Showing posts with label literature. Show all posts
Showing posts with label literature. Show all posts
Sunday, February 3, 2013
Friday, February 1, 2013
Sunday, January 27, 2013
இனிதே இலக்கியம் - 4 : முத்தொழில் ஆற்றுநரே தலைவர் - Inidhea Ilakkiyam 4
இனிதே இலக்கியம்! 4
முத்தொழில் ஆற்றுநரே
தலைவர்
உலகம்
யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை
பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகி
லா விளை யாட்டுடை யார், அவர்
தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே!
கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில்
எழுதிய தற்சிறப்புப்பாயிரம்.
உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு
படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து
காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய நேரத்தில்
நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள் தலைவர்! அவரிடமே நாங்கள்
அடைக்கலமாகிறோம்!
என்கிறார்
கம்பர்.
குறிப்பிட்ட கடவுள் எனக் குறிக்காமையால் கடவுள்
நம்பிக்கை உள்ளவர் யாவருமே தத்தம் கடவுளை வணங்கும் வகையில் பொதுவாக அமைந்த பாடல்களுள் இதுவும் ஒன்று.
உலகம் முதலான பொதுவான சொற்களால் முதல் பாடலைத் தொடங்குதல் தமிழ் மரபு. அதற்கிணங்கக் கம்பர் உலகம் என்னும் சொல்லுடன் தம்
படைப்பைத் தொடங்கி உள்ளார்.
உலகம் என்றோ உலகம் முழுமை என்றோ கூறாமல்
அனைத்து உலகங்களையும் எனக் கம்பர் குறிப்பிட்டுள்ளது,
இப்புவி
உலகம் தவிர வேறு பிற உலகங்கள் உள்ளன என்னும் இன்றைய அறிவியல் கருத்தைப்
பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதன் தொடர்ச்சியை உணர்த்துகிறது.
(8ஆம் வகுப்பு மனப்பாடப்பகுதி)
-
இலக்குவனார் திருவள்ளுவன்
Sunday, December 18, 2011
Know our scholars 28: அறிவோம் அறிஞர்களை!- 28. அறிஞர் அ.நாராயணசாமி
அறிஞர் அ.நாராயணசாமி ~ அறிவோம் அறிஞர்களை!
பதிவு செய்த நாள் : 18/12/2011
28. பெரும்புலவர் தலைமணி பின்னத்தூர் கலைமணி
அறிஞர் அ.நாராயணசாமி ஐயர் (1862-1914).
28. தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க, அதில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள்களுக்கெல்லாம் ஓர் அகராதியை உருவாக்கிய இப்பெரும்புலவர் எழுதிய நூல்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவை.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
Friday, November 25, 2011
Vazhviyal unmaikal aayiram 748-757 iniyavai naarpathu : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 748-757: இனியவை நாற்பது
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011
92. ஆள்வோர், ஒருவரிடம் மட்டும் பற்று வைக்காமல் பல்லுயிர்கள் மீதும் அன்பு வைக்க,
93. பொறாமை கொண்டு பேசாதே,
94. சினம் நீக்கிச் செப்பமுடையவராய் வாழ்க,
95. கண்ட பொருளை யெல்லாம் விரும்பிக் கவர்ந்து கொள்ளாமல் மறந்து விடுக,
96. இளமையும் மூப்பின் பகுதி என உணர்க,
97. விலை மகளிரை நஞ்சென எண்ணுக,
98. பிச்சை கேட்பவன் கோபம் கொள்ளாதே,
99. குடிசையில் இருந்தாலும் துன்பம் கொள்ளாதே,
100. பேராசை கொண்டு அறவழி நீங்கும் மனத்தளர்ச்சி கொள்ளாதே,
101. பழுது இல்லா நல்ல நூற்களைக் கற்று வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 81-90)
முந்தைய பதிவு
Vaazhviyal unmaikal aayiram 738-747: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 738-747: இனியவை நாற்பது
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் –
இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011
81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
