வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 17, 2011
152 ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்தால் என்றும் புகழ்.
153 பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே.
154 செருக்கினை வெல்ல பொறுத்தலே வழி.
155 தீச்சொல் தாங்குவோர் துறவியினும் தூயர்.
156 தீச்சொல் பொறுத்தலே உண்ணா நோன்பினும் பெரிது.
157 அழுக்காறு இன்மையே ஒழுக்காறு ஆகும்.
158 அழுக்காறு இன்மைக்கு இணை ஏதும் இல்லை.
159 பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்பட்டால் அறன் ஆக்கம் வராது.
160 பொறாமையால் வரும் துன்பம் அறிந்தோர் அல்லவை செய்யார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 141-150
No comments:
Post a Comment