(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155 தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 156-160
156. Above standard | தரத்திற்கு மேலான அளவு அல்லது தரம் அல்லது இரண்டும் மேலான நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. ஆளுமையில் இயல்பு மீறிய திறமையை வெளிப்படுத்தும் தலைமைத்துவ நிலையைக் குறிக்கிறது. நிதியியலில் கடனாளி வலுவான நிதிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. |
157. Above the rank of | பதவி நிலைக்கு மேலான ஒரு பதவி நிலையை விட மேலான உயர் பதவியைக் குறிப்பது. |
158. Above written | மேலே எழுதியுள்ள முன்பு எழுதப்பட்ட அல்லது பெயரிடப்பட்ட ஒன்றைக் குறிப்பிடுவது. |
159. Abrasive | உராய்பொருள் தேய்ப்புப்பொருள், சிராய்ப்பி உப்புத்தாள் ஒரு பொருளின் மேற்பரப்பைத் தேய்ப்பதன் மூலம் சேதப்படுத்தல் அல்லது அழுக்கை அகற்றல். எடுத்துக்காட்டாகச் சொரசொரப்பான உப்புத்தாள் கொண்டுதேய்ப்பதன் மூலம் அழுக்குப் பகுதியை அகற்றல். |
160. Abreast | காலத்திற்கேற்றவாறு இணையான நிலையொத்து பக்கம் பக்கமாக ஒரு வரிசையில் ஒருவருக்கொருவர் அருகருகே இருப்பது. சமமாகவோ இணையாகவோ நடந்துசெல்லல். எ,கா. கொலை நடப்பதற்கு முன்னர்க் கொலையாளியும் கொலையுண்டருவரும் அருகருகே நடந்து சென்றுள்ளனர். காதலியின் அருகே இணையாக நடந்து சென்ற காதலன் பின்னர்க் காதலியை ஓடும் ஊர்தி முன் தள்ளிக் கொலை செய்துள்ளான். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment