(சட்டச் சொற்கள் விளக்கம் 896-900, தொடர்ச்சி)

901. assistance, employee   / employee assistanceபணியாளர் உதவி
பணியாளர்க்கு உதவுதல்
 
தொழிலாளர்களின் பணிமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் முதலாளிகளால் தரப்படும் உதவி.
 
தொழிலாளர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் தொழிலாளர் ஆணையத்தால் வழங்கப்படும் நிதியுதவி முதலான உதவிகள்.

தொழிலாளர்களுக்கு ஆற்ற வேண்டிய உதவிகளைச் செய்யாவிட்டால் அதுவும் குற்றமாகும்.
902. assistance, Enlist/ Enlist  assistanceஉதவி பெறு
ஆதரவு பெறு
 
படையில் சேர்த்திடு
படையில் இடம்பெறு
பட்டியலில் இணைத்துக்கொள்
சேர்
இணைவுறு
ஆள்சேர்
படைக்கு வீரர் திரட்டு
துணையாகப்பெறு
எய்தப்பெறு
பயன்படுத்து
ஈடுபடுத்து
புகுந்தீடுபடு
 
பணி வளங்களைப் பெறுதல், பிறரின் உதவியைத் துணையாகப் பெறுதல் முதலான பொருள்கள் இருப்பினும் குற்றச் செயல்களில் பிறரது துணையைப் பெறுதல் அல்லது பிறரது துணையைப் பெற்றுக் குற்றச் செயல்களில் ஈடுபடல் என நாம் சட்டத்துறையில் அல்லது நீதித்துறையில் குறிப்பிடலாம்.
903. Assistance,  external /external assistanceபுற உதவி
 
வெளி உதவி
 
வெளிப்புற உதவி
 
வெளியிலிருந்து வருகிற உதவி
 
செயல் சார்ந்த உதவி
 
குற்றச் செயலில் ஈடுபட்டவர்/ஈடுபடுகிறவர் புற நிலையில் இருந்து பெற்ற / பெறும் உதவி
904. assistance, federal/federal assistanceகூட்டரசு உதவி
 
கூட்டரசின் உதவி
கூட்டமைப்பு உதவி
 
கூட்டமைப்பின் உதவி
கூட்டாண்மையின் உதவி
 
செயற்பாடுகளில் கூட்டரசின் அல்லது கூட்டமைப்பின் உதவியைப் பெறுவதைக் குறிக்கிறது புற உதவி
 
வெளி உதவி
 
வெளிப்புற உதவி
 
வெளியிலிருந்து வருகிற உதவி
 
செயல் சார்ந்த உதவி
 
குற்றச் செயலில் ஈடுபட்டவர் புற நிலையில் இருந்து பெறும் உதவி.
905. assistance , Financial / Financial assistance நிதியுதவி
 
நிதிசார் உதவி
 
வருவாய் உதவி
 
சட்டத்தில் நிதி உதவி என்பது ஒரு நிறுவனம் அதன் சொந்தப் பங்குகள் அல்லது அதன் வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு வழங்கப்படும் உதவியைக் குறிக்கிறது. பல அதிகார வரம்புகளில் அத்தகைய உதவி சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 
தனியருக்கு அல்லது பலருக்கு அல்லது பொதுமக்களுக்கு அல்லது அமைப்பிற்கு அல்லது நிறுவனத்திற்கு அரசு தரும் நிதியுதவி.
 
வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபடப் பெறும்/பெற்ற நிதியுதவியைக் குறிக்கிறது.

(தொடரும்)