(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125 – தொடர்ச்சி)
சட்டச்சொற்கள் விளக்கம் 126-130
126. Abode | உறைவிடம் இல்லம், இருப்பிடம், பணியிடம், தொழிலிடம் பிணையில் விடுவிப்பதற்கு நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அல்லது பிணையாளருக்கு நிலையான அல்லது இடைக்காலமாக வசிப்பிடம் அல்லது பணியிடம் /தொழிலிடம் இருந்தால் மட்டும் கருதிப் பார்க்கும் |
127. Abolish | நீக்கு ஒதுக்கு, ஒழி ஒழித்துக்கட்டு; நீக்கு நடைமுறையில் உள்ள ஒன்றை இல்லாதாக்குதல். நிறுவனங்கள்/அமைப்புகள் பழக்க வழக்கங்களை நிறுத்தி விடுதல். எ.கா.: தீண்டாமையை ஒழித்தல், உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல். |
128. Abolition | அழிப்பு நீக்கம், முடிப்பு, ஒழிப்பு, நிறுத்தம். ஒழித்துக்கட்டுகை; நீக்குதல், ஒழித்தல். நல்லொழுக்கங்களை நிலை நிறுத்துவதற்காக, மது, சூது, பொதுமாது முதலான தீய பழக்கங்களைச் சட்டத்தின்மூலம் இல்லாதாக்குதல். பிரிவு.1(1) ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை – ஒழிப்பு) சட்டம், 1970 பிரிவுரை 110(1அ) இந்திய யாப்பு |
129. Abolition of inams | இறையிலிகளை ஒழித்தல் தமிழ்நாடு சிறுவகை இறையிலிகள் (ஒழித்தலும் குடியானவமுறைக்கு மாற்றலும) சட்டம் 1963 [TamilNadu Minor Inams (Abolition and Conversion Into Ryotwari) Act, 1963/ Tamil Nadu Act 30 of 1963] இது குறித்துக் கூறுகிறது. |
130. Abolition of Post | பணியிட நீக்கம் பணியிடம்/பதவியிடம் ஒன்றை நீக்குதல். குறுங்காலத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடத்தை அக்கால வரம்பு முடிவதால் அல்லது சில ஆண்டுகளாகவே பணியிடம் ஒழிவிடமாக இருந்தால் அப்பணியிடம் தேவையில்லை எனக் கருதி அல்லது வேறு காரணங்களால் பணியிடத்தை இல்லாது ஆக்குதல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment