Monday, June 9, 2014

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82


thamizh06
50. கோள்நிலை திரிந்து கோடை நீடினும்manimegalai_attai01
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை,      பதிகம் 24-25

51.  மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் –  சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம்  97-98


52. தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் – சீத்தலைச்சாத்தனார்,
மணிமேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை, 139

53. தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினை(ப்) – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை,சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை, 109-110

54. சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்,சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை,  உலக அறவி புக்க காதை, 62

55. தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை
மேவர் தென் தமிழ் மெய்ப் பொருள் ஆதலின்  – திருத்தக்கத் தேவர், சீவகசிந்தாமணி, 1328chinthamani_attai01

56. தமிழ் தழிய சாயலவர் தங்கு மலர்த் தூ நீர் – திருத்தக்கத் தேவர், சீவகசிந்தாமணி, 2026

57. இலை புறம் கண்ட கண்ணி இன் தமிழ் இயற்கை இன்பம்
நிலை பெற நெறியின் துய்த்தார் நிகர் தமக்கு இலாத நீரார் – திருத்தக்கத் தேவர், சீவகசிந்தாமணி, 2063


58. அளப்பருஞ் சிறப்பின் ஆயிரம் ஆகிய
தலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும் -  கொங்குவேளிர், பெருங்கதை, நரவாண காண்டம்,   புறத்தொடுங்கியது, அடி 10-11

[பெருங்கதை,1. உஞ்சைக்காண்டம், 46. உழைச்சன விலாவணை பகுதி, அடி 294 இல் அம்பொன் வள்ளத் தமிழ்துபொதி யடிசில் என வரும். வள்ளத்து அமிழ்து என்பது சேர்ந்து தமிழ்என்பதுபோல் வந்துள்ளது.
இதுபோல், பெருங்கதை,1. உஞ்சைக்காண்டம் 54. வயந்தகன் அகன்றது பகுதி அடி 27இல் தமனிய வள்ளத் தமிழ்த மயிலாள் என வரும் இடமும் அமிழ்து என்பதைக்  குறிக்கும்.]
59. முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்; -கம்பர், இராமாயணம், 8.

60. நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ. -கம்பர், இராமாயணம், 10

61.தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன் – கம்பர், இராமாயணம், 379

62. எழுவு தண் தமிழ் யாழினும்,
இனிய சொல் கிளியே! – கம்பர், இராமாயணம், 2162


63.நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே – கம்பர், இராமாயணம்,2375.

64.  தழல் புரை சுடர்க் கடவுள்
தந்த தமிழ் தந்தான். – கம்பர், இராமாயணம்,2762.

65. என்றும் உள தனெ் தமிழ் இயம்பி
இசை கொண்டான். – கம்பர், இராமாயணம்,  2768.
66. தண் தமிழ்த் தனெ்றல் என்னும்
கோள் அராத் தவழும் சாரல்- கம்பர், இராமாயணம்,3647.

67. தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே!- கம்பர், இராமாயணம்,3838.

68.  அகன்
தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்பர், இராமாயணம்,4582.

69. தனெ் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன்ramayananam_attai01
தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல் – கம்பர், இராமாயணம்,4583.

70. வண் தமிழ் உடைத்
தென் திசைச் சென்றுளார் – கம்பர், இராமாயணம்,4628.

71. அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ்நிகர் நறவமும் தனித்தண் தேறலும் – கம்பர், இராமாயணம்,4663.

72. செல்வர் என்றும் வடக்கு கலை தெற்கு தமிழ்
சொல் வரம்பினர் என்றும் சுளி பட(க்) – கம்பர், இராமாயணம்,4745.

73. வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார். – கம்பர், இராமாயணம், 4751.

74. என்ற  தென் தமிழ்நாட்டினை எங்கணும்
சென்று நாடித் திரிந்து திருந்தினார் – கம்பர், இராமாயணம்,4753.

75. சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு
தண் தமிழ்ப் பசும்  தென்றல் – கம்பர், இராமாயணம்,5151.

76.  தென் தமிழ் உரைத்தோன் முன்னாத்
தீது தீர் முனிவர் யாரும் – கம்பர், இராமாயணம்,5308.

77. தண்தமிழ் நிரப்பும்
புலவர் சொல் துறை புரிந்தவும் – கம்பர், இராமாயணம், 7624.

78. என்ன மீட்டு உமிழ் தமிழ்முனி
ஒத்தது, அவ் இலங்கை – கம்பர், இராமாயணம்,8675.

79. தமிழ்முனி இயம்பிற்று எல்லாம்
அச்சு எனக் கேட்டாய் அன்றே? – கம்பர், இராமாயணம்,9078.

80.  தமிழ் நெறி வழக்கம் அன்ன
தனிச்சிலை வழக்கிற் சாய்ந்தார் – கம்பர், இராமாயணம், 9750

81. ‘இது, தமிழ் முனிவன் வைகும்
இயல்தரு குன்றம்; – கம்பர், இராமாயணம்,10270.

82.  மாறு இலாத் தமிழ்முனி வனத்தை நண்ணினான் – கம்பர், இராமாயணம்,10375.

(தொடரும்)
a_019_3தரவு :  தமிழ்ச்சிமிழ், இலக்குவனார் திருவள்ளுவன்

 

No comments:

Post a Comment