(சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 236-240
236. Absolutely | முற்றிலும் தனித்த நிறைவாக ஐயத்திற்கிடமின்றி ஆம்.(உடன்பாட்டைக் குறிக்கையில் ஆம், சரி என்ற பொருளில் வரும்.) |
237. Absolutely unavoidable | முற்றிலும் தவிர்க்க இயலாதது செய்தலோ செய்யாமையோ ஒதுக்கித் தள்ள வழியின்றி இன்றியமையாது நிகழ்த்தும் சூழலே முற்றிலும் தவிர்க்க இயலாதது ஆகிறது. |
238. Absolve | விடுவி நீக்கு பழியினின்று நீக்கு குற்றச்சாட்டினின்று விடுவி கடமை அல்லது குற்றத்தின் விளைவுகளிலிருந்து விடுவிப்பது. நடுவர் மன்றம் குற்றவாளிகளை அவர்களின் குற்றங்களிலிருந்து விடுவிப்பது. கடன், கடமை, கடப்பாடு அல்லது பொறுப்பிலிருந்து விடுவித்தல். |
239. absolve from liability | கடப்பாட்டிலிருந்து விடுவி மனச்சான்றைப் பிணைக்கும் கடப்பாட்டிலிருந்து அல்லது சட்டத்திற்குக் கட்டுப்படாமல் அல்லது பாவம் செய்ததன் விளைவுகளிலிருந்து விடுபடுவதை உணர்த்துகிறது. |
240. Absolved(of charges) | (குற்றச்சாட்டுகளிலிருந்து) விடுவிக்கப்படுதல் ஒருவர் அவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து அல்லது குற்றங்களிலிருந்து விடுவிக்கப்படுதல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment