Thursday, October 20, 2011

Vaazhviyal unmaikal aayiram 431-430: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் : 421-430


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/10/2011



421 கடுஞ்சினத்தையும் விடத் தீது மகிழ்ச்சியில் ஏற்படும் செயல் மறதி.
422 வறுமை அறிவைக் கெடுக்கும்; மறதி புகழைக் கெடுக்கும்.
423 மறதி உடையார்க்கு நன்மைகள் வரா.
424 இடர் வரும் முன்பே காக்க மறந்தால் துன்பமே வரும்.
425 மறவாமை மறவாமல் அமைந்தால் அதற்கு இணை எதுவுமில்லை.
426 மறவாமல் எண்ணி ஆற்றினால் முடியாதது எதுவுமில்லை.
427 புகழுக்குரியனவற்றைச் செய்யாவிட்டால் எப்பொழுதும் நன்மை வரா.
428 மகிழும் பொழுது இகழ்ச்சியில் கெட்டாரை நினைக்கவும்.
429 எண்ணியதையே எண்ணு; எண்ணியவாறு எய்துவாய்.
430 யாராயினும் நடுவுநிலைமையுடன் முறைசெய்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 411 – 420)

No comments:

Post a Comment