வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 10/11/2011
592 படித்தும் பிறர் சொல்லியும் உணராப் பேதையைப் போல வேறு பேதையர் இல்லை.
593 பிரிந்தால் துன்பம் தராததால் பேதையர் நட்பு இனியதே.
594 இல்லாமையுள் மிக்க இல்லாமை அறிவு இல்லாமையே.
595 தன்னாலும் தொpயாமல் சொன்னாலும் புரியாமல் வாழாதே.
596 மாறுபாட்டால் துன்பம் வரும்; உடன்பாட்டால் மகிழ்ச்சி வரும்.
597 உடனிருந்து தீங்கு செய்பவனைப் பகை யாக்குக.
598 வினையாட்டாகக் கூடப் பகையை விரும்பாதே.
599 வில்லேருழவர் பகை கொண்டாலும் சொல்லேருழவர் பகை கொள்ளாதே.
600 பகையை நட்பாக ஆக்கும் பண்பாளனிடம் உலகம் அடங்கும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 581-590)
No comments:
Post a Comment