Showing posts with label வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Show all posts
Showing posts with label வாழ்வியல் உண்மைகள் ஆயிரம். Show all posts

Saturday, November 5, 2011

Vaazhviyal unmaikal aayiram 561-570 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 561-570

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 05/11/2011


561     தலைவரின் கண்ணில் நீர் வருமாறு வரும் இறப்பு பெருமை உடையது.
562        நட்பே சிறந்த காப்பு
563    வளர்பிறை போல் வளரும் பண்பாளர் நட்பு.
564    தேய்பிறை போல் தேயும் பேதையர் நட்பு.
565    படிக்கப் படிக்க இன்பம் தருவது போன்றது  பண்புடையாளர் தொடர்பு.
566    நகைத்து மகிழ்வதற்கு அல்ல நட்பு; இடித்துத் திருத்தவே நட்பு.
567    நட்பிற்குப் பழகுதல் வேண்டா; உணர்ச்சி போதும்.
568    முக நட்பு நட்பன்று; அகநட்பே நட்பு.
569    அழிவில் காத்து நல்வழி காட்டி உடன் துன்புறுவதே நட்பு.
570    உடை அவிழ்ந்தால் உடனுதவும் கை போல் துன்பம் வந்;தால்  விரைந்து நீக்குவதே நட்பு.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 551-560)


Friday, November 4, 2011

Vaazhviyal unmaikal aayiram 551-560: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 551 - 560

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/11/2011



551    பொருள் ஆகிய விளக்கு எண்ணிய நாட்டில் பகை இருள் போக்கும்.
552    தீமையல்லாத வழியில் வந்த பொருளே அறத்தையும் இன்பத்தையும் தரும்.
553    அருளோடும் அன்போடும் வராத பொருள் ஈட்டத்தை நீக்குக.
554    அன்பின் மகளாகிய அருள், பொருள் என்னும் செவிலித் தாயாலேயே வளருவாள்.
555    செல்வம் சேர்க்க.
556    நல்வழியில் பெற்ற பொருள் அறமும் இன்பமும் தரும்.
557    பகைவனுக்கு விலைபோகாத் தொன்று தொட்டச் சிறப்பு உடையதுவே படை.
558    எமனே  வந்தாலும் எதிர்ப்பதே படை.
559    முயல் வேட்டையின் வெற்றியைவிட யானை வேட்டையின் தோல்வியே சிறந்தது.
560     பகைவர்க்குக் குறைபாடு வந்த பொழுது உதவுவதே சிறந்த பேராண்மை.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 541-550)
 

Thursday, November 3, 2011

Vaazhviyal unmaikal aayiram 541-550 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்541 - 550

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/11/2011


541    அவைக்கு அஞ்சிச் சொல்லத் தொpயாதவர் இருந்தும் இல்லாதவராவார்.
542    நல்விளையுள், தக்கார், தாழ்விலாச் செல்வர் சேர்ந்ததே நாடு.
543    மிகுந்த பசி, நீங்கா நோய், அழிக்கும் பகை அற்றதே நாடு.
544    கேடு அறியாத, கேடு வந்தாலும் வளம் குன்றாத நாடே சிறந்த நாடு.
545    நோய் இன்மை, செல்வம், (அறிவு, பொருள்) ஆக்கம், இன்பம், பாதுகாப்பு உடையதே நாடு.
546    தன்னிறைவான நாடே நாடு.
547    எல்லா வளம் இருப்பினும் நல்லாட்சி இல்லையேல் ஒன்றும் இல்லை.
548    வினைச் சிறப்பு இல்லையேல் பாதுகாப்பால் பயன் இல்லை.
549    பொருள் இல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருளைப் போல் வேறு பொருள் இல்லை.
550    இல்லாரை எள்ளுவர்; செல்வரைச் சிறப்பிப்பர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 531-540)


Wednesday, November 2, 2011

Vaazhviyal unmaikal aayiram 531-540 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 531-540

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 02/11/2011



531    அறிந்தவரிடம் அறிந்தவராய் நடந்து கொள்க.
532    அறியாதவரிடம் அறியாதவராய் நடந்து கொள்க.
533    உணரும் அறிவுடையோர் முன் பேசுக.
534    நல்லவையில் பேசுவோர் புல்லவையில் பேசற்க.
535    கற்றவர் முன் தெளிவாகப் பேசுநரே கற்றவர் ஆவார்.
536    போர்க்களத்திற்கு அஞ்சாதவரும் அவைக்களத்திற்கு அஞ்சுவர்.
537    கற்றதைக் கூறிக் கல்லாததை அறிக.
538    அஞ்சுவோருக்கு வாளால் என்ன பயன்? அவை அஞ்சுவோருக்குக் கற்ற நூலால் என்ன பயன்?
539    சொல்லும் திறனற்றோர் படித்துப் பயனில்லை.
540    நல்லார் அவை அஞ்சுபவர் கல்லாதவரிலும் கடையராவார்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 521-530)
 
 

Tuesday, November 1, 2011

Vaazhviyal unmaikal aayiram 521-530 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 521-530

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 01/11/2011


521    செயலும் பகையும் குறையாய் முடிப்பது பாதி அணைத்த தீ போல்அழிவு தரும்.
522    பொருள், கருவி, காலம், செயல், இடம் முதலியவற்றை ஆராய்ந்து செய்க.
523    செயலின் முடிவு, வரும் இடையூறு, கிடைக்கும் பயன் பார்த்துச் செய்க.
524    செய்யும் முறை அறிந்தும் பட்டறிவு உள்ளவரின் துணை கொண்டும் செயல் முடிக்க.
525    யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயல் மூலம் மற்றெhரு செயலை முடிக்கவும்.
526    வேண்டியவர்க்கு வேண்டியன செய்யும் முன் வேண்டாதவரை வேண்டியவராக்கு.
527    தாழ்வினைத் தடுக்க உயர்ந்n;தாரைத் துணைக்கொள்.
528    கடமை, காலம், இடம் உணர்ந்து சொல்பவனே தூதன்.
529    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுதலே சொல்வன்மை.
530    பேசும் அவையறியாதவர் சொல்லும் வகையறியாதவர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 511-520)



Saturday, October 29, 2011

vaazhviyal unmaikal aayiram 511-520: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 511-520


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 29/10/2011


511 சொல்லுதல் எளிது; சொல்லியதைச் செய்தல் அரிது.
512 சிறந்தோர் செயல் உயர்ந்தோராலும் போற்றப்படும்.
513 திண்ணிய எண்ணம் எண்ணியதைத் தரும்.
514 உருவத்தைப் பார்த்து இகழாதே,அச்சாணி இல்லையேல் தேரோட்டம் இல்லை.
515 கலங்காமல் தயங்காமல் கருமம் செய்க.
516 இறுதியில் இன்பம் தருவனவற்றைத் துன்பம் வந்தாலும் செய்க.
517 வினைத்திட்பம் உடையோரையே உலகம் விரும்பும்.
518 துணிவுடன் செயல்படு; துணிந்தபின் தயங்காதே.
519 செயலுக்கேற்றவாறு காலந்தாழ்ந்தோ விரைந்தோ செய்க.
520 முடியக் கூடிய வழியில் எல்லாம் செயல் ஆற்றுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 501- 510)

Friday, October 28, 2011

vaazhviyal unmaikal aayiram 501-510 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 501-510

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/10/2011



501 தவறென உணர்ந்தால் மீண்டும் செய்யாதே.
502 தாயின் பசியைப் போக்குவதற்குக் கூடப்; பழிப்பன செய்யாதே.
503 பழிச்செயல் தரும் செல்வத்தைவிடச் சான்றோர் வறுமையே சிறந்தது.
504 கடிந்தன செய்தால் முடிந்தாலும் துன்பம் தரும்.
505 பிறர் அழக் கொண்ட பொருள் நாம்; அழப் போகும்.
506 அறவழி வந்தன இழந்தாலும் மீண்டும் கிடைக்கும்.
507 குறுக்கு வழியில் வரும் பொருள் பச்சை மண்பாத்திரத்தில் வைக்கும் நீர்.
508 மன உறுதியே வினை உறுதி.
509 தீயன செய்யாமையும் துன்பம் வந்;தால் தளராமையுமே சிறந்த வழி.
510 வினை முடிக்கும் முன் விளம்பரம் தேடினால் துன்பமே வரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 491 – 500)


Thursday, October 27, 2011

Vaazhviyal unmaikal aayiram 491- 500 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 491-500

