(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175 – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 176-180
176. Absconding person | தலைமறைவாயிருப்பவர் காண்க: Absconder — தலைமறைவானவர் |
177. absconding to avoid summons | அழைப்பாணை தவிர்ப்புத் தலைமறைவு அழைப்பாணையைத் தவிர்க்க தலைமறைவாகுதல் எனப் பொருள். இ.த.ச. பிரிவு 172, அழைப்பாணை அல்லது பிற வழக்கு நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருத்தலைப்பற்றிக் கூறுகிறது. |
178. Absence | வராமை வாராதிருத்தல் ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றின் இருப்பு குறித்த தகவலில் இன்மை என்னும் பொருளில் வரும். எ.கா. absence of record – ஆவணமின்மை, பதிவுரு இன்மை எதிர்பார்க்கப்படும் அல்லது வேண்டப்படும் அல்லது பார்க்கப்படும் ஒன்று இல்லாத நிலை அல்லது இருப்பில்லாத நிலை. வழக்கமாக வரக்கூடிய அல்லது எதிர்பார்க்கக்கூடிய இடத்தில் அல்லது உறைவிடத்தில் இல்லாமல் இருப்பது. வேலையில் விளக்க முடியாத இல்லா நிலை பொருள் வேண்டப்படும் அளவு இல்லாத பற்றாக்குறையையும் குறிக்கும். இல்லாதிருத்தல் (இருப்புப்பாதை சொத்து(சட்ட எதிர் உடைமை) சட்டம் 1966, பிரிவு 3. அ./S. 3(a) RP(UP)A, 1966) இருத்தலின்மை இருப்புப் பாதை என்பது இருப்பூர்தித்துறையைக் குறிக்கிறது. ஆசரின்மை எனச் சிலர் குறிக்கின்றனர். Hāzir என்னும் உருதுச்சொல்லின் தமிழ்வடிவமே ஆசர் என்பது. இசுலாமியர் ஆட்சியில் இச்சொல் செல்வாக்கு பெற்றிருந்தது. இப்பொழுது மறைந்து வருகிறது. எனவே, இச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா. |
179. Absence from duty | வேலைக்கு வராமை விடுப்பு இசைவு எதுவும் பெறாமல் பணிக்குத் தொடர்ந்து வராதிருத்தல். ஒருவேளை எதிர்பாரா நலக்குறைவு, நேர்ச்சிக்கு ஆளாதல், தவிர்க்க இயலாச் சூழல் போன்ற காரங்களால் பணிக்கு வரஇயலாமையைக் கூடிய விரைவில் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவிக்காமல் அலுவலுக்கு வராதிருத்தல் சட்ட நடவடிக்கைக்குட்பட்ட வராமையே ஆகும். இசைவின்றிப் பணிக்கு வராமை வேலைநிறுத்தமாகவும் கருதப்படும். |
180. Absence of any specific provision to the contrary, in the | மாறாகக், குறிப்பிட்டவகைக்கூறு இல்லாத நிலையில் கு.ந.தொ.பிரிவு 5: காப்புரை: இத்தொகுப்பில் உள்ள எதுவும் குறிப்பிட்டவகைக்கூறு இல்லாத நிலையில் நடைமுறையில் உள்ள எந்தச்சிறப்பு விதியை அல்லது உள்ளூர் விதியை அல்லது வழங்கப்பட்டுள்ள எந்தச் சிறப்பு அதிகார வரம்பையோ அதிகாரத்தையோ அல்லது வழங்கப்பட்டுள்ள எந்த நடைமுறையையோ பாதிக்காது.( Section 5 in The Code Of Criminal Procedure, 1973) |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment