வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011
21. ஊர்தோறும் சென்று இரந்து வாழாதே,
22. நூல்களுக்குத் தவறான பொருள் கூறாத அறிவுநுட்பம் கொள்க,
23. பசியினால் உயிர் போவதாயினும் பண்பில்லார் கையில் உணவு பெறாதே,
24. குழந்தைகளை நோயற்று வாழச் செய்க,
25. கற்றரிந்த அவைக்கு அஞ்சாத கல்வி பெறுக,
26. சிறந்தோரைச் சேரும் செல்வம், அவரை விட்டு நீங்காதிருப்பின் இனிது,
27. மானம் போனபின் உயிர் வாழாமை இனிது,
28. தானம் அழியாமல் அடங்கி வாழ்க,
29. குறை இல்லாப் பொருள் வளம் கொள்க,
30. குழந்தைகளின் தளர்நடை காண்பது இனிது,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20)
No comments:
Post a Comment