(சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 221-225
221. absolute owner | முழுச் சொந்தக்காரன் ; தனி உரிமையாளர் முழுச்சொத்துரிமையர் முழு உரிமையாளர். தளவாடங்கள், கட்டடங்கள், நிலம், ஊர்திகள் போன்ற சொத்துகளின் ஒரே உரிமையாளர். வில்லங்கத்திற்கோ பிணைப்பொறுப்பிற்கோ உட்பட்டிருந்த போதிலும் சொத்தின் முழு உரிமையையும் மாற்றி வழங்கும் தகுதியுடையவர். |
222. Absolute owners of all property . | அனைத்துச் சொத்து முழு உரிமையாளர்கள் ஒன்றின்மீதான அனைத்து உரிமைகளுக்கும் உரியவரே முழு உரிமையாளர். உடைமை, துய்ப்பு, தீர்வு முதலியவற்றில் எந்தவொரு தடையுமின்றி அனைத்துச் சொத்துகளுக்கும் உரியவராக இருத்தல். |
223. Absolute ownership | முழு உரிமையுடைமை காண்க: absolute owner |
224. absolute power | முழு அதிகாரம் ஒன்றைச் செயல்படுத்துவதற்கான/ ஒன்றைப் பற்றி முடிவெடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருத்தல். |
225. Absolute priority | முழு முன்னுரிமை தனி முன்னுரிமை படிநிலையில் முற்பட்டிருக்கும் நிலை. ஒன்றைப் பெறுவது, கொடுப்பது, ஏற்பது, விற்பது, வாங்குவது, தெரிவு செய்வது, என்பன போன்ற நேர்வில் முந்தி முதலுரிமை பெறுவது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment