Showing posts with label .தேடுபொறி. Show all posts
Showing posts with label .தேடுபொறி. Show all posts

Saturday, November 14, 2015

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 18 : இலக்குவனார் திருவள்ளுவன்


thedupori-thalaippu

18

அட்டவணை 06
தேடுபொறி-அட்டவணை 06 :thedupori_attavanai06_correct
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்)
இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்களில் முகப்புப் பகுதியில் –‘பெண்மதிமாலை’ நீங்கலாகத் – தேடுதல் பொறி இருப்பது பற்றிய குறிப்பே இல்லை. வழக்கம்போல் அட்டவணைப் பகுதிக்குச் செல்பவர்கள் மட்டுமே அறிய இயலும்.
அட்டவணை 07
தேடுபொறி-அட்டவணை 07 :thedupori_attavanai07_correct
  இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்) பகுதியில் ஏறத்தாழ 85 நூல்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்திலும் உள் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பில் பக்கம் தேடலும், சொல் தேடலும் உள்ளன. உரைநடைப் பக்கங்களில் பக்கம் தேடுதல் வாய்ப்பு மட்டும் உள்ளது. நேரடியாக உரைநடைப்பகுதிக்குப் படிக்கச் செல்பவர்களுக்குச் சொல் தேடல் வாய்ப்பு இல்லை.
  இவை தவிர, நாட்டுடைமையாக்கப்பெற்ற அறிஞர்களின் நூல்களும் உள்ளன. தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் சிலரின் நூல்கள் விடுபட்டுள்ளன. சிலரின் படைப்புகளில் விடுபாடுகளும் உள்ளன. எனினும் 92 அறிஞர்களின் 2209 நூல்கள் தரப்படுகின்றன. இவை எடுபொதிவு ஆவணக் கோப்பாக (PDF)உள்ளமையால் எவ்வகைத் தேடுபொறியும் இணைக்கப்படவில்லை போலும். இருப்பினும் இவற்றுள்ளும் தேடுபொறி வாய்ப்பை அளிக்க வேண்டும்.
  சுருங்கச் சொல்வதாயின் தளங்களில் உள்ள இவ்வாறான சீர்மையற்ற தேடுபொறி வாய்ப்புகளை நீக்க வேண்டும். இக்கட்டுரை முழுமையையும் தஇகக படிக்க வேண்டிய தேவையில்லை. சொல்தேடலுக்கான வாய்ப்பு எல்லாப் பக்கங்களிலும் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால் போதுமானது.
  மதுரைத் திட்டம், தமிழம் முதலான தனியார் அமைப்புகள் மிகுதியான நூல்களை வழங்கும் பொழுது தஇகக அனைத்து நூல்களையும் இணைய வழி தராமல் இருக்கலாமா?நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள், தொண்டர்கள் தாமாகவே தஇஇக. தளத்தில் நூல்களைப் பதிவேற்ற வாய்ப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இதன் நூலகம் முழுமையானதாக அமையும். நூல் வெளியிடும் ஒவ்வொருவரும் நூலின் ஒரு படியை தஇகக நூலக்திற்குக் கட்டணமின்றித் தரவும், மின்னூல் வெளியீட்டிற்கு இசைவு வழங்கவும் விதிமுறை ஏற்படுத்த வேண்டும். இவையெல்லாம் சிறப்பாக நடக்க வேண்டுமெனில் தமிழ்ப்பற்றுள்ள தமிழறிஞர்களே முதன்மைப் பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும்.
தமிழறிஞர்க்குத் தரும் தலைமையே
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் செழுமை!
சீர்மை காணப்பெறும் நம்பிக்கையில் நிறைகிறது.
-இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, November 3, 2015

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –17 : இலக்குவனார் திருவள்ளுவன்


thedupori-thalaippu
 17

சிற்றிலக்கியங்கள்
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள   தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், பாடல், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் இல்லை.
சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள   தேடுதல் தலைப்பு மூலமும், ‘மூலமும் உரையும் இணைந்த பகுதியிலும்’ பக்கம் மட்டும் தேடலாம்.
திருவருட்பா : அட்டவணைப் பகுதியில் உள்ள   தேடுதல் தலைப்பு மூலமும் பாடல் தேடலும் மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்க எண் தேடலும் உள்ளன.
தாயுமானவடிகள் திருப்பாடல்கள் & சித்தர் பாடல்கள் : அட்டவணைப் பகுதியில் உள்ள   தேடுதல் தலைப்பு மூலமும் பாடல், சொல் தேடலும் மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்க எண் தேடலும் உள்ளன. இவை போல் பிறவும் சீர்மையற்று உள்ளமையைப் பின்வரும்அட்டவணை உணர்த்தும்.

அட்டவணை – 05
தேடுபொறி-அட்டவணை05-பக்.01:thedupori-attavanai-page01 தேடுபொறி-அட்டவணை05-பக்.02:thedupori-attavanai-page02தேடுபொறி-அட்டவணை05-பக்.02:thedupori-attavanai-page02
தேடுபொறி-அட்டவணை05.03:thedupori-attavanai-page03
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டுப் பகுதியில்

திருச்செந்தூரக் கந்தர் கலிவெண்பா
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணி மாலை
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர செய்யுட்கோவை
பண்டார மும்மணிக்கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
ஆகியன உள்ளன. இங்கே குறிப்பிட்டுள்ள விவரம் அனைத்திற்கும் பொருந்தும்.

சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டுப் பகுதியில்
சோணசைல மாலை
நால்வர் நான்மணி மாலை
திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
பழமலையந்தாதி
பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
விருத்தகிரி பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
பெரியநாயகியம்மை கலித்துறை
நன்னெறி
திருவெங்கைக் கோவை
திருவெங்கைக் கலம்பகம்
திருவெங்கையுலா
இட்டலிங்க அபிடேக மாலை
நெடுங்கழி நெடில்
குறுங்கழி நெடில்
நிரஞ்சன மாலை
கைத்தல மாலை
சிவநாம மகிமை
சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதூது
சிவஞானபாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி
சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
இட்டலிங்க வகவல்
திருவெங்கை மான்மியம்
ஆகியன உள்ளன. இங்கே குறிப்பிட்டுள்ள விவரம் அனைத்திற்கும் பொருந்தும்.

தமிழ் விடு தூது ஆசிரியர் பெயர் யாரும் அறியப்படாததாக உள்ளது. ஆனால், இதில் தி.சங்குப்புலவர் என உரையாசிரியர் பெயரைத் தவறாகக் குறித்துள்ளனர். இது போன்ற தவறுகளை நீக்கிச் செம்மை செய்ய தஇஇக முயல வேண்டும்.
 நெறி நூல்கள்
மூலமும்   உரையும் இணைந்த பகுதி உள்ளது. அதன் பக்கங்களில் தலைப்பில் உள்ள தேடுதல் பகுதி மூலம் சொல் தேடுதல் மட்டும் உள்ளது.
நீதி நூலில் மட்டும் அட்டவணைப் பகுதியில் உள்ள   தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் மட்டும் உள்ளது.
இவற்றை ஒத்து அமைந்தள்ள சித்தர்பாடல்களும் இவ்வட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
(தேடுதல் தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
 

Friday, October 23, 2015

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 15 : இலக்குவனார் திருவள்ளுவன்


thedupori-thalaippu

15

காப்பிய இலக்கியங்கள்
அட்டவணை – 03
attavanai03,thedupori.1.1
  பெருங்கதை உரை மூலப்பக்கத்திலேயே உருவாகிறது. பிற வற்றிற்குத் தனிப் பக்கமாகப் பெட்டிச் செய்திபோல் வருகின்றது.
  அடுத்துள்ள சமய இலக்கியப் பகுதிகளில் தேடுபொறி வாய்ப்பு குறித்துத் தனித்தனியாகக் காணாமல் அடுத்துவரும் அட்டவணை மூலம் காணலாம்.
(தேடுதல் தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்




Followers

Blog Archive