(சட்டச் சொற்கள் விளக்கம் 211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 216-220

216. absolute monarchமுழு முடியாட்சியர்  

முழுமை முடியாட்சி என்பது மன்னர் அல்லது ஆட்சித் தலைவர் தம் சொந்த உரிமை அல்லது அதிகாரத்தில் ஆட்சி செய்யும் அமைப்பாகும்.
217. absolute monopolyமுழு முற்றுரிமை  

தனி வல்லாண்மை
முழு வணிக உரிமை
முழு நிறைவுத் தனியுரிமை
முழுத் தனி வல்லாண்மை  

தொழிலில் அல்லது வணிகத்தில் அல்லது துறையில் விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர் முழு உரிமையுடன் ஆதிக்கம் செலுத்தும் சந்தைக்கட்டமைப்பாகும்.
218. absolute occupancy rightமுழு இருப்புநிலை உரிமை  

இது நிலையான குத்தகையாளர்,  பாதுகாக்கப்பட்ட குத்தகையாளர், துணைக் குத்தகையாளர் அல்லது பிற குத்தகையாளர் எனக் குறிக்கிறது.
219. Absolute or strict liabilityகடுங் கடப்பாடு  

குற்றமனம் அல்லது கவனமின்மை இல்லாமலேயே ஒருவரைக் கடுமையான பொறுப்புக்கு ஆளாக்கும் நிலை
220. absolute orderமுற்றான கட்டளை   முழுமையான நிறைவான ஆணையைக் குறிப்பிடுகிறது. காண்க: absolute decree

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்