(சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

781. Adjudication Committeeநீதிமுறைக் குழு  

எதிர்ம நடவடிக்கை மேல்முறையீடுகளைக் கேட்டுத் தீர்ப்பதற்கு அமைக்கப்படும் இடைக்காலக் குழு.
782. Adjudicative Processதீர்ப்புப் படிமுறை    

நீதிமுறையில் தீர்மானிக்கும் நெறிமுறை.

தீர்ப்புச் செயல்முறை.
783. Adjudicatorதீர்ப்பாளர்,

தீர்ப்பு வழங்குபவர்,

தீர்ப்பு வழங்குநர்  

பூசல் அல்லது தகராறு அல்லது போட்டியில் தகுநிலையில் தீர்ப்பளிப்பவர்.
784. Adjudicatory Bodies (Adjudicatory Body)தீர்ப்புரைக் குழாங்கள் (தீர்ப்புரைக் குழாம்)  

ஒருவரோ பலரோ சான்றியத்தை அல்லது சட்ட வாதுரையை அளித்த பின்,  தரப்பாரின் சட்ட நலன்கள், உரிமைகள், பொறுப்புகளைப் பாதிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கும் குழாம் அல்லது குழாங்கள்.  

தீர்ப்புரைக் குழாம் என்பது நீதி மன்றம் இல்லாத ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட தரப்பாரிடையே ஒரு சிக்கல் அல்லது முடிவு காணப்பட வேண்டிய நேர்வில் தீர்ப்புரைக்கும் நடுநிலை அலுவலர்களைக் கொண்ட ஓர் அமைப்பு.   சான்றாக ஆசிரியர் வாரியம் தான் செயல்படும் இடங்களில், ஆசிரியர்களுக்கு எதிரான கோரல்களுக்குத் தீர்ப்புரைக்கும்.
785. Adjudicatory function/ functionsதீர்ப்புச் செயல்பாடு    

நீதிமுறையில்‌ தீர்‌மானிக்கும்‌ அலுவல்‌/கடமை நீதிமுறைச் செயற்பாடு/செயற்பாடுகள்  

நடுவர் அல்லது நீதிபதி, சான்றுகள், வாதங்கள் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யும் சட்டமுறையான செயற்பாடுகளாகும்.  

தீர்ப்பாயம் தொடர்பாக  இரண்டு அல்லது அதற்கு மேற்படட தரப்பாரின் உரிமைகள் அல்லது பொறுப்புகள் மாற்றப்படுவதைத் தீர்மானிப்பது உட்பட, உரிமைகள் பொறுப்புகளைத் தீர்மானிக்கும் செயற்பாடு.  

தீர்ப்பு என்பது கலைப்போட்டிகள், தொலைக்காட்சி விளையாட்டுக் காட்சிகள், பிற போட்டி மன்றங்களில் நிகழும் செயற்பாடுகளையும் குறிக்கும்.  இதன்மூலம் போட்டியாளர்கள் மதிப்பீடு செய்யப்பெற்று வெற்றியாளர் கண்டறியப்படுகிறார்.
786. Adjustஒழுங்காக்கு

சரிக்கட்டு

பொருத்திக்கொள்

இசைவி  

ஏதேனும் ஒன்றோடு பொருந்துமாறு இசையச் செய்தல்.
787. Adjustmentநேரமைவு  

சரிகட்டல், சரிக்கட்டல்,

ஒழுங்காக்கல்,

நேர்ப்படுத்தல்,

சீரமைவு,

இணக்கம்,

ஒத்துப்போதல்,

பொருத்தப் பாடு,

சீரமைவு,

இசைவிப்பு,

சரிப்பாடு, சரியமைப்பு எனப் பலவாறாக இடத்திற்கேற்பச் சொல்லப்படுகிறது.  

விரும்பியவாறான முடிவையோ தோற்றத்தையோ பொருத்தத்தையோ அடைவதற்காக மேற்கொள்ளப்படும் சிறு மாற்றம்.
788. Administerஆட்சி செய்‌  

பணியாட்சி செய்

நிருவகி  

நீதியை அல்லது தண்டனையை வழங்கு

அளவலகின்(dose)படி மருந்து வழங்கல்.
789. Administrating Oath or Affirmationஉறுதி மொழி ஏற்பு

அலுவல்முறைப்படி முறையான வாக்குறுதியை அளித்தல்

போதையில் இருக்கும் சான்றருக்கு நீதி மன்றம் உறுதிமொழி ஏற்பு செய்யாது.
790. Administrationபணியாண்மை

பணியாளுமை,
பணியாட்சி

ஓர் அமைப்பு, ஒரு நிறுவனம், வணிக அமைப்பு முதலியவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும் செயலாட்சி அல்லது மேலாண்மை

படையின் பணியாண்மை அதிகாரம் ஒன்றிய அரசிடம் உறைந்துள்ளது என்கிறது மத்தியத் தொழில் பாதுகாப்புச்சட்டம் 1968, பிரிவு 7 (S.7,The Central Industrial Security Force Act, 1968)

பணியாளுமை,  

ஓர் அலுவலகத்தை அல்லது துறையை நடத்திச் செல்லும் செயல்.  

‘நிர்வாகம்’ என்பர். இதனை ‘நிருவாகம்’ எனக் குறிக்க வேண்டும். எனினும் இது தமிழ்ச்சொல்லல்ல எனவே கைவிட வேண்டும்.   ஆட்சி என்றும் குறிக்கின்றனர். தவறான பொருளுக்கும் இடம் தரும். தெளிவாகக் குறிப்பிடும் பொருட்டு, இதனைப் பணியாட்சி என்னும் பொருளில் பணியாண்மை என்கிறோம்.