Thursday, November 24, 2011
Vaazhviyal unmaikal aayiram 728-737 : inaiyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 728-737 : இனியவை நாற்பது
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011
81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
Wednesday, November 23, 2011
Vaazhviyal unmaikal aayiram 718-727: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 718-727: – இனியவை நாற்பது
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011
72. கயவரிடம் விலகி வாழ்க,
73. உயர்வு எண்ணி ஊக்கம் கொள்க,
74. யாரையும் எளியவர் என்று இகழ்ந்து பேசாமல் புகழ்பட வாழ்க,
75. பிறர் செய்த நன்றியின் பயனை நினைத்து வாழ்க,
76. நடுவர் மன்றத்தில் ஒருதலைச் சார்பாக உரைக்காதே,
77. யாருமறியாமல் அடைக்கலமாய் வந்த பொருளாயினும் கவர்ந்து கொள்ளாதே,
78. அடைக்கலமாய் வந்தவர் மேலும் துன்புறாமல் செய்க,
79. கடன் பெற்றாவது செய்ய வேண்டியவற்றைச் செய்க,
80. சிறப்பான கேள்வியறிவு இருப்பினும் ஆராய்ந்து சொல்லுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 61-70)
Tuesday, November 22, 2011
Vaazhviyal unmaikal aayiram 708-717 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 708-717: இனியவை நாற்பது
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/11/2011
62. நிலையற்ற அறிவுடைய நிறைவற்ற மனிதரை விட்டு நீங்குக,
63. ஒருபொருளை வேண்டி வந்தவரின் விருப்பத்தை அழிக்காதே,
64. மதிக்கா இடத்தில் வாழாத மன எழுச்சி கொள்க,
65. உள்ளவற்றை மறைக்காமல் கொடுக்கும் அன்பு கொள்க,
66. தானம் கொடுக்கும் தகையாண்மை கொள்க,
67. தன்மானத்திற்கு இழுக்கு நேராமல் வாழ்க,
68. குற்றத்தைப் பொpது படுத்தாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்க,
69. செய்ய முடியாதவனைச் செய்யுமாறு வற்புறுத்தாதே,
70. நிலையற்றது வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்க,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 51-60)
Monday, November 21, 2011
vaazhviyal unmaikal aayiram 698-707: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 698-707 : இனியவை நாற்பது
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011
52. ஒருவர் பக்கம் சாயாத நடுவுநிலைமை கொள்க,
53. பெரும் பயன் கிடைத்தாலும் விரும்பியவாறெல்லாம் செய்யாமல் தம் இயல்பில்மாறுபடாமல் வாழ்க,
54. சோலை வளர்த்தலும் குளம் தோண்டலும் செய்க,
55. அறவோர்க்குக் கொடுப்பீர்,
56. சூதாடிகளுடன் சேராதே,
57. வெற்றி அடைய வேண்டி சினம் அடையாதே,
58. தன்னால் முடியக் கூடிய வரையில் செயல் புரிக,
59. தம்மிடம் இல்லாத பொருளுக்கு ஏங்கித் துன்புறாமல் கிடைத்தது கொண்டு முடிந்ததைச் செய்க,
60. ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளை அடக்குக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 41-50)
Sunday, November 20, 2011
Vaazhviyal unmaikal aayiram 678-697: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 678-697: இனியவை நாற்பது
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011
42. பெற்றோரைக் காலையில் வணங்கி எழுக,
43. நண்பரைப் பற்றிப் புறஞ்சொல் கூறாது வாழ்க,
44. பணிவான வாழ்க்கை இனிது,
45. குறைவில்லாத செல்வம் பெற்றுத் தக்கவர்க்குக் கொடுப்பீர்,
46. வஞ்சகருடன் சேராமல் விலகுக,
47. புலவர்களின் சொற்களைப் போற்றுக,
48. பிறர் பொருளைப் பறிக்;காமல் வாழ்க,
49. அறம் புரிந்து அல்லவை நீக்குக,
50. மறந்தும், சிறப்பில்லா அறிவிலிகளை அறிந்து சேராமல் வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 31-40)
Saturday, November 19, 2011
