வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011
72. கயவரிடம் விலகி வாழ்க,
73. உயர்வு எண்ணி ஊக்கம் கொள்க,
74. யாரையும் எளியவர் என்று இகழ்ந்து பேசாமல் புகழ்பட வாழ்க,
75. பிறர் செய்த நன்றியின் பயனை நினைத்து வாழ்க,
76. நடுவர் மன்றத்தில் ஒருதலைச் சார்பாக உரைக்காதே,
77. யாருமறியாமல் அடைக்கலமாய் வந்த பொருளாயினும் கவர்ந்து கொள்ளாதே,
78. அடைக்கலமாய் வந்தவர் மேலும் துன்புறாமல் செய்க,
79. கடன் பெற்றாவது செய்ய வேண்டியவற்றைச் செய்க,
80. சிறப்பான கேள்வியறிவு இருப்பினும் ஆராய்ந்து சொல்லுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 61-70)
No comments:
Post a Comment