ்சகத்தால் கைப்பற்றிக் கொண்டனர். எஞ்சிய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களில் நூறாயிரக்கணக்கானவரை எரிகுண்டுகளாலும் கொத்துக் குண்டுகளாலும் அழித்தும் அகழ்பொறிகளால் மண்ணில் புதைத்தும் ஒழித்து விட்டனர். அப்படியும் எஞ்சியோரை வதைமுகாம்களில் அடைத்துவைத்து குடிநீர்த் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை, மருந்தின்மை ஆகிய கொடுமைகளை உருவாக்கிப் போதிய நல்வாழ்வு வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் அழித்து வருகின்றனர். ஆகவே, தமிழர் வாழ்ந்த பகுதிகளை முழுமையும் சிங்கள நிலமாக ஆக்கவும் பரம்பரையாகச் சிங்கள நிலமாக இருந்ததுபோல் காட்டவும் இந்தியத் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனச் சிங்கள ஊடகங்களே தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் தம் இன மக்களை அழித்தொழிக்கும் நாச வேலைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது போல் உலக மக்களும் தத்தம் இனத்தின் தாய் இனமாகிய தமிழ் இனத்தைக் காக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதை உணர்ந்து தாய்இன அழிவைத் தடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்காகஇந்திய விடுதலைக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் குரல் கொடுத்து வந்திருந்ததுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கடுமையான போராட்டங்கள் மூலம் தங்கள் உணர்வையும்வெளிப்படுத்தியுள்ளனர். உலக நாடுகளின் துணையின்றித் தமிழ் ஈழ மக்கள் தனிஅரசை அமைத்த பின்பு அதை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என வேண்டி வந்தனர். அண்மைப் பேரழிவின் தொடக்கத்தில் இருந்தே அதனைத் தடுத்து நிறுத்த அனைத்துத் தரப்பாரும் பல்வேறு வகைகளில் போராடி வந்தனர். முத்துக்குமாரர்கள்அனலுக்கு உணவாகி உயிர் ஈகம் புரிந்தும் தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இவையனைத்தும் பயனற்றுப்போகும் வண்ணம் இந்திய காங்.அரசு கேளாச் செவியாய் நடந்து கொண்டதன் காரணம் என்ன? இந்திய நாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு விளங்கினாலும், இந்தியாவிற்கு அயலவரால் இன்னல் வரும் பொழுதெல்லாம் முதலில் தோள் கொடுப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் இந்தியா தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. பாராமுகமும் புறக்கணிப்பும் இருந்தாலும்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், சமசுகிருத மேலாண்மைக்காகக் கழுத்தறுப்பு வேலையல்லவா செய்து வருகிறது?
மத்திய ஆட்சிக்குத் தமிழகக் கட்சிகளின் பங்களிப்பு தேவை என்ற கட்டாயச் சூழலிலும் தமிழ்நாட்டிற்கு எதிராகச் செல்லும் துணிவுஎவ்வாறு அதற்கு வந்தது? தமிழால் ஒன்றுபடாத் தமிழ் நாட்டு மக்களே அதற்குக் காரணமாகும். தமிழகப் பேராயக் கட்சியோ தில்லிக்குக் காவடி தூக்குவதில் அணி அணியாகப் பிரிந்து போட்டி போட்டுக் கொள்ளும்.பிற கட்சிகளோ தங்களுக்குள் யார் அடிபணிந்து போவது என்று போட்டி போட்டுக் கொள்வதில் காட்டும் கருத்தைத் தமிழர் நலனைக் கட்டிக் காப்பதில் காட்டுவதில்லை. தமிழ்நாட்டுக் கட்சிகள் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதைப் பார்த்து செல்வாக்குடன் இருப்பதாக எண்ணினால் அது தவறாகும். ஓர் எடுத்துக் காட்டைக் கூற விரும்புகிறேன். கரும வீரர் காமராசர்சுட்டிக் காட்டுபவரைத் தலைமைஅமைச்சராக ஏற்றுக் கொள்ள முன்வந்த பேராயக்(காங்கிரசு) கட்சியினர்அவரைத் தலைமை அமைச்சராக ஏற்க முன்வரவில்லையே! இதுதான் உண்மைநிலை. வடவர் நம்மைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை; ஆனால், நம் இனமோ மொழியோ பயனுறும் வண்ணம் செயல்பட முன்வருவதில்லை. ‘திராவிடம்’, ‘திராவிட இயக்கம்’என்றே தமிழக மக்கள் பேசிவந்தாலும் பிற தென்மாநிலத்தவரும்தமிழ் மக்களுக்கு எதிராகவே நடந்து கொள்கின்றன. மத்திய அரசுகளும் அவற்றிற்கே துணைபுரிகின்றன. நாமோ பாடங்கற்காமல் விழித்தெழாமல் இருக்கின்றோம்.
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு!
தமிழர் வாழ்வே தமிழின் வாழ்வு!
என்பதே பேராசிரியர் சி.இலக்குவனார் வற்புறுத்தி- வந்த கோட்பாடு ஆகும். எனவே, தமிழர் வாழ, தமிழ் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தமிழின் செம்மொழித் தகுதி ஏற்கப்பட்டால் தமிழ்நலன் சார்ந்தவிந்தை பல நிகழும் எனப் பலராலும் சொல்லப்பட்டது. ஆனால், முழு ஏமாற்றமே! தெலுங்கு, கன்னடம், முதலான மொழிகள் பலவற்றையும் சேர்த்துக் கொண்டு பத்தோடு பதினொன்றாக மொழிகளுக்கெல்லாம் தாயான செந்தமிழ்மொழி இருக்கப் போகிறது. எனவே, நாம் அனைத்து மொழிகளுக்கும் காவடி தூக்குவதை விட்டு விட்டு விட வேண்டும். தமிழைமத்திய அரசின் அலுவல் மொழியாகவும்இந்தியாவின் தேசிய மொழியாகவும் அறிவிக்கச் செய்ய வேண்டும். தேசிய மொழி என்று இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால்,இந்தி அறிவிக்கப்படாமலேயே தேசிய மொழியாகப் பரப்புரை செய்யப்படுகிறது. வாழும்செம்மொழியும் மூத்தமொழியும் ஆகிய தமிழைத் தேசிய மொழியாக அறிவிப்பதால்இந்தியாவிற்கே பெருமை எனப் பிறரை உணரச் செய்ய வேண்டும்.
8. தமிழர் சிக்கல்களுக்கு முடிவுரை எழுதுவோம்!
‘அன்றும் இன்றும் உலகளாவிய தமிழர்களின் வாழ்வும் தாழ்வும்’என்னும் தலைப்பே இங்கு சுருக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் என்னும் பொழுதே உலகத் தமிழர்களைக் குறிக்கின்றது. அன்றிருந்த பழந்தமிழர் பொற்கால வாழ்வு நீங்கி இன்று தாழ்வு ஏற்பட்டுள்ளதை ஆராயவில்லை. இவை நீங்கி வாழ்வு பெறத் தேவையான செயற்பாடுகள் மட்டும்சுட்டப்பட்டுள்ளன. எனவே, தலைப்பு ‘தமிழர் தாழ்வும் வாழ்வும்’எனச் சுருக்கப்பட்டுள்ளது.எனினும் இங்கு, உலகளாவிய சிக்கல்கள் ஆராயப்படவில்லை. ஏனெனில் நாட்டிற்கு நாடு இவை வேறுபட்டிருந்தாலும் அடிப்படைச் சிக்கல் என்பது உரிமை மறுக்கப்படுவதுதான். உலகளாவிய உரிமை மறுப்பின் காரணம் தமிழ்நாட்டில் தமிழரும் தமிழும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் உள்ளதுதான். தமிழ் உரிமை பெற்றாலேயே உலகச் சிக்கல்கள் தீர அந்த உரிமை நிலையே கலங்கரை விளக்கமாக அமையும். எனவே, அனைத்துச் சிக்கல்களுக்கும் மையச் சிக்கலான மொழி உரிமையின்மையும் இனக்காப்பின்மையும் இயம்பப்பட்டு இவற்றைப் பெறுவதற்கான சில வழிமுறைகள் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வழிமுறைகள் வெற்றி பெற வாழும் இடங்களில் எல்லாம்தமிழர்கள் அதிகார ஆளுமை பெற வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு அதிகாரப் பீடங்களில் தமிழர் சிறுபான்மையாக இருக்கும் பொழுது தமிழர்க்கு வாழ்வேது? வளமேது? தமிழ்நாட்டிலேயே தாழ்ச்சி என்றால் பிற பகுதிகளில் வீழ்ச்சியைத்தானே சந்திக்க இயலும்? தமிழரல்லாதவரும் தமிழ்ப் பகைவரும் தமிழ் உரிமைக்குஎங்ஙனம் குரல் கொடுப்பர்? தமிழ் நாட்டில் தலைமைப் பதவிகளிலும் அதற்கு அடுத்த நிலைகளிலும் தமிழர் மட்டுமே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும்.
உலகத் தமிழர்கள் எதிர்நோக்கும் எல்லாச் சிக்கல்களும் நம் செயல்பாடுகளை அல்லது செயல்பாடின்மையைச் சார்ந்தனவே! இவையோ நம் இன உணர்வைச் சார்ந்தனவே!-எனப் புரிந்து கொண்டு செயல்பட்டால் எல்லாம் வல்லவராக நாம் திகழலாம். தமிழ் வல்லவரை எதிர்நோக்கும் இமயமலைபோன்ற சிக்கலும் தவிடு பொடியாகும். ஆதலின் பின்வருவனவற்றை நினைவில் நிறுத்துவோம்!‘இனநலம் எல்லாப் புகழும் தரும்’என்றும் ‘இனநலம் ஏமாப்பு உடைத்து’என்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் (குறள் 457 - 458) இனநலம் குறித்து வலியுறுத்தி இருந்தாலும் நாம் அதை நினைக்க மறந்தோம்! சிதைந்தோம்! இனநலம் ஒன்றையே எண்ணித் தாயகத் தமிழர்கள் செயல்பட்டார்கள் எனில் நமக்கு எதிராக எவனும் நெருங்க மாட்டான்! எமனும் நெருங்க மாட்டான்! ‘எங்கும் இன்னல்! என்றும் அல்லல்!’ என வாழும் உலகத் தமிழர்கள் என்றென்றும் இன்பமே அடைய
மேற்கோள் கருத்துகள் கட்டுரையாளரின் பின்வரும்படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை:
** செம்மொழி இதுவரையும் இனிமேலும்:புதிய பார்வை: அக்.1-15,2004: பக்கம் 13
##செம்மொழி அரசேற்பால் தமிழ் பெறும் பயன்கள் : உங்கள் குரல் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்: பக்கம் 83
++ செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குச் செய்ய வேண்டியன: ஆசியவியல் நிறுவனமும் நடுவண் அரசின் செம்மொழித் தமிழ் மேம்பாட்டு மையமும் இணைந்து நடத்திய செம்மொழித் தமிழ்-பன்னாட்டுக் கருத்தரங்கம்
ளூளூ தமிழ் இன்றும் என்றும் : திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் ஆறாவது கருத்தரங்கம்
னுனுதமிழ் : ஆட்சிமொழிச் செயலாக்கம் - ஓர் இனிய கனவு; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் - தமிழ் ஆட்சிமொழி : சிக்கல்களும் தீர்வுகளும் - கருத்தரங்கு ; 1996 நவம்பர் 3-5