Vaazhviyal unmaikal aayriam 668-677: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 668- 677: இனியவை நாற்பது 31-40
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011
31. குழந்தைகளின் மழலைச் சொல் கேட்டல் இனிது,
32. துன்பம் வந்து வருத்தம் அடையும் பொழுதும் மனத்தால் அஞ்சாதே,
33. பிறன் மனைவியை நோக்காப் பெருமை கொள்க,
34. பயிருக்கு மழை இனிது,
35. கற்றவர் முன் தாம் கற்றதைக் கூறுதல் இனிது,
36. பண்பில் சிறந்;தோருடன் சேருக,
37. எள்ளளவாயினும் அடுத்தவரிடம் இரவாமல் தான் கொடுக்க,
38. நண்பர்க்கு நல்லன செய்க,
39. நம்மோடு சேராதவரைச் சேர்த்துக் கொள்ளுக,
40. அறம்கூறும் முதியோர் வாழும் ஊர் இனிது.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 21-30)
Friday, November 18, 2011
vaazhviyal unmaikal aayiram 658-667: iniyavai naarpathu 21-30: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 658– 667: இனியவை நாற்பது 21-30
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011
21. ஊர்தோறும் சென்று இரந்து வாழாதே,
22. நூல்களுக்குத் தவறான பொருள் கூறாத அறிவுநுட்பம் கொள்க,
23. பசியினால் உயிர் போவதாயினும் பண்பில்லார் கையில் உணவு பெறாதே,
24. குழந்தைகளை நோயற்று வாழச் செய்க,
25. கற்றரிந்த அவைக்கு அஞ்சாத கல்வி பெறுக,
26. சிறந்தோரைச் சேரும் செல்வம், அவரை விட்டு நீங்காதிருப்பின் இனிது,
27. மானம் போனபின் உயிர் வாழாமை இனிது,
28. தானம் அழியாமல் அடங்கி வாழ்க,
29. குறை இல்லாப் பொருள் வளம் கொள்க,
30. குழந்தைகளின் தளர்நடை காண்பது இனிது,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20)
know our scholars: H.G.Krishna pillai: அறிவோம் அறிஞர்களை - அறிஞர் கிருட்டிண பிள்ளை
அறிஞர் கிருட்டிண பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011
“இரட்சணிய யாத்திரிகம்” என்னும் இப்பெருந்தகை வழங்கிய பெரு நூலைச் சுவைத்துத் திறம் உணர்ந்த அறிஞர் உலகம் ‘கிறித்தவக் கம்பர்’ என இப்பெருமகனாரைப் பாராட்டிப் போற்றியது.
or
Thursday, November 17, 2011
Vaazhviyal unmaikal aayiram 648-657: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 648-657 : இனியவை நாற்பது 11-20
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011
12. பிறர்மீது குறை கூறாது வாழ்க,
13. இயன்ற வழியில் எல்லாம்; அறம் செய்க,
14. நன்னெறியாளாpன் பயன்சொல் கேட்க,
15. கல்வியில் சிறந்தவரைக் காப்பாய்க் கொள்க,
16. தந்தையே ஆனாலும் தீயவழியில் செல்வோர் வழி செல்லற்க,
17. நல்லோர் வாயிலான கேள்வியறிவைத் தெளிவாய்க் கேட்க,
18. குற்றமில்லாத செய்கையுடன் அனைவருக்கும் இரங்கி அன்புடையராய் இருப்பீர்,
19. கடன் பெற்று உண்டு வாழாமை இனிது,
20. மனத்தில் நற்குணம் இல்லாதவரை அஞ்சி நீங்கி விடுக,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 1-10)
Wednesday, November 16, 2011
Vaazhviyal unmaikal aayiram - Iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 638 -647 : இனியவை நாற்பது 1-10
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011
2. கற்றவர் அவையில் கற்றதைச் சொல்க,
3. சான்றோருடன் சேருக,
4. இல்லற வாழ்க்கை இனிது
5. சொல்லியதை மறுக்காமல் செய்யும் பிள்ளைகள் உடைமை இனிது,
6. சென்றவிடமெல்லாம் நட்பு கொள்க,
7. ஊன் தின்று ஊனைப் பெருக்காதே,
8. மானமுடன் வாழ்க,
9. கொல்லாமை கொள்க,
10. நடுநிலை தவறிச் செயல்படுவோருக்குச் சிறப்பு செய்யாதே.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 631-637)
Know our scholars- Puuvaalur Thiayarasar : பூவாளூர் தியாராசச் செட்டியார் ~ அறிவோம் அறிஞர்களை!
