வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/10/2011
412 வேலை செய்வோனை வேற்றாளாக எண்ணாதே.
413 பணிசெய்வோன் குறையையும் செயலையும் நாள்தோறும் ஆராய்க.
414 வறுமையிலும் சூழ இருப்பவரே சுற்றத்தார்.
415 அன்பு நீங்காச் சுற்றம் ஆக்கம் பலவும் தரும்.
416 சுற்றத்தோடு பழகாதவன் செல்வம், கரையில்லாக் குளத்து நீராகும்.
417 செல்வத்தின் பயன் சுற்றம் சூழ வாழ்தல்.
418 கொடையும் இனிய சொல்லும் சுற்றத்தைப் பெருக்கும்.
419 மறைக்காமல் உண்ணும் காக்கையைப் போன்றவர்க்கே ஆக்கம் உரியது.
420 அனைவரையும் பொதுவாய்ப் பார்க்காமல் அவரவர் சிறப்பறிந்து மதிக்கவும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 401 – 410)
No comments:
Post a Comment