Sunday, February 1, 2026

சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ         02 February 2026      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 : தொடர்ச்சி)

1031. Avert தடு விலக்கு  திசை திருப்பு; தவிர்த்தல் இன்னாத ஒன்றைத் தடு. விலக்கு அல்லது தடைசெய். ஒன்றிலிருந்து விலகுவது என்னும் பொருள் கொண்ட இலத்தீன் சொல்லில் இருந்து avert சொல் உருவானது. கடைசி நிமைய ஒப்பந்தத்தால் பெரும் சண்டை தவிர்க்கப்பட்டது போன்ற நேர்வுகளில் இச்சொல் கையாளப்படுகிறது.
1032. Aviation       வான் பயணம் வான்பயணவியல் வான் பறப்பியல் வானூர்திப்போக்குவரத்து வான் போக்குவரத்துச் சட்டம் என்பது விமானம், விமானப் பயணம், தொடர்புடைய சட்டம், தொடர்பான வணிகச் செயற்பாடுகளைப் பற்றிய வான்வழிப்பயணச் சட்டம் உள்ளது. இலத்தீன் சொல்லான  பறவை என்னும் பொருளில் உள்ள avis என்பதிலிருந்து  ஃபிரெஞ்சுச் சொல்லான  aviation உருவானது. இதிலிருந்து ஆங்கிலம் எடுத்துக் கொண்டது.
1033. Avocation   துணைத்தொழில் துணைத்தொழில் என்பது ஒருவர் வழக்கமாக ஈடுபடும் ஒரு செயற்பாடு, ஓய்வுநேர விருப்பார்வத் தொழில் அல்லது சிறிய ஈடுபாட்டைக் குறிக்கிறது, ஆனால் அது அவர்களின் முதன்மைத் தொழில், வணிகம் அல்லது செய் தொழிலிலிருந்து (profession)  வேறுபட்டது. பொதுவாக ஓய்வு நேரச் செயற்பாட்டைக் குறிக்கும்.
1034. Avoidவிலக்கு தவிர் சட்டமுறையான சூழலில், தவிர்ப்பு அல்லது தவிர்த்தல் என்பது ஓர் ஒப்பந்தம்,  அல்லது சட்டமுறையான கடமையை வெறுமனே விலக்கி வைப்பதை விட, முறையான, சட்டமுறையாக நீக்குதல், விலக்கி வைத்தல் அல்லது செல்லாததாக்குவதைக் குறிக்கிறது.
 1035.Avoidance of doubt      ஐயம்தவிர்ப்பதற்காக   ஐயத்தைத் தவிர்ப்பதற்காக" (FAOD- For the avoidance of doubt) என்பது ஒப்பந்தங்கள்,  சட்டங்களில் முந்தைய பிரிவின் குறிப்பிட்ட விளக்கத்தை தெளிவுபடுத்த, வலியுறுத்த அல்லது உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சட்டமுறையிலான சொற்றொடராகும். இ ஃது எந்தத் தெளிவின்மையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. ஏற்கெனவே உள்ள பொருளை மாற்றுவதற்கு மாற்றாக, உட்கிடையான பொருளை வெளிப்படையாகச் சொல்வதன் மூலம  எதிர்காலப் பூசல்களைத் தடுக்க இஃது ஒரு முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாகச் செயற் படுகிறது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive