இலக்கியங்களில் இடம் பெறும் தமிழ்
பக்க ஆக்கியில் சிரீலிபி எழுத்துருவில் கணியச்சிடப்பட்ட பக்கங்கள் எடுப்பு ஆவண அமை ப்பில் மாற்றும் பொழுது எழுத்துப்பிழைகள் (எ.கா. : இலக்குவனார் திருவள்ளுவன் என்னும் பெயரே தவறாக மாறிஉள்ளது.) வடிவமைப்புக் குலைவுகள் (எ.கா. : தலைப்பில் குறிக்கப்பெறும் பாக்களுக்கான கட்டம் கீழிறங்கி வந்துள்ளது), மூலத் தமிழ் எண்கள் இப்போதைய வழக்கு எண்கள் வடிவம் பெறுதல் அல்லது ஒரு பகுதி மட்டும் இடம் பெறுதல் என்பன போன்ற சில தவறுகள் நேர்ந்துள்ளன. எனினும் இடத்திற்கேற்ப உரியவாறு அறிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன். தமிழ் என்னும் சொல்லாட்சி மிகவும் பிற்பட்ட கா லத்தில் வந்ததாகச் சிலர் தவறாக எழுதும் போக்கும் அதைப் பலர் மேற்கோளாகக் கையாளும் போக்கும் பெருகி வருவதால், 10 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பெற்ற தமிழ் பற்றிய விவரங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். இவற்றிலும் கூடுதலாகவே தமிழ் என்னும் சொல் இடம் பெற்றுள்ள விவரங்களை நூல்களைப்படிக்கும் பொழுது அறிகின்றேன். தமிழோசை நாளிதழின் களஞ்சியம் பக்கத்தில தமிழ்ச்சிமிழ்த் தொகுப்பில் இருந்து சில பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. செம்மொழி மாநாட்டு மலரில் தமிழ் பற்றிய அடைமொழிகள் வேறு சிலவும் சேர்க்கப்பெற்று இடம் பெற்றுள்ளன. மற்றொரு இதழில் இவ்வாறு இத்தளத்தில் இடம் பெறுவதைவிட மேலும் கூடுதலான குறிப்புகள் இடம் பெறும் வகையில் விவரங்கள் அளித்துள்ளேன். இவ்விவரங்கள் யாவும் முற்றானவை அல்ல என்பதற்காக இவற்றைக் குறிப்பிடுகின்றேன். காலங்கள் தோறும் உள்ள இலக்கியங்களில் இருந்து அனைத்து விவரங்களையும் தொகுக்கும் பணியில் ஈடுபடும் எண்ணம் உள்ளது. நேரம் வாய்க்கும் பொழுது முழுமையான விவரங்களைத் தொகுப்பேன். எனினும் இன்றைய நிலையில் இதுபோன்ற தொகுப்பு வேறில்லை. ஆதலின் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் அறிந்து பரப்புங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
பகிர்வு சிறப்பு... நன்றி...
ReplyDelete