பூவாளூர் தியாராசச் செட்டியார் ~
அறிவோம் அறிஞர்களை!
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மனத்திற்கினிய மாணவராய்த் திகழ்ந்த இப்பெருமகனார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழைப் பேணிக் காத்த பெரியார்களுள் என்றும் நினைத்தக்கத்தவர்.
முந்தைய பதிவு
Tuesday, November 15, 2011
know our sholars - Vallalaar Ramalinga adigal
அருளாளர் இராமலிங்கர் ~
அறிவோம் அறிஞர்களை!
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 15/11/2011
உருக்கமும், பக்திப் பெருக்கமும் மிளிர, உள்ளத்தைக் கனிவிக்கும் தித்திப்புத் தமிழில்… இப்பெருமான் உருவாக்கி அருளிய பாடல்கள் பக்தியுணர்வை மட்டுமின்றி பைந்தமிழுணர்வையும் செழிக்கச் செய்தன.
Monday, November 14, 2011
vaazhviyal unmaikal aayiram 631-637: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 631-637
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011
632 இருப்பதை மறைக்காதவரிடம் கேட்பதும் கொடையே,
633 மறைக்காதவரிடமும் கேளாமை கோடிபெறும்,
634 முயன்று பெறுவது கூழாயினும் இனிமையே,
635 அச்சத்தின் அடிப்படையிலேயே கீழ் மக்கள் ஒழுக்கம் அமையும்,
636 துன்பம் வரும் பொழுது தன்னையே விற்பவர் கயவர்,
637 சான்றோர் சொல்லிய அளவில்பயன்தருவர் கீழோர் வருத்தினால்தான் பயன்படுவர்
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 621-630)
Vaazhviyal unmaikal aayiram 621-630 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 621-630
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011
621 இவ்வுலகம் இருப்பது பண்புடையாளர்களால்தான்.
622 சிரித்து மகிழாதவர்க்கு உலகம் பகலிலும் இருட்டாய் இருக்கும்.
623 பிறர்க்குக் கொடுக்கவும் தான் பயன்படுத்தவும் இல்லாத செல்வம் வீணே.
624 உதவாதவர் செல்வம் ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தாற் போன்றது.
625 பிறர் குற்றத்திற்காகவும் தம் குற்றத்திற்காகவும் நாணுபவரே உலகத்திற்கு உறைவிடம்.
626 பிறர் செய்ய வெட்கப்படும் செயல்களை வெட்கமின்றிச் செய்தால் அறம் வெட்கப்பட்டு விலகும்,
627 குடியை உயர்த்துவோனுக்குத் தெய்வமே முந்தி உதவும்,
628 உழுவார் உலகத்தார்க்கு ஆணி,
629 வறுமையைவிடத் துன்பம் தருவது வறுமையே,
630 வறுமைத் துன்பத்தால் பல துன்பங்கள் தொடரும்,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 611-620)
Subscribe to:
Posts (Atom)

