(சட்டச் சொற்கள் விளக்கம் 301-305: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

306. Accelerator  முடுக்கி  
முடுக்குப்‌ பொறி  
விசை முடுக்கி  
முடுக்குநர்  
ஊர்தியில் காலால் அழுத்தி இயக்கும் முடுக்குப் பொறி.   ஒரு செயலை அல்லது குற்றச் செயலை விரைவாகச் செய்வதற்கு முடுக்கி விடுபவர்.
307. Accentஅசை அழுத்தம்,
ஒலி எடுப்பு  

ஒருவருடைய நாடு, நாட்டின் பகுதி, குமுகாயப் பிரிவு, இனவழிக்குழு, இயற்கைச் சூழல் முதலியவை சார்ந்து அமையும் மொழி உச்சரிப்பு முறை.
308. Accentuate  வலியுறுத்‌து  

சிறப்படையச்செய்  

ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை அல்லது ஏதாவது ஒன்றின்  ஓர் இயல்பான குறிப்பை மிகவும் கவனிக்கத்தக்கதாக மாற்றுவது.  

ஒன்றை மறுப்பதற்கான உரிமையையும் உட்கிடையாக உணர்த்துவது.  
சொத்து ஒப்படைப்பை ஏற்றுக் கொள்வது அல்லது ஒன்றின் உரிமையாளராக, வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ வேறுவகையில் ஒப்புக் கொள்வது.  

ஒப்பந்தக் கடப்பாட்டை நிறைவேற்றுவதாலோ வாழ்வோரிடையே வழங்கப்படும் பரிசை ஏற்பதாலோ உரிமை மாற்றத்தை ஏற்றுக் கொள்வது.
309. Accept  ஒப்புக்கொள்

ஏற்றுக்கொள்  

தரப்படும் ஒன்றை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது ஒப்புக் கொள்ளுதல்

ஒப்பந்தத்தை அல்லது உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளுதல்.

மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுதல்  

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, பிரிவு 2 (ஆ)( The Indian Contract Act 1872 Section 2 (b))  ஏற்றுக் கொள்வதை வரையறுத்துள்ளது. 

“யாருக்கு முன்மொழிவு செய்யப்பட்டதோ அவர் அதற்குத் தனது ஒப்புதலைக் குறிக்கும் போது, ​​சலுகை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்படும்போது வாக்குறுதியாக மாறும்.
310. Accept any presentஅன்பளிப்பு எதையாவது  ஏற்றல்  

இந்தியக் குடிமகனாக இல்லாத எந்த ஒருவரும் அரசின் கீழ் ஆதாயம் தரும் பதவியை வகிக்கும் பொழுது அல்லது அரசின் நம்பிக்கைக்குரிய பதவியை வகிக்கும் பொழுது குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்றி, எந்த வெளிநாட்டிலிருந்தும் அன்பளிப்பு, பட்டம், அல்லது ஆதாயத்திற்குரிய எதையும் ஏற்கக் கூடாது. – இந்திய அரசியல் யாப்பு பிரிவு 18 (Article 18 in The Constitution Of India 1949)

(தொடரும்)