Tuesday, October 18, 2011

Vaazhviyal unmaikal 401-410: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 401-470


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/10/2011


401 பெருமைக்கும் சிறுமைக்கும் அளவுகோல் அவரவர் செயலே.
402 சுற்றம் அற்றவர் பழி பாவத்திற்கு அஞ்சார்.
403 அன்பினால் அறிவிலியை நம்புவது தீங்கே.
404 ஆராயாமல் நம்புவது அல்லலைத் தரும்.
405 ஆராயாமல் நம்பாதே; நம்பிய பின் ஐயப்படாதே.
406 வருவாய் வழிகளைப் பெருக்கிச் செல்வத்தைச் சேர்க்கவும்.
407 எண்ணம் ஒன்றாயினும் செயலால் வேறுபடுபவர் மாந்தர்.
408 வேலையைத் தகுதியானவனிடம் ஒப்படைக்கவும்; வேண்டியவன் என ஒப்படைக்காதே.
409 தக்கவனிடம் தக்க காலத்தில் தக்க வேலையை ஒப்படைக்கவும்.
410 இவன் இவ்வாறு முடிக்க வல்லவன் என்பதை உணர்ந்து அவனிடமே வேலையை ஒப்படைக்கவும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 391-400)

Tuesday, October 4, 2011

vaazhviyal unmaikal aayiram 391-400: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 391-400


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/10/2011



391 சூழலை ஆராய்ந்து அறியாமல் எதையும் தொடங்காதே.
392 வலிமையாளர்க்கும் பாதுகாப்பான இடமே ஆக்கம் தரும்.
393 மெலியோரும் வலியோரே இடமறிந்து செய்தால்.
394 இடம் அறிந்து செய்தால் எதிர்ப்பும் இல்லாமல் போகும்.
395 முதலைக்கு நீரில் வலிமை; அவரவர் இடமே அவரவர்க்கு வலிமை.
396 தேர் கடலில் செல்லா; கப்பல் நிலத்தில் ஓடா. ஆளுமை என்பது
அவரவர்சூழலே.
397 இடமறிந்து செய்தால் அஞ்சாமையே துணையாகும்.
398 சேற்றில் சிக்கிய யானையை நரியே கொல்லும்; பொருந்தா இடமும்
பெருந்தீங்காகும்.
399 நன்கு கற்றவரிடமும் அறியாமை இருக்கும்.
400 குணமும் குற்றமும் ஆய்ந்து மிகுதியைக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 381-390)

Monday, October 3, 2011

Vaazhviyal unmaikal aayiram 381-390 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 381-390

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/10/2011


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
381 இருப்பு அளவு அறியா ஒப்புரவு செல்வத்தைத் தேய்க்கும்.
382 காலம் அறிந்து எதிர்ப்பை வெல்க.
383 காலம் அறிந்து செய்தால் முடியாததும் உண்டோ?
384 காலமறிந்து இடமறிந்து செய்தால் உலகம் உன் வயம்.
385 உலகத்தை வெல்லக் காலத்தைக் கருதுக.
386 காலம் கருதி ஒடுங்குவது வெல்வதற்கே.
387 காலம் வரும் வரை உள்ளத்தில் கிளர்ந்து வெல்க.
388 வெல்லும் காலம் வரும் வரை எதிர்ப்பிற்கு அடங்குக.
389 வாய்ப்பான காலத்தில் செயற்கரியன செய்க.
390 வாய்ப்பு வரும் வரை அடங்கு; வந்ததும் அடக்கு.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 371-380)
 

Thursday, September 29, 2011

Vaazhiviyal unmaikal aayiram 371-380 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 371-380

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 29/09/2011



371 உலகம் எள்ளாததை எண்ணிச் செய்க.
372 செயல் வலிமையுடன் தன்வலிமை, மாற்றான் வலிமை, இருவர்க்கும் உதவுநர்  வலிமை அறிந்து செய்க.
373 முடியக் கூடியதை அறிந்து செய்தால் முடியாதது எதுவுமில்லை.
374 வலிமையறியாத ஊக்கம் கேடு தரும்.
375 தன்னை மிகுதியாய் மதிப்பிடுபவன் விரைவில் கெடுவான்.
376 மெலியோர் சேர்க்கையும் வலிமையாகும்.
377 அளவு கடந்த ஊக்கமும் அழிவே தரும்.
378 வரும் வழி அறிந்து கொடுத்தால் வளம் பெருகும்.
379 வரவிற்கேற்ப செலவினைச் சுருக்கினால் கேடு இல்லை.
380 வருவாய் அளவை அறியாதாவனின் வளம் இல்லாமல் போகும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 361-370)
 

Wednesday, September 28, 2011

Vaazhviyal unmaikal aayiram 361-370: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 361-370

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/09/2011



361 அழிவு, ஆக்கம், ஊதியம் கருதிச் செய்க.
362 அருந்துணையுடன் ஆராய்ந்து செய்தால் ஆகாதது ஒன்றும் இல்லை.
363 முதல் இழக்கும் ஆக்கம் அறிவுடையார் கொள்ளார்.
364 இழிவு கண்டு அஞ்சுவோர் தெளிவின்றித் தொடங்கார்.
365 வழிவகை ஆராயாது செய்தல் பகைவர்க்கு இடம் கொடுக்கும்.
366 செய்யக்கூடாததைச் செய்தால் கேடு வரும்.
367 செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டாலும் கேடு வரும்.
368 எண்ணித் துணிக; துணிந்த பின் எண்ணாதே.
369 முறையற்ற முயற்சி பலர் துணைபுரிந்தாலும் வீணாகும்.
370 அவரவர் தன்மைக்குப் பொருந்தா நன்மையும் தவறாகும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 351-360)

Vaazhviyal unmaikal aayiram 351-360: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 351-360


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/09/2011




351 நல்லவர் தொடர்பைக் கைவிடுவது பலரின் பகையினும் பன்மடங்குத்   தீமையாகும்.
352 சிற்றினம் கண்டு அஞ்சுவதே பெருமை.
353 சிற்றினத்தைச் சுற்றமாக்குவது சிறுமை.
354 சேர்க்கையைப் பொறுத்தே அறிவு அமையும்.
355 மனத்தால் அமையும் உணர்ச்சி; இனத்தால் அமையும் தன்மை.
356 மனத் தூய்மையும் செயல் தூய்மையும் இனத் தூய்மையால் அமையும்.
357 இனத் தூய்மையால் ஆகாத நல்லது எதுவுமில்லை.
358 மனநலம் ஆக்கம் தரும்; இனநலம் புகழ் தரும்.
359 மனநலம் இருப்பினும் இனநலமே பாதுகாப்பு.
360 நல்லினமே நல்ல துணைங் தீயினமே மிகுந்த துன்பம்.

Monday, September 26, 2011

vaazhviyal unmaikal aayiram 341-350 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 341-350

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/09/2011



341 செய்யக் கூடாததைச் செய்பவன் செல்வம் அழியும்.
342 உன்னை நீயே புகழாதே.
343 நன்மை தராதவற்றை விரும்பாதே.
344 அறனறிந்த அறிவுடையாருடன் பழகு.
345 வந்த துன்பம் நீக்கி வரும் துன்பம் காப்போரைப் போற்றுக.
346 பெரியோரைப் பேணுதலே சிறந்த செயல்.
347 நம்மைவிடப் பெரியார் வழி நிற்றல் வலிமையுள் வலிமையாகும்.
348 இடித்துரைப்பாரைத் துணையாகக் கொண்டால் கெடுப்பார் யாருமிலர்.
349 இடித்துரைப்பார் இல்லையேல் தானே கெடுவான்.
350 முதல் இல்லையேல் ஊதியமும் இல்லை.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 331-340)



Followers

Blog Archive