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/10/2011



491 வெல்லும் சொல் பிறிதின்றிச் சிறந்ததைச் சொல்க.
492 விரும்புமாறு கூறுக; கேட்பவற்றுள் பயனுள்ளவற்றை அறிக.
493 சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை உடையவரை வெல்லுவார் யாருமில்லை.
494 இனிதாய் முறைப்படக் கூறுவோனிடம் உலகம் அடைக்கலம்.
495 சுருக்கமாய்ச் சொல்லத் தொpயாதவர் விரிவாய்ப் பேச விரும்புவர்.
496 கற்றதைச் சொல்ல இயலாதவர் மணமற்ற மலர் ஆவார்.
497 ஆக்கம் தருவது துணைநலம்;; வேண்டுவன தருவது வினைநலம்.
498 புகழும் நன்மையும் தராதனவற்றை என்றும் கைவிடுக.
499 நற்பெயர் வேண்டுமாயின் தீச்செயல் தவிர்க்க.
500 நல்லெண்ணம் கொண்டோர் அல்லல் வரினும் இழிவான செய்யார்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 481 – 490)



Vaazhviyal unmaikal aayiram 481-490 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 481-490

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/10/2011


481 துன்பத்தின் இலக்கு உடம்பு என உணர்ந்து கலங்காதிரு.
482 துன்பத்தை இயல்பு என்போன் துன்புற மாட்டான்.
483 துன்பமே இன்பம் எனக் கொண்டால் பகைவரும் மதிப்பர்.
484 நூலறிவுடன் உலகியல் அறிவும் தேவை.
485 தீயன எண்ணும் அமைச்சர் பல கோடிப் பகைவர்க்குச் சமம்.
486 திறனில்லாதவர் நன்கு திட்டமிட்டாலும் அரைகுறையாகவே முடிப்பர்.
487 ஆற்றலில் சிறந்தது பேச்சாற்றல்.
488 ஆக்கமும் கேடும் தருவது சொல்க.
489 கேட்டவர் மகிழவும் கேளாதவர் கேட்க விரும்பவும் அமைவதே சொல்வன்மை.
490 திறன் அறிந்து சொல்லுதலே அறமும் பொருளுமாகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 471 – 480)




Monday, October 24, 2011

vaazhviyal unmaikal aayiram 471-480 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 471-480

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/10/2011





471 முயற்சி செல்வத்தைத் தரும்; முயலாமை வறுமையைத் தரும்.
472 பொறியின்மை குறைபாடு அன்று; முயற்சி இன்மையே குறைபாடாகும்.
473 தெய்வத்தால் ஆகாததையும் முயற்சி முடித்துத் தரும்.
474 அயரா உழைப்பு விதியை ஓட்டும்.
475 இடையூறுகளைச் சிரிப்புடன் எதிர்கொள்க.
476 வெள்ளம் போன்ற துன்பமும் உள்ளத்தின் உறுதியால் நீங்கும்.
477 துன்பத்திற்குத் துன்பப்படாதவர் துன்பத்திற்கே துன்பம் தருவர்.
478 கடுமையான உழைப்பாளியிடம் இடுக்கண் இடர்ப்படும்.
479 மனம் கலங்காதவன் அடுக்கடுக்காய் வரும் துன்பத்திற்கே துன்பம் தருவான்.
480 செல்வம் பெற்ற பொழுது பேணாதவர் இல்லாத பொழுது அல்லல் படுவதேன்?
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 461 – 470)


Vaazhviyal unmaikal aayiram 461-470 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 461-470

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/10/2011



461 காலத்தாழ்ச்சி கெட்டுப் போகவிரும்புவோரின் ஊர்தி.
462 சோம்பல் குடிப்பெருமைக்குக் கேடு.
463 குடி உயர்த்த மடி அகற்று. (மடி-சோம்பல்)
464 யார் துணை இருப்பினும் சோம்பல் உடையார் பயனடையார்.
465 மடியுடையார் இகழ் அடைவார்.
466 சோம்பல் இல்லா ஆளுமை உலகையே ஆளும்.
467 முடியாது என்று தளரக் கூடாது.
468 முயற்சியால் பெருமை வரும்.
469 செயலை முடிக்காதவனை உலகம் ஏற்காது.
470 இன்பம் விரும்பாமல் செயலை விரும்புபவன் சுற்றத்தாரின் துன்பம் துடைக்கும் தூண்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 451 – 460)


Sunday, October 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 451-460: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 451-460


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/10/2011


451 கண்ணோட்டம் இல்லாதவர் நிலத்திற்குச் சுமை.
452 செயலில் ஊறு நேரா வண்ணம் கண்ணோட்டம் உடையவர்க்கு உரியது இவ்வுலகு.
453 தனித்தனி மூன்று ஒற்றர் மூலம் செய்தியை அறிக.
454 ஒற்றர்க்குச் சிறப்பு ஊரறியச் செய்யற்க.
455 பொருளுடைமை நீங்கும்; உள்ளமுடைமை நிலைக்கும்.
456 ஊக்கம் உடையவனிடம் வழிகேட்டு ஆக்கம் செல்லும்.
457 உள்ளத்தின் அளவே உயர்வின் அளவு.
458 மனவலிமையே செல்வம்.
459 முயற்சி உடையவனே உயர்ச்சி அடைவான்.
460 சோம்பல் துன்பமே தரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 441 – 450)

Saturday, October 22, 2011

Vaazhviyal unmaikal aayiram 441-450 :வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 441-450

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/10/2011


441 முறை தவறும் ஆட்சியாளர் பொருளையும் மக்கள் ஆதரவையும் இழப்பர்.
442 அல்லல்படுவோரின் கண்ணீர் ஆட்சியாளரை அகற்றும் படை.
443 நல்லாட்சி இல்லையேல் புகழொளி இல்லை.
444 கொடுங்கோல் ஆட்சியில் உடைமையும் துன்பமே.
445 மீண்டும் குற்றம் செய்யா வண்ணம் நடுவுநிலையுடன் தண்டிப்பதே சிறந்தது.
446 வேகமாய் ஓங்கி மெதுவாய்த் தட்டுவது போல் தண்டி.
447 கொடுங்கோல் ஆட்சி விரைவில் அழியும்.
448 ஆளுவோரைக் கொடுமையாளராக மக்கள் எண்ணத் தொடங்கினால் உறுதியாய் ஆட்சி அகலும்.
449 மக்கள் பார்க்க இயலா ஆட்சியாளன் அழிவான.;
450 கண்ணோட்டம் உள்ளவர்களால் உலகம் உள்ளது.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 431 – 440)


Friday, September 16, 2011

Vaazhviyal unmaikal aayiram 261-270: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் : 261-270

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 15, 2011


261 சினம் கொண்டார் பிழைப்பது அரிது.
262 சினம் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடுதரும்.
263 சினம் கொண்டவர் இனத்திற்கே துன்பம் தரும்.
264 தீப் பிழம்பு போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே.
265 வெகுளியை மறந்தால் எண்ணியதை வெல்லலாம்.
266 சினம் உடையார் உயிர் இழந்தார்; சினம் இழந்தார் உயிர் உடையார்
போல்வர்.
267 செல்வமே கிடைத்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.
268 துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாமையே சிறந்தது.
269 தீமை செய்தவர்க்குச் செய்யும் தீமையும் தீதே.
270 துன்புறுத்துவோர்க்குத் தண்டனை நன்மை செய்தலே.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 251-260)


Tuesday, September 13, 2011

vaazhviyal unmaikal aayiram 251-260: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 251–260

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

251–260: திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 13, 2011



251 வாய்மை என்னும் அறம் செய்தால் பிற அறம் எதுவும் தேவையில்லை.
252
நீரால் உடல் தூய்மை ஆவது போல் உண்மையால் உள்ளம் தூய்மை ஆகும்.
253
சான்றோர்க்கு உண்மை என்னும் விளக்கே உண்மையான விளக்கு ஆகும்.
254
உண்மை பேசுவதைவிட உயர் அறம் வேறு இல்லை.
255
எளியோரிடமும் வலியோரிடமும் சினம் தீமையே தரும்.
256
தீயன தரும் சினத்தை மற.
257
மகிழ்ச்சியைக் கொல்லும் சினமே நமக்குப் பகை.
258
உன்னைக் காக்க வேண்டும் என்றால் சினத்தில் இருந்து காத்துக் கொள்க.
259
சினம் கொண்டவனையே கொல்லும்.
260
சினத்தின் அழிவு இனத்திற்காகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 241-250)


Friday, September 9, 2011

vaazhviyal unmaikal aayiram 241-250: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்: 241-250

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 9, 2011


241 பொருள்¢ ஆசையில் திருடுபவன் அருளும் அன்பும் கொண்டு வாழ முடியாது.
242
திருட்டு ஆசை உடையோர் ஒழுக்கமுடையராய் வாழமாட்டார்.
243
களவு அறிந்தோர் நெஞ்சில் வஞ்சனையே நிலைக்கும்.
244
களவு வாழ்க்கை அழிவு வாழ்க்கை.
245
தீமை விளைவிக்காத சொல்லே வாய்மையாகும்.
246
குற்றம் இல்லாத நன்மையைப் பிறருக்குத் தரும் பொய்யும் வாய்மையாகும்.
247
மனமறிய பொய் சொன்னால் மனமே துன்புறுத்தும்.
248
பொய் சொல்லா உள்ளத்தான் உலகத்தார் உள்ளத்துள் உள்ளான்.
249
தானம் தவம் இரண்டையும் விட வாய்மையே சிறந்தது.
250
பொய்யாமை ஒன்றே எல்லா அறப் பயன்களையும் தரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 231 – 240)

Thursday, September 8, 2011

Vaazhviyal unmaikal aayiram 231-240: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 231-240

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 8, 2011
231 துன்பம் பொறுத்தலும் செய்யாமையுமே தவமாகும்.
232
ஆக்கமும் அழிவும் தவத்தால் வரும்.
233
சுட்டால் சுடரும் பொன்போல் துன்பம் பட்டால் ஒளிர்வர்.
234
தன்னலம் அற்றவரை மன்னுயிர் தொழும்.
235
உலகம் பழித்ததை ஒழித்தால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலும் வேண்டா.
236
கூடா ஒழுக்கம் கேடாய் முடியும்.
237
பிறரால் எள்ளப்பட வேண்டாதவன் கள்ளத்தனத்தில் இருந்து தன் நெஞ்சைக்  காக்கவும்.
238
திருட எண்ணுவதும் தீது.
239
திருட்டுச் செல்வம், பெருகுவது போல் தோன்றினாலும் அழியும்,
240
திருட்டு ஆசை தீராத் துன்பம் தரும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 221 -230

Saturday, August 27, 2011

vaazhviyal unmaikal aayiram 221-230: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221-230

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 26, 2011


221 அருளின்றி அல்லவை செய்தால் பொருள் நீங்கும்.
222
இவ்வுலகிற்குப் பொருளும் புகழ் உலகிற்கு அருளும் தேவை.
223
அருளற்றவர்க்கு ஆக்கம் எப்பொழுதும் இல்லை.
224
மெலியாரைத் துன்புறுத்தும் பொழுது வலியார் முன் தன்னை நினைத்துப்  பார்க்கவும்.
225
பேணாவிட்டால் பொருள் வளம் பெருகாது.
226
ஊன் உண்போர்க்கு அருளாட்சி இல்லை.
227
உடல்சுவை கண்டால் நல்லாக்கம் வராது.
228
புலால் என்பது பிற உடலின் புண்ணே! அதை உண்பானேன்?
229
ஆயிரம் வேள்வியினும் ஒன்றன் உயிர் பிரிக்காமையே நன்று.
230
ஊனை மறுத்தவனை உயிர்கள் தொழும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்  211 – 220

Friday, August 26, 2011

vaazhviyal unmaikal aayiram 210-220 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 210-220

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 25, 2011


211 புகழ்ப்பணி புரிந்தவரையே போற்றும் உலகு.
212
புகழோ இகழோ காரணம் நாமே.
213
புகழ் வரும் வகையில் செயல்புரிக.
214
புகழ் பெறா வாழ்க்கை வசையுடைய வாழ்க்கை.
215
புகழில்லாமல் வாழ்ந்தால் நிலப்பயனும் குன்றும்.
216
புகழ் நீங்கி வாழ்பவரும் வாழாதவரே.
217
பொருட்செல்வம் கீழோரிடமும் இருக்கும்; அருட்செல்வமே செல்வம்.
218
அருளாட்சியே அனைத்து வழிக்கும் துணை.
219
அருளுடையார் துன்பம் அடையார்.
220
அருள் ஆள்வோர் அல்லல் அடையார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 201 – 210


vaazhviyal unmaikal aayiram 201-210 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 201-210

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 23, 2011


201 கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202
பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203
இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204
பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205
கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206
இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207
கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208
கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இ¢ல்¢லை.
209
கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210
உலகில் அழியாதது புகழே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்   -   191-200

 

Followers

Blog Archive