(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130 – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 131-135
131. Abolition of titles | பட்டங்களை ஒழித்தல் விருதுகளை ஒழித்தல் இந்திய அரசியல் யாப்பு 18 ஆம் இயல் பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)பற்றிக் கூறுகிறது. |
132. Abolition of untouchability | தீண்டாமை ஒழிப்பு தீண்டாமை என்பது மனிதருள் இனம், பிறப்பு, குலம் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை பாராட்டும் குமுகாயக் குற்றம். அரசியல் யாப்பு கூறு 17இல் தீண்டாமை ஒழிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த வடிவத்திலும் நடைமுறைப்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். |
133. Abolition of zamindari system | நிலக்கிழார் முறை ஒழிப்பு சமீன்தாரி முறை ஒழிப்பு என்பர். சமீன்தாரி தமிழ்ச்சொல்லல்ல. இந்தியத்துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், நிலக்கிழார் எனக் குறிப்பிடும் முறை வந்தது. இந்தியாவின் தலைமை ஆளுநராக 1786-1793 ஆம் ஆண்டுகளில் இருந்த காரன்வாலிசு( Lord Cornwallis) நிலக்கிழார் முறையை அறிமுகப்படுத்தினார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நிலக்கிழார் முறை சடடத்தின்படி ஒழிக்கப்பட்டது. |
134. Aboriginal | தொல் பழங்குடி தொன்முதுவர் தொன்முதிய Latin ab origine என்னும் இலத்தீன் தொடரின் பொருள் தொடக்கத்திலிருந்து. தொடக்கக்காலத்திலிருந்து உள்ள குடிமக்களை/மொழியைக் குறிக்கிறது. தொல்பழங்காலத்தில் அறியப்பட்டதைக் குறிப்பதால், தொல்முதுமொழியையும் குறிக்கும். எ.கா. தமிழ் ஒரு தொல்முதுமொழி |
135. Aborignes | பழங்குடியினர் நடைமுறையில் ஆத்திரேலியப் பழங்குடியினரைக் குறிக்கின்றது. எனினும் எல்லாத் தொல்குடியையும் குறிக்கும் பொதுச்சொல்லாகவே கருத வேண்டும். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment