வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 05/11/2011
562 நட்பே சிறந்த காப்பு
563 வளர்பிறை போல் வளரும் பண்பாளர் நட்பு.
564 தேய்பிறை போல் தேயும் பேதையர் நட்பு.
565 படிக்கப் படிக்க இன்பம் தருவது போன்றது பண்புடையாளர் தொடர்பு.
566 நகைத்து மகிழ்வதற்கு அல்ல நட்பு; இடித்துத் திருத்தவே நட்பு.
567 நட்பிற்குப் பழகுதல் வேண்டா; உணர்ச்சி போதும்.
568 முக நட்பு நட்பன்று; அகநட்பே நட்பு.
569 அழிவில் காத்து நல்வழி காட்டி உடன் துன்புறுவதே நட்பு.
570 உடை அவிழ்ந்தால் உடனுதவும் கை போல் துன்பம் வந்;தால் விரைந்து நீக்குவதே நட்பு.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 551-560)
No comments:
Post a Comment