சட்டச் சொற்கள் விளக்கம் 891-895
(சட்டச் சொற்கள் விளக்கம் 886 – 890)
சட்டச் சொற்கள் விளக்கம் 891-895
891. Assign | உரிமை அளி; உரிமை மாற்று அளி; ஒப்புவி; குறித்தளி கையடை கொற்றம் வை வணிகத்திலும் ஒப்பந்தங்களிலும் உரிமையளித்தல் முதன்மை இடத்தைப் பெறுகிறது. உரிமைகளை அல்லது நலன்களை ஒரு தரப்பாரிடமிருந்து மற்றறொரு தரப்பாருக்கு மாற்றுவதைக் குறிக்கிறது. உட்குத்தகைக்கும் உரிமை மாற்றியளித்தலுக்கும் வேறுபாடு உள்ளது. உட்குத்தகை என்பது குத்தகையாளர் உரிமைகளில் ஒரு பகுதியை மட்டும் மாற்றியளித்தலைக் குறிக்கிறது. உரிமையளி என்பது குத்தகையாளர் ஒப்பந்தப் பின்னணியில் மற்றொருவருக்கு அல்லது மற்றொரு நிறுவனத்திற்குக் குத்தகைச் சொத்தின் உரிமைகள் நலன்கள் முழுமையையும் மாற்றி யளித்தலைக் குறிக்கிறது. கொற்றம் வைத்தல் என்பது ஆட்சியை மற்றொருவரிடம் ஒப்புவித்தலைக் குறிக்கிறது. |
892. Assignability | மீளா மாற்றுரிமை செய்தல் காண்க : Assign |
893. Assigned | குறித்தளிக்கப்படும் குறித்தளிக்கப்படுதல் மீகாமர் வைப்புநிதிச் சட்டம் பிரிவு 1(1) [ (S. 12(1) SPFA, 1966) ] குறித்தளிக்கப்பட்ட: இருப்பூர்தி உடைமை (சட்டப் புறம்பாக வைத்திருத்தல்) சட்டம் 1966 பிரிவு 2(ஊ) [ S. 2(f), The Railway Property (Unlawful Possession) Act 1966 (S. 2(f) RP(UP)A, 1966) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம்-1993 பிரிவு (3)(1)[National Commission for Backward Classes Act-1993, S. 3(1)], (S. 8B(2)(d) DPA, 1961); மணக் கொடைத் தடுப்புச்சட்டம் 1961, பிரிவு 8ஆ(2) [sec. 8B(2) The Dowry Prohibition Act, 1961] காண்க: Assign |
894. Assignability | மீளா மாற்றுரிமை செய்தல் காண்க : Assign Assigned குறித்தளிக்கப்படும் குறித்தளிக்கப்படுதல் மீகாமர் வைப்புநிதிச் சட்டம் பிரிவு 1(1) [ (S. 12(1) SPFA, 1966) ] குறித்தளிக்கப்பட்ட: இருப்பூர்தி உடைமை (சட்டப் புறம்பாக வைத்திருத்தல்) சட்டம் 1966 பிரிவு 2(ஊ) [ S. 2(f), The Railway Property (Unlawful Possession) Act 1966 (S. 2(f) RP(UP)A, 1966) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம்-1993 பிரிவு (3)(1)[National Commission for Backward Classes Act-1993, S. 3(1)], (S. 8B(2)(d) DPA, 1961); மணக் கொடைத் தடுப்புச்சட்டம் 1961, பிரிவு 8ஆ(2) [sec. 8B(2) The Dowry Prohibition Act, 1961]kz காண்க: Assign |
895. Assignee | உரிமை(மாற்றம்) பெறுபவர்; உரிமையளிக்கப்படுபவர். ஓப்பந்த விதிமுறைகளின்படி,சொத்து, உடைமை, தலைப்பு, உரிமை என்பவற்றை மாற்றல் முறையில் பெறும் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஓர் அமைப்பு Alienee என்னும் சொல்லும் இதே பொருளில் இடம் பெற்றுள்ளது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment