(சட்டச் சொற்கள் விளக்கம் 186-190: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  191-195

191. absentee          வராதவர்,

இல்லாதவர்  

வசிப்பிடம் அல்லது பணியிடம் முதலான வழக்கமாகக் காணப்படும் இடத்தில் இல்லாதவர்.            
காணாமல் போன ஒருவர் அல்லது எங்கே இருக்கிறார் என அறியப்படாதவர் வருகை தராதவராகக் கருதப்படுகிறார். சமூகம் (Presence) அளிக்காதவர் எனக் குறிப்பிட்டு வந்தனர்.
192. Absentee land lord  வராத /செல்லா நிலக்கிழார்;  

நிலத்தில் தங்கா நிலக்கிழார், வருகைதரா நிலக்கிழார்,   செல்லாக் கிழவன்  

குத்தகைக்கு விடப்பட்ட அசையாத் சொத்தில் இருந்து விலகி இருத்தல் அல்லது சொத்து தொடர்பான எச்சிக்கலையும் நேரடியாகத் தீர்ப்பதற்கு வராதிருத்தல்.
193. Absentee partyவராத தரப்பு  

வழக்கு நடைபெறும் பொழுது வழக்கு நாளன்று கேட்பிற்கு வராத தரப்பார்.
194. Absentee statementவராதோர் பட்டியல்  

வராதவர் விவரம் குறித்த அறிக்கை. எடுத்துக்காட்டாகச் சம்பளம் கோரும்பொழுது  யார் யார் – தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, இசைவின்றி வராமை முதலிய – எக்காரணத்தினால் வரவில்லை என்பது குறித்த விளக்க அறிக்கை.
195. Absenteeismவராமையம்

இராமையம்  

பணி நேரத்தில் தக்கக் காரணமின்றி வராமை குறித்த ஆராய்ச்சி.  
ஒரு குறிப்பிட்ட காலத்தில் தக்கக் காரணமின்றித் தனியர் அல்லது உழைக்கும் மக்கள் குழாம் பணிக்குச் செல்லாது பணியிலிருந்து விலகியிருக்கும் நாள்களின் நிலை.

பாலினம், பதவி நிலை, அகவை நிலை போன்ற ஏதேனும் ஒரு பிரிவினர் பணிக்கு வராதநிலைமை.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்