03
ஆண்மை கைக் கொள்!
உலகில் இன்பம் பெற வழி அச்சத்தை விரட்டுவதுதான். அச்சத்தை விரட்ட ஆண்மையைக் கைக் கொள்ள வேண்டும்.
அச்சத்தை விட்டிடடா – நல்
ஆண்மையைக் கைக் கொள்ளடா
இச்சகத்தினிமேலே நீ – என்றும்
இன்பமே பெறுவையடா என்கிறார் பாரதியார்.
அச்சம் நீங்கினாயோ – அடிமை
ஆண்மைத் தாங்கினாயோ
(பக்கம் 63 / தொண்டு செய்யும் அடிமை)
என்று அச்சம் நீங்க ஆண்மையைத் தாங்க
வலியுறுத்துகிறார். இதனையே ஆத்திசூடியில் (2) ஆண்மை தவறேல் எனக்கட்டளையாகத்
தெரிவிக்கிறார். மேலும், ஆண்மை வெளிப்பாடாக, ஏறுபோல் நடையினாாய் வா! வா! வா! என ஏறுநடையை வரவேற்றவர் பாரதியார். எனவே,
ஏறுபோல் நட (ஆ.சூ.8)
குன்றென நிமிர்ந்து நில் (ஆ.சூ. 17)
என ஆண்மையின் வெளிப்பாட்டை வற்புறுத்திக் கட்டளையிட்டுள்ளார் பாரதியார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04)
No comments:
Post a Comment