வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011
621 இவ்வுலகம் இருப்பது பண்புடையாளர்களால்தான்.
622 சிரித்து மகிழாதவர்க்கு உலகம் பகலிலும் இருட்டாய் இருக்கும்.
623 பிறர்க்குக் கொடுக்கவும் தான் பயன்படுத்தவும் இல்லாத செல்வம் வீணே.
624 உதவாதவர் செல்வம் ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தாற் போன்றது.
625 பிறர் குற்றத்திற்காகவும் தம் குற்றத்திற்காகவும் நாணுபவரே உலகத்திற்கு உறைவிடம்.
626 பிறர் செய்ய வெட்கப்படும் செயல்களை வெட்கமின்றிச் செய்தால் அறம் வெட்கப்பட்டு விலகும்,
627 குடியை உயர்த்துவோனுக்குத் தெய்வமே முந்தி உதவும்,
628 உழுவார் உலகத்தார்க்கு ஆணி,
629 வறுமையைவிடத் துன்பம் தருவது வறுமையே,
630 வறுமைத் துன்பத்தால் பல துன்பங்கள் தொடரும்,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 611-620)
No comments:
Post a Comment