(சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

371. accidentalதற்செயலான

எதிர்பாராத;
தற்செயலாக  

தற்செயலான நேர்வில் ஏற்படும் குற்றத்தைக் குற்றமனச் செயலாகப் பார்ப்பதில்லை.
372. accidental consequencesஎதிர்பாரா விளைவுகள்  

எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நேரும் தற்செயலான விளைவுகளைக் குறிப்பது.
373. accidental deathதற்செயலான மரணம்;

நேர்ச்சி  மரணம்  

எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நிகழும் ஊர்தி மோதல், தீப்பற்றல், வண்டி அல்லது படகு கவிழல் போன்ற நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பைக் குறிப்பது.
374. accidental insuranceநேர்ச்சிக் காப்புறுதி;

நேர்ச்சிக் காப்பீடு  

நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உடற் காயம், மனநலப் பாதிப்பு போன்றவற்றிற்கான காப்புறுதி நிறுவனத்தில் இருந்து பெறப்படும் இழப்பீட்டுத் தொகை.
375. Accidental omissionதற்செயல் விடுபாடு  

தற்செயல் விடுபாடு என்பது திட்டமிடப்படாத அல்லது வேண்டுமென்றே விடப்படாத விடுபாட்டைக் குறிக்கிறது. (மகாராசா ஏற்றுமதி மற்றும் மற்றொருவர் எதிர் ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு(Apparels Exports Promotion Council-1986)
376. accidentalia negotii   தற்செயல் சொல்லாடல்  

வணிக நிகழ்வுகளில் தன்னார்வ, விருப்பமான ஒப்பந்தப் பொருண்மைக்கு இன்றியமையாததாக இல்லாத சொல்லாடடலைக் (பேச்சுவார்த்தையைக்) குறிக்கிறது.

ஒப்பந்த விதிமுறைகளில் இதனுடன் சேர்த்து, இன்றியமையாத சொல்லாடல், இயற்கையான சொல்லாடல் என மேலும் இரண்டு வகைகள் உள்ளன.
377. Accidentallyதற்செயலாக (பெயரடை/adjective)  

எதிர்பாராமல் நேருவது. சான்றாக வெளிச்சத்திற்காகப் பற்ற வைக்கப்படும் மெழுகு கவனக்குறைவால் படுக்கை அல்லது உடை அல்லது வேறு எதிலும் தீப்பற்றும் நேர்வு நிகழ்தல்.
378. Acciteசான்று காட்டு

சான்றுக்கு அழைத்தல்  

சான்று கூற அதிகார பூர்வமாக அழைத்தல்
379. Acclaimபாராட்டு,

ஆர்ப்பரி   எ.கா. சமூக நீதிக்கான தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாராட்டு பெற்றார்.
380. Acclaimatiseபழகிக்கொள்

பழக்கு  

புதிய சூழலுக்கு, புதிய காலநிலைக்கு, புதிய இடத்திற்கு, புதிய முறைக்கு, புதிய பணிக்குப் பழகிக்கொள்வதைக் குறிக்கிறது.

(தொடரும்)