(சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 221-225

221. absolute owner  முழுச்‌ சொந்தக்காரன் ;  

தனி உரிமையாளர்  
முழுச்‌சொத்துரிமையர்
முழு உரிமையாளர்.  

தளவாடங்கள், கட்டடங்கள், நிலம், ஊர்திகள் போன்ற சொத்துகளின் ஒரே உரிமையாளர்.  
வில்லங்கத்திற்கோ பிணைப்பொறுப்பிற்கோ உட்பட்டிருந்த போதிலும் சொத்தின் முழு உரிமையையும் மாற்றி வழங்கும் தகுதியுடையவர்.
222. Absolute owners of all property .அனைத்துச் சொத்து முழு உரிமையாளர்கள்  

ஒன்றின்மீதான அனைத்து உரிமைகளுக்கும் உரியவரே முழு உரிமையாளர்.

உடைமை, துய்ப்பு, தீர்வு முதலியவற்றில் எந்தவொரு தடையுமின்றி அனைத்துச் சொத்துகளுக்கும் உரியவராக இருத்தல்.
223. Absolute ownershipமுழு உரிமையுடைமை  

காண்க: absolute owner
224. absolute powerமுழு அதிகாரம்  

ஒன்றைச் செயல்படுத்துவதற்கான/ ஒன்றைப் பற்றி முடிவெடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருத்தல்.
225. Absolute priorityமுழு முன்னுரிமை  
தனி முன்னுரிமை  
படிநிலையில் முற்பட்டிருக்கும் நிலை.  

ஒன்றைப் பெறுவது, கொடுப்பது, ஏற்பது, விற்பது, வாங்குவது, தெரிவு செய்வது, என்பன போன்ற நேர்வில் முந்தி முதலுரிமை பெறுவது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்