(சட்டச்சொற்கள் விளக்கம் 21-25 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச்சொற்கள் விளக்கம் 26 -30
26. a priori | முற்கோள் முன்னறி, புலனுக்கு முன் எழு, புலச் சார்பற்ற, முந்தையதிலிருந்து. நிகழ்வைப்பற்றிய அறிதலுக்குத் தேவையின்றி நிகழ்விற்கு முன் எழுப்பப்படும் வாதம். பொதுக் கோட்பாடுகளிலிருந்து ஊகிக்கப்படும் காரிய அறிவு. இலத்தீன் தொடர் |
a quo | எதிலிருந்து எந் நீதிமன்றத்திலிருந்து இவ்வழக்கு இந்த நீதிமன்றத்திற்கு வந்துள்ளது என்பதைக் குறிக்கின்றன. மேல்முறையீட்டில் கீழே உள்ள நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, வழக்கு நிகழ்ந்த முதல் நீதி மன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றம். இலத்தீன் தொடர் |
A share of profits | ஆதாயப் பங்கு ஆதாயப் பகிர்வு, ஆதாயப் பாகீடு ஊழியர்களுக்குத் தரப்படும் வழக்கமான ஊதியம், மீதூதியம் ஆகியவற்றுடன் நிறுவன ஆதாய அடிப்படையில் ஊக்கத்திட்டங்களுடன் நிறுவனப் பங்குகளையும் பங்கிட்டு வழங்குதல். இவ்வாறு பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவது ஊழியர்கள்-முதலாளி அல்லது நிறுவனத்தின் இடை யே பிணக்குகளைக் குறைக்கவும் ஒத்துழைப்பைப் பெருக்கவும் உதவுகிறது. |
A subsequent offence | தொடர் குற்றம் பின்புரிந்த குற்றம் அடுத்து செய்த குற்றம் ஏற்கெனவே ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர் இரண்டாவதாகச் செய்யும் தொடர் குற்றம். |
A suit or proceeding between the parties to a marriage | திருமணம் தொடர்பான தரப்பாரிடையே வழக்கு அல்லது செயன்மை குடும்ப நல நீதிமன்றச் சட்டம், 1984 பிரிவு 7 (1) (ஆ).(இ) இது குறித்துக் கூறுகிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment