18
அட்டவணை 06
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்)
இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்களில்
முகப்புப் பகுதியில் –‘பெண்மதிமாலை’ நீங்கலாகத் – தேடுதல் பொறி இருப்பது
பற்றிய குறிப்பே இல்லை. வழக்கம்போல் அட்டவணைப் பகுதிக்குச் செல்பவர்கள்
மட்டுமே அறிய இயலும்.
அட்டவணை 07
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்
(உரைநடைகள்) பகுதியில் ஏறத்தாழ 85 நூல்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்திலும்
உள் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பில் பக்கம் தேடலும், சொல் தேடலும்
உள்ளன. உரைநடைப் பக்கங்களில் பக்கம் தேடுதல் வாய்ப்பு மட்டும் உள்ளது.
நேரடியாக உரைநடைப்பகுதிக்குப் படிக்கச் செல்பவர்களுக்குச் சொல் தேடல்
வாய்ப்பு இல்லை.
இவை தவிர, நாட்டுடைமையாக்கப்பெற்ற அறிஞர்களின் நூல்களும் உள்ளன. தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் சிலரின் நூல்கள் விடுபட்டுள்ளன.
சிலரின் படைப்புகளில் விடுபாடுகளும் உள்ளன. எனினும் 92 அறிஞர்களின் 2209
நூல்கள் தரப்படுகின்றன. இவை எடுபொதிவு ஆவணக் கோப்பாக (PDF)உள்ளமையால்
எவ்வகைத் தேடுபொறியும் இணைக்கப்படவில்லை போலும். இருப்பினும் இவற்றுள்ளும்
தேடுபொறி வாய்ப்பை அளிக்க வேண்டும்.
சுருங்கச் சொல்வதாயின் தளங்களில் உள்ள இவ்வாறான சீர்மையற்ற தேடுபொறி வாய்ப்புகளை நீக்க வேண்டும். இக்கட்டுரை
முழுமையையும் தஇகக படிக்க வேண்டிய தேவையில்லை. சொல்தேடலுக்கான வாய்ப்பு
எல்லாப் பக்கங்களிலும் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால்
போதுமானது.
மதுரைத் திட்டம், தமிழம் முதலான தனியார்
அமைப்புகள் மிகுதியான நூல்களை வழங்கும் பொழுது தஇகக அனைத்து நூல்களையும்
இணைய வழி தராமல் இருக்கலாமா?நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள், தொண்டர்கள் தாமாகவே தஇஇக. தளத்தில் நூல்களைப் பதிவேற்ற வாய்ப்பு நல்க வேண்டும். இதன்
மூலம் இதன் நூலகம் முழுமையானதாக அமையும். நூல் வெளியிடும் ஒவ்வொருவரும்
நூலின் ஒரு படியை தஇகக நூலக்திற்குக் கட்டணமின்றித் தரவும், மின்னூல் வெளியீட்டிற்கு இசைவு வழங்கவும் விதிமுறை ஏற்படுத்த வேண்டும். இவையெல்லாம் சிறப்பாக நடக்க வேண்டுமெனில் தமிழ்ப்பற்றுள்ள தமிழறிஞர்களே முதன்மைப் பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும்.
தமிழறிஞர்க்குத் தரும் தலைமையே
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் செழுமை!
சீர்மை காணப்பெறும் நம்பிக்கையில் நிறைகிறது.
-இலக்குவனார் திருவள்ளுவன்
-இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment