Friday, September 14, 2012

பயிர்அறிவியல் சொல் வளம் Thamizh vocabularies of Botany

பயிர்அறிவியல் சொல் வளம்

பயிர்அறிவியல் சொல் வளம்

புதிய அறிவியல் - வெள்ளிக்கிழமை, ஆவணி 29, 2043 12:08 இதிநே
Friday, September 14, 2012 12:08 IST

தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில் நம் முன்னைப் பழந்தமிழர் மிகச் சிறந்து இருந்திருக்க வேண்டும் அல்லவா? நாம் மீண்டும் அறிவியலில் சிறந்து விளங்கப் பழந்தமிழ் அறிவியல் வளங்களை அறிந்து புதியன படைக்க வேண்டும். இங்கே நாம் பயிர் அறிவியல் சொற்கள் சிலவற்றைப்பார்ப்போம்.

பயிர் வகைகளை வகைப்படுத்திப் பெயர்கள் சூட்டியுள்ளமையே மிகச் சிறந்த அறிவியல் வளத்திற்கு நாம் உரியவர்கள் என்பதை எடுத்து இயம்புகின்றது.

முன்னரே நாம் அரும்பு, மொட்டு, மலர், முகை, வீ முதலான பூ வகைகளையும் இலை, கீரை, ஓலை, மடல் முதலான இலை வகைகளையும் பார்த்தோம். இங்கே மேலும் சிலவற்றைப் பார்ப்போம். பூக்காம்பு சிறியதாக இருப்பின் காம்பு என்றும் பருத்தும் மென்மையாகவும் இருப்பின் தாள் அல்லது தண்டு என்றும் உள் துளையுள்ளது நாளம் என்றும் அழைக்கப் பெறும். பூவின்அகவிதழ் அல்லி என்றும் புறவிதழ் புல்லி என்றும் அழைக்கப் பெறும். இதழ் பெரியதாக இருப்பின் மடல் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு, நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வழி வழியாக அறிவியல் மரபைப் பின்பற்றியே உரிய பிரிவு வகைளுக்கேற்பவே சொல்லி வருகிறோம். இருப்பினும் இன்று மரபுகளை மறந்தும் அறியாமலும் தவறாகப் பேசும் வழக்கம் வந்துள்ளது. நாம் மரபார்ந்த தமிழ் அறிவியல் சொற்களை அறிய திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, உரிச்சொல் நிகண்டு முதலான பல்வேறு நிகண்டுகளைப் படித்துப் பார்க்கலாம். எடுத்துக்காட்டிற்கு ஒரு நிகண்டு நூற்பாவைப் பார்ப்போம்.


மணமலி பூவீ மலர்போ து அலராம்
துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம்
நலம்சேர் குலைதாறு வல்வரியாகும்
பலம்காய் கனியாம் பழம்
(உரிச்சொல் நிகண்டு பா. 94)

(மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும்.)

கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வந்த உரிச்சொல் நிகண்டிற்கு முன்னரே கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வந்த பிங்கல நிகண்டு இதே பொருண்மையில் சொல்லும் நூற்பாக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.


தாதும் அதழும்  தண்டும் தோடும்
ஏடும் பூவின் இதழ்ப் பெயர் என்ப.
அல்லி அகஇதழ்
புல்லி புற இதழ்
(பிங்கல நிகண்டு பா. 2813-2815)

இவ்வாறு நிகண்டுகள் தெரிவிக்கும் அறிவியல் உண்மைகளைக் கூறப் பல நூற் தொகுதிகள் வெளியிட வேண்டும். எனினும் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் அட்டவணைப்படுத்திப் பார்ப்போம். மொழி ஞாயிறு பாவாணர், புலவர்மணி இரா.இளங்குமரனார் முதலான அறிஞர்கள் பலரும் தமிழின் சொல் வளம் குறித்து முன்னரே கட்டுரைகள், நூல்கள் வழி விளக்கி உள்ளனர். இலக்கியங்கள் அடிப்படையிலும் வழக்குச் சொற்கள் அடிப்படையிலும் அவர்கள் தெரிவித்தவற்றையே நாம் காண்போம்.

வகைப்பாட்டின் பெயர்
வகையின் பெயர்
நிலையின் பெயர்
பிஞ்சு வகைபூவோடு கூடிய இளம்பிஞ்சுபூம்பிஞ்சு

இளங்காய்பிஞ்சு

மாவடு

பலாமூசு

எள்கவ்வை

தென்னை, பனைகுரும்பை

சிறு குரும்பைமுட்டுக் குரும்பை

முற்றாத தேங்காய்இளநீர்

இளம் பாக்குநுழாய்

இள நெல்கருக்காய்

வாழைகச்சல்

காய்நிலைகள்பழுத்தற்கேற்ற           முற்றிய காய்பழக்காய்

முற்றிய பனங்காய்கடுக்காய்

உரிய காலத்திற் காய்ப்பதுகாலக்காய் அல்லது பருவக்காய்

காலமல்லாக் காலத்திற் காய்ப்பதுவம்பக்காய

முற்றிய காய்கருக்காய்

குலைவகைகள்
அவரை துவரைமுதலியன
கொத்து


கொடிமுந்திரி போன்றது
குலை


வாழை
தாறு


கேழ்வரகு ,சோளம் முதலியன
கதிர்


நெல், தினை முதலியன
அலகு அல்லது குரல்  


வாழைத்தாற்றின் பகுதி
சீப்பு






கனி வகைகள்

தெங்கு, பூசணி முதலியன
காய்


முந்திரி நெல்லி முதலியன
கனி


மா, வாழை முதலியன
பழம்
பிற வகை
 முதிர்ந்தபின்  கனிவில்லாதது

       காய்


 முதிர்ந்தபின்  கடினமானது

நெற்று







செவ்வையாய்ப் பழுக்காத பழங்கள்

சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை


சொத்தைவகை

சொண்டு, சொத்தை, சொட்டை







தோல்வகை

தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை







விதைவகை

வித்து, விதை, மணி, முத்து, கொட்டை




காய் முதிர்ச்சி வகைகள்
மா, வாழை முதலியன
பழுத்தல்

சுரை பூசணி முதலியன
முற்றல்

தேங்காய், பீர்க்கு முதலியன
நெற்று

நெல், சோளம் முதலியவற்றின் கதிர் முதிர்ச்சி
விளைச்சல்

காய், கனி ஆகியவற்றின் கெடுதல் வகைகள்நுனியில் சுருங்கிய காய்சூம்பல்

சுருங்கிய பழம்சிவியல்

புழு, பூச்சி அரித்த காய் அல்லது கனிசொத்தை

சூட்டினால் பழுத்த பிஞ்சுவெம்பல்

குளுகுளுத்த பழம்அளியல்

குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்அழுகல்

பதராய்ப்போன மிளகாய்சொண்டு



சொத்தைத் தேங்காய் வகைகள்கோட்டான் உட்கார்ந்த தினால் கெட்ட காய்கோட்டான்காய் அல்லது கூகைக்காய்

தேரையமர்ந்ததினால் கெட்ட காய்தேரைக்காய், அல்லிக்காய்

ஒருவர் தமித்து இளநீர் குடித்த தென்னையிற் கெட்ட காய்ஒல்லிக்காய், அல்லிக்காய்

காயின் காம்பிதழ் வகைதேங்காய் பனங்காய் முதலியவற்றின் காம்பிதழ்இதக்கை

சோளத்தின் காம்பிதழ்சொங்கு



பழத்தோல் வகை
மிக மெல்லியது
தொலி

திண்ணமானது
தோல்

வன்மையானது
தோடு

மிக வன்மையானது
ஓடு

சுரையின் ஓடு
குடுக்கை

தேங்காய் நெற்றின் மேற்பகுதி
மட்டை

நெல் கம்பு முதலியவற்றின் மூடி
உமி

வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
கொம்மை

உள்ளீட்டு வகைநீர் போலிருப்பதுசாறு

கட்டிச் சோறுபோலிருப்பது.(கத்தரி முருங்கை கற்றாழை முதலியவற்றின் உள்ளீடு)சோறு

வாழை மா முதலியவற்றின் உள்ளீடுசதை

சீத்தா பலாசுளை

வித்துவகைகத்தரிவிதைபோலச் சிறியதுவிதை

வேப்பமுத்துப் போல் உருண்டு திரண்டதுமுத்து

புளியங்கொட்டைபோல் வயிரங்கொண்டதுகாழ்

மாங்கொட்டைபோற் பெரியதுகொட்டை

வேர்வகைஆழமாக இறங்குவது

வேர்

திரண்டிருப்பது

கிழங்கு

உருண்டு மென்மையாயிருப்பது

பூண்டு

குட்டையான கற்றையா யிருப்பது

கட்டை





வேரின் பிரிவுகள்தண்டின் தொடர்ச்சியாக ஆழமாய் இறங்குவது

ஆணிவேர்

ஆணிவேரின் கிளை

பக்கவேர்

கிழங்கு பூண்டு முதலியவற்றின் சன்னமான கிளைவேர்

சல்லிவேர்
அரிதாள்வகை
நெல், கேழ்வரகுஇருவி


சோளம், கரும்புகட்டை


தென்னை, பனைதூறு


வேம்பு, புளிமுருடு

அடிவகைநெல், கேழ்வரகுதாள்

கீரை, வாழைதண்டு

நெட்டி, மிளகாய்ச் செடிகோல்

குத்துச்செடி, புதர்தூறு

கம்பு, சோளம்தட்டு அல்லது தட்டை

கரும்புகழி

மூங்கில்கழை

புளி, வேம்புஅடி

கிளைப் பிரிவுகள்அடிமரத்தினின்று பிரியும் மாபெருங் கிளைகவை

கவையின் பிரிவுகொம்பு அல்லது கொப்பு

கொம்பின் பிரிவுகிளை

கிளையின் பிரிவுசினை

சினையின் பிரிவுபோத்து

போத்தின் பிரிவுகுச்சு

குச்சின் பிரிவுஇணுக்கு



காய்ந்த அடியுங் கிளையும்காய்ந்த குச்சுசுள்ளி

காய்ந்த சிறு கிளைவிறகு

காய்ந்த கழிவெங்கழி

காய்ந்தகொம்பும் கவையும் அடியும்கட்டை

இலைநரம்புகாம்பின் தொடர்ச்சியாக இலையின் நுனிவரை செல்வதுநரம்பு

நரம்பின் கிளைநாம்பு

பூ மடல் வகைவாழை மடல்பூ

தாழை, வாழை முதலியவற்றின் மடல்மடல்

தென்னை, பனை முதலியவற்றின் மடல்பாளை

அறிவியல் பாடங்கள் இவற்றின்அடிப்படையில் அமையும் வகையில் அறிவியல் ஆசிரியர்கள் நூல்களை எழுத வேண்டும். பாடத்திட்டங்களும் அதற்கேற்ப அமைய வேண்டும்.  இவை பிற மொழிப் பாடங்களிலும் இடம் பெற்று உயர்தனிச் செம்மொழியான தமிழ் அறிவியல் மொழி என்பதை உலகோர் புரிந்து கொள்ள வேண்டும்.

(தமிழ் அறிவியல் செய்திகளைத் தரணி எங்கும் பரப்புவோம்!)

No comments:

Post a Comment