>>அன்றே சொன்னார்கள்
அன்றே சொன்னார்கள்
முகிலறிவியலின் முன்னோடி நாமே
வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard: 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர் இலமார்க்கு (Jean-Baptiste Lamarck:1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும் இவ்வேறுபாடுகள் தோற்றத்தின் தன்மையில் கூறப்பட்டனவே தவிர தன்மையின் அடிப்படையில் விளக்கப்படவில்லை.
யோவான் மேசன் (Sir (Basil) John Mason), என்னும் அறிஞர்தான் முகில்களின் இயற்பியல் (The Physics of Clouds) என 1957 இல் நூலை வெளியிட்டு முகில்களின் வகைகளைச் சரியாக விளக்கினார். (1994 இல்தான் இதனை அட்டவணைப்படுத்தி விளக்கியுள்ளனர்.)
மழையியல் பற்றி நன்கு அறிந்திருந்த பழந்தமிழர்கள் முகில் அறிவியல் குறித்தும் சிறப்பான அறிவுடையவராக விளங்கியுள்ளனர். முகில்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அவர்கள் சூட்டிய பெயர்களை எல்லாம் அவற்றின் அறிவியல் சிறப்பை உணராமல் முகிலைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள் என நாம் எண்ணி விட்டோம். எனினும் அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
கடல்மட்டத்தில் இருந்து
இன்றைய பெயர்கள் | உயரம் பேரடி (மீட்டர்) | ||
1. | உயர்முகில் | Cirrus | 9000 |
2. | குவியடுக்கு | Cirrostratus | 8000 |
3. | சுருள் குவிவு | Cirrocumulus | 7000 |
4. | இடை அடுக்கு | Altostratus | 6000 |
5. | இடைக் குவிப்பு | Altrocumulus | 5000 |
6. | அடுக்குக் குவிப்பு | Stratocumulus | 4000 |
7. | குவி முகில் | Cumulonimbus | 3000 |
8. | திரள் முகில் | Cumulus | 2000 |
9. | பாவடி முகில் | Stratus | 1000 |
10. | தாழ் முகில் | Nimbostratus | 0 |
கடல் மட்டத்தில் இருந்து எழும் நிலையில் உள்ள முகிலை எழிலி என்றனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலான பல சங்க இலக்கியங்களில் இச்சொல்லைக் காணலாம். தெய்வப்புலவர் திருவள்ளுவர்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின் (குறள் 17)
என்கிறார்.கடலில் இருந்து எழும் நிலையில் உருவாகும் முகிலை எழிலி எனச் சுருக்கமாகவும் அறிவியல் தன்மைக்கேற்பவும் அன்றே கூறியுள்ள சிறப்பு வேறு எங்கும் இல்லையே!
அறிவியல் தன்மைக்கேற்ப முகில் வகைகளுக்குப் பழந்தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்களை மேலே உள்ள வரிசைக்கேற்பப் பொருத்திக் காண்க:
கொண்மூ, கணம், செல், மை, கார், விண்டு, முதிரம், மஞ்சு, விசும்பு, எழிலி.
அறிவியல் மழையில் நனைந்தனர் நம் முன்னோர்!
அறியாமை இருளில் மூழ்கியுள்ளோம் நாம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment