Sunday, June 23, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 401-410: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 391-400 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

401. Accord priorityஇணக்க முன்னுரிமை  

ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் அல்லது இசைவளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படுவது.
402. Accordanceஇணக்கம்  

மற்றவரின் கருத்திற்கு, முன்மொழிவிற்கு, விருப்பத்திற்கு, வேண்டுகோளுக்கு உடன்படுதல்.  

விதி, ஒப்பந்தம், அறிவுறுத்தம் அல்லது ஆணைக்கிணங்க ஒத்துபோதல்.
403. Accordance with the dictates of conscience, Inமனச்சான்றின் கட்டளைக்கிணங்க  

சரியானவையாக நம்பும் கொள்கைகள்.  

மனச்சான்றின் கட்டளையைப் பின்பற்றின்,  ஒருவரின் நடத்தை அல்லது நோக்கங்களில் எது சரி அல்லது தவறு என்னும் உள்ளுணர்வு சரியான செயலை நோக்கி ஒருவரை உந்துகிறது.  

ஒரு செயல் நல்லதா கெட்டதா என ஐயமின்றி நம்புவது உறுதியான மனச்சான்று.  
நன்மை,தீமை என்னும் தெரிவுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று அறிய இயலாமல்  இருப்பது ஐய மனச்சான்று.   பாவமிருக்கும் இடத்தில் எந்தப் பாவத்தையும் காணாதது தளர் மனச்சான்று.
404. Accordance with, Inஇணங்கு
  விதி அல்லது வேண்டுகைக்கு உடன்படும் வகையில் அல்லது பின்பற்றும் வகையில்.  

சான்று: உங்கள் வேண்டுகோளுக்கிணங்கத் தீர்ப்பின்படியை இணைத்து அனுப்புகிறேன்.

வாதியின் வேண்டுகோளுக்கிணங்க வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.  

எதிர் வழக்காடியின் வேண்டுகைக்கிணங்க வழக்கு இரு வாரம் ஒத்தி வைக்கப்படுகிறது.
405. Accordance with, the rules Inவிதிகளுக்கிணங்க  

குறிப்பிட்ட விதி அல்லது முறைமைக்கு ஏற்பப் பின்பற்றுவதை அல்லது செயற்படுவதைக் குறிக்கிறது.
406. Accordedஅளிக்கப்பட்ட

மூலதனச் சிக்கல்கள் (கட்டுப்பாட்டுச்சட்டம், 1947, பிரிவு 3.(6).()./ (S. 3(6)(a) CICA, 1947)
407. According asஒத்திசைய  
~ போல
இணங்க தக்கபடி  

ஒரு விதியையோ தீர்ப்பையோ மேற்கோளையோ சுட்டிக்காட்டி அதற்கேற்ப எனக் குறிப்பது.
408. according toஅதன்படி ஏற்ப,

பொருந்த,

இணங்க  

ஒன்றைக் குறிப்பிட்டு அதன்படிச் செயற்படுவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது.
409. according to law      சட்டத்திற்கு இணங்க,

சட்டப்படி,
சட்ட முறைப்படி  
ஆட்சி எல்லையுடைய எந்தவோர் அரசாங்க அதிகாரத்தின் சட்டங்கள், கட்டளைகள், ஒழுங்குமுறைகளுக்கிணங்க ஒழுகுவதே சட்டத்திற்கிணங்கச் செயல்படுவதாகும்.   கு.ந.தொ. பிரிவு 306
410. according to rulesவிதிகளுக்கு ஏற்ப  

விதிகளின்படி,

விதிமுறைகளுக்கிணங்க

விதிகளுக்கிணங்க  

விதிகளுக்கிணங்கச் செயற்படுவதை அல்லது செயற்படாமையைக் குறிப்பிடுவது.

(தொடரும்)

Thursday, June 20, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 391-400: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

391. Accompanied by a copy of a record, it shall beஆவணப்படி யுடன் இஃது இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  

வாதுரையில் அல்லது எதிர் வாதுரையில் உரிய ஆவணத்தின் படி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
392. Accompanyஉடன்செல்  

பின்தொடர்

இணை சேர்  

இணைந்து செயலாற்று

கூட்டாளியாக அல்லது துணையாகச் செல்லல் அல்லது இசைத்தல் அல்லது இயங்குதல்.
393. Accompany deafnessசெவிட்டுத் தன்மை உடனிணைந்த  

செவித்திறன் குறைபாடு
உணர்வு நரம்பு காதுகேளாமை, கடத்துவகை காதுகேளாமை, கலப்புவகை காதுகேளாமை என மூவகைப்படும்.

காது கேளாமைக்கும் வாய் பேச இயலாமைக்கும் தொடர்பு உண்டு. சில நேர்வுகளில் செவித்திறன் இருந்தும் வாய் பேச இயலாமல் இருக்கலாம். செவித்திறன் குறைபாடுடன் கூடிய வாய் பேச இயலாமையை இங்கே குறிப்பிடுகிறது.
394. Accompanying letterஉடனிணைப்பு மடல்  

மற்றோர் ஆவணத்துடன் அல்லது அஞ்சலுடன் இணைத்துத் தரப்படும் மடல்.
395. Accomplice    உடன்குற்றவாளி  

உடந்தையன்

குற்றத்துணையாளி;

குற்ற உடந்தையாளர்  

குற்றம் புரிபவருக்கு அல்லது புரிபவர்களுக்கு அக்குற்றச்செயலில் உதவியாக அல்லது உடந்தையாக இருப்பவர்.   இ.த.ச.,பிரிவு 133
396. Accomplice witness  உடந்தைச்சான்றர்  

அறிந்தோ தானாக முன்வந்தோ மற்றவர் அல்லது மற்றவர்கள் செய்யும் சட்டப்படியான குற்றச் செயலில் அவர்களுடன் ஒத்துழைத்து உதவுபவர் அல்லது உடந்தையாக இருப்பவர் அளிக்கும் சான்றே உடந்தையர் சான்று. [இந்தியச் சான்று சட்டம் 1982, (The Indian Evidence Act, 1872) பிரிவு 133]  

குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு எதிரான  தக்க சான்றுரைஞராக உடந்தைச்சான்றர் இருப்பார்.  

witness என்பது சான்றையும் குறிக்கும், சான்று கூறுபவரையும் குறிக்கும்.
397. Accomplish  நிறைவேற்று

செயலாற்று  

ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பவர்
398. Accomplished factமெய்யறி நிகழ்ச்சி

ஐயமிலி நிகழ்ச்சி  

முன்னரே உண்மை என மெய்ப்பிக்கப்பட்ட நிகழ்ச்சி.  

ஐயத்திற்கிடமில்லாத மெய்யென்று அறியப்பட்ட நிகழ்ச்சி.
399. Accord      இசைவளி  

ஒப்பந்தமளி,

பொருத்தம்,
இணக்கம்
ஒத்திசைவு;
உடன்பாடு

உடன்படிக்கை
ஒப்பந்தம்
   (குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 6 அ/6A of the Citizenship Act 1955)
400. accord and satisfactionஒத்திசைவும் உளநிறைவும்    
ஒப்பந்தத் தரப்பார் இருவரிடையே, நடைமுறைப் பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக மாற்றுச் செயலாக்கத்தினை ஏற்பதற்கான உளநிறைவான உடன்பாடு.  

மற்றவருக்கு எதிரான உரிமையை அல்லது பாத்தியதையை ஏற்பதற்காக ஒன்றைக் கொடுக்கவும் ஏற்கவுமான உளநிறைவான உடன்பாடு என்றும் சொல்லலாம்.    
உளநிறைவு/மன நிறைவு என்பதைப் பொந்திகை என்றும் குறிப்பர்.   திருப்தி பிற மொழித்தழுவல் சொல்.

(தொடரும்)

Tuesday, June 18, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

381. accommodateஇணக்குவி

இடங் கொடு  
382. accommodation  இடவசதி

உறையுள்;

தங்கியிருத்தல்  
கடனுதவி; பணஉதவி   ஏற்பமைவு, தகவமைப்பு, இசைவாக்கம்   குடியிருப்பு, அறை, வாழ்விடம், பணியிடம், தொழிலிடம் போன்றவற்றிற்குத் தேவையான வாய்ப்பு நலனை வழங்குவது.  

அவசரக்காலத்தில், கடனாக அல்லது பணமாக அல்லது வேறு வகையில் தேவைப்படுவதை அல்லது விரும்புவதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு.
383. accommodation acceptorகடனுதவி ஏற்பவர்;

பணஉதவி ஏற்பவர்.  

கடனைச் செலுத்துவதற்குக் கைம்மாறு கருதாமல் பொறுப்பளிக்கும் சட்ட பூர்வ ஏற்பாகும்.
384. accommodation billகடனுதவி உண்டியல்;

உதவியுண்டியல்  

ஒருவரால் மற்றவர்க்குப்பணம் திரட்டுவதை  அல்லது  கடன் பெறுவதைப் பொருட்படுத்தாமல் வரையப்படும் அல்லது ஏற்கப்படும் அல்லது மேற்குறிப்பிடப்படும்  ஓர் உண்டி,ஒரு வரைவு,  அல்லது குறிப்பு.

உண்டியலைப் பணமாற்றுச்சீட்டு என்றும் குறிக்கின்றனர். (ப.மா.ச. பிரிவு 59)
385. accommodation controllerஇடக் கட்டுப்பாட்டாளர்

இடக் கட்டுப்பாட்டு அலுவலர்  

இடவசதியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக அமர்த்தப்படுபவர் இடக் கட்டுப்பாட்டு அலுவலர். (குடியரசுத் தலைவர் சட்டம் 2/1965, பிரிவு 2)  

இட வசதி என்பது வீட்டு வசதியையும் குறிக்கும். நில வசதியையும் குறிக்கும்.
386. accommodation facilityஇட வசதி  

தன்னக வசதி கொண்ட சிறு குடில்,

ஏந்தூர்தி(caravan)- வாய்ப்பு நலன்கள் கொண்ட அறைவசதி  முதலியன கொண்டதாகும்.  

இடவசதி என்பது, பொதுமக்கள் பணம் செலுத்தி வசதி வாய்ப்புகளை அடையக்கூடிய கட்டடம், வளாகம், பகுதி முதலியன ஆகும்.   அறைகள், படுக்கைகள் முதலியவற்றை விருந்தோம்பல் வசதியுடன் தருவதும் இடவசதியே.
387. accommodation partyஏற்புத் தரப்பு  

சட்டமுறை ஆவணத்திலோ வணிகத் தாளிலோ உடன்படிக்கையிலோ மற்றொரு தரப்பாருக்குப் பொறுப்பாக இருக்கும் வகையில் கையொப்பமிடுபவர் ஏற்புத் தரப்பு/ஏற்புத் தரப்பினர் ஆகும்.
388. Accommodation, houseவீட்டு வசதி அளித்தல்  

பணியாற்றுநருக்கு அவர் தனித்தோ குடும்பத்தினருடனோ தங்கி வாழ்வதற்கு மாத வாடகைக்கு இடவசதி அளித்தலாகும்.  

குடியிருப்புப் பகுதியில் வீட்டை  அல்லது மனையை விலைக்கு ஒதுக்கித் தருவதும் இடவசதியே.
389. Accommodation, subject to the availability ofவாய்ப்பிற்கு உட்பட்ட இடவசதி  

கிடைப்புத் தன்மைக்கேற்ப தரப்படும் இட வசதி.
390. Accommodativeஒத்துப்போகும் இயல்புடைய  

ஒருவரின் விருப்பம் அல்லது தேவைகளுடன் பொருந்தி இருப்பது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, June 16, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

371. accidentalதற்செயலான

எதிர்பாராத;
தற்செயலாக  

தற்செயலான நேர்வில் ஏற்படும் குற்றத்தைக் குற்றமனச் செயலாகப் பார்ப்பதில்லை.
372. accidental consequencesஎதிர்பாரா விளைவுகள்  

எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நேரும் தற்செயலான விளைவுகளைக் குறிப்பது.
373. accidental deathதற்செயலான மரணம்;

நேர்ச்சி  மரணம்  

எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நிகழும் ஊர்தி மோதல், தீப்பற்றல், வண்டி அல்லது படகு கவிழல் போன்ற நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பைக் குறிப்பது.
374. accidental insuranceநேர்ச்சிக் காப்புறுதி;

நேர்ச்சிக் காப்பீடு  

நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உடற் காயம், மனநலப் பாதிப்பு போன்றவற்றிற்கான காப்புறுதி நிறுவனத்தில் இருந்து பெறப்படும் இழப்பீட்டுத் தொகை.
375. Accidental omissionதற்செயல் விடுபாடு  

தற்செயல் விடுபாடு என்பது திட்டமிடப்படாத அல்லது வேண்டுமென்றே விடப்படாத விடுபாட்டைக் குறிக்கிறது. (மகாராசா ஏற்றுமதி மற்றும் மற்றொருவர் எதிர் ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு(Apparels Exports Promotion Council-1986)
376. accidentalia negotii   தற்செயல் சொல்லாடல்  

வணிக நிகழ்வுகளில் தன்னார்வ, விருப்பமான ஒப்பந்தப் பொருண்மைக்கு இன்றியமையாததாக இல்லாத சொல்லாடடலைக் (பேச்சுவார்த்தையைக்) குறிக்கிறது.

ஒப்பந்த விதிமுறைகளில் இதனுடன் சேர்த்து, இன்றியமையாத சொல்லாடல், இயற்கையான சொல்லாடல் என மேலும் இரண்டு வகைகள் உள்ளன.
377. Accidentallyதற்செயலாக (பெயரடை/adjective)  

எதிர்பாராமல் நேருவது. சான்றாக வெளிச்சத்திற்காகப் பற்ற வைக்கப்படும் மெழுகு கவனக்குறைவால் படுக்கை அல்லது உடை அல்லது வேறு எதிலும் தீப்பற்றும் நேர்வு நிகழ்தல்.
378. Acciteசான்று காட்டு

சான்றுக்கு அழைத்தல்  

சான்று கூற அதிகார பூர்வமாக அழைத்தல்
379. Acclaimபாராட்டு,

ஆர்ப்பரி   எ.கா. சமூக நீதிக்கான தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாராட்டு பெற்றார்.
380. Acclaimatiseபழகிக்கொள்

பழக்கு  

புதிய சூழலுக்கு, புதிய காலநிலைக்கு, புதிய இடத்திற்கு, புதிய முறைக்கு, புதிய பணிக்குப் பழகிக்கொள்வதைக் குறிக்கிறது.

(தொடரும்)

Followers

Blog Archive