Showing posts with label வாழ்வியல் கட்டளைகள் 900. Show all posts
Showing posts with label வாழ்வியல் கட்டளைகள் 900. Show all posts

Saturday, August 3, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230

(குறள்நெறி) 

  1. ஊருணி போல் செல்வத்தால் பிறருக்கு உதவு!.
  2. பயன்மரம் போல் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்து!
  3. வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்காதே!
  4. நல்லன செய்ய இயலாத வறுமையாளனாக வாழாதே! 
  5. ஒப்புரவினால் கேடு வந்தால் உன்னை விற்றாவது பெற்றுக் கொள்!
  6. கொடையை விரும்பின் வறியவர்க்குக் கொடு!
  7. நல்லவழியில் வந்தாலும் பெறாதே!
  8. மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத் தவறாதே!
  9. இல்லை என்று சொல்லாமல் கொடு!
  10. கேட்போர் மகிழும் வகையில் கொடு!

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, July 28, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220

(குறள்நெறி) 

  1. பொருள் இல்லையே எனத் தீயன செய்யாதே!
  2. துன்பம் வேண்டாவிடில் தீயன செய்யாதே.
  3. தீச் செயல்  புரிந்து அழிவைத் தேடாதே!
  4. தீயவை செய்து கெடுதியைத் தொடரவிடாதே!
  5. உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே,
  6. கேடு இல்லாதிருக்கத்  தீயன செய்யாதே!
  7. மழைபோல் கைம்மாறு கருதாமல் உதவுக!
  8. முயற்சியால் வரும் பொருளைப் பிறர் உயரப் பயன்படுத்து!
  9. எங்கிலும் உயர்வான ஒப்புரவு பேணுக!
  10. உயிர்வாழப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவு!

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, July 23, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210

(குறள்நெறி) 

  1. சீர்மையும் சிறப்பும் நீங்கப் பயனற்ற சொல்!
  2. பயனில பேசிப் பதடி ஆகாதே! 
  3. நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிரு!
  4. பயனில்லாச் சொல்லைச் சொல்லாதே!
  5. மறந்தும் பயனற்ற சொல்லாதே!
  6. பயனுடையன சொல்லுக!
  7. தீய செய்யத்  தீயோனாயின் அஞ்சாதே! நல்லோனாயின் அஞ்சுக!
  8. தீயினும் தீதான தீயன செய்யாதே!
  9. தீயன செய்தார்க்கும் தீயன செய்யாதே!
  10. பிறர்க்குக்  கேடு  செய்யாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, July 14, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200

(குறள்நெறி) 

  1. பிறர் குறையை நீ கூறி,  உன் குறையை உலகம் கூறச் செய்யாதே!
  2. இனியகூறி வளரும் நட்பை உணராது குறைகூறிப் பிரிக்காதே!
  3. நெருங்கியோர் குற்றத்தையும் கூறுபவரிடமிருந்து விலகு!
  4. அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே!
  5. அறனல்ல செய்தாலும் புறங்கூறாதே!
  6. புறங்கூறி வாழாதே!  
  7. பிறர் குற்றம்போல் உன் குற்றம் காண்!
  8. எல்லாராலும் இகழப்படப் பயனில சொல்!
  9. தீய செய்தலினும்  தீதான  பயனில சொல்லாதே!
  10. நீதிக்கு மாறாகப் பயனற்றவை சொல்லாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, July 8, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190

(குறள்நெறி)

  1. பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே!
  2. உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே!
  3. பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே!  
  4. அருள்வழி நின்றாலும் பிறர்  பொருள் விரும்பாதே!
  5. பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே!
  6. செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே!
  7. (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்!
  8. அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே!
  9. முன்னால் இழித்துச் சொன்னாலும் பின்னால் பழித்துச்சொல்லாதே!
  10. அறம்கூறும் நெஞ்சத்தான் எனில் புறஞ் சொல்லாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200]

Wednesday, July 3, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180

(குறள்நெறி) 

  1. பொறாமையால் அல்லவை செய்யாதே!
  2. (துன்பம் தரும்)  அழுக்காறு வேண்டா உனக்கு!
  3. சுற்றம் கெட வேண்டுமாயின்  பிறருக்குக் கொடுப்பதைத் தடு!
  4. செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை  கொள்!
  5. நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே!
  6. பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும்.
  7. அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே!
  8. (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே!
  9. உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு!
  10. பிறர் பொருள் பயன் விரும்பிப் பழிச்செயல் புரியாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, June 29, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170
(குறள்நெறி) 
  1. நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!.
  2. பொறுத்தவரைப் பொன்போல் போற்று!
  3. ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு!
  4. பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே!
  5. செருக்கினை வெல்ல பொறு!
  6. துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு!
  7. தீச்சொல் பொறு!
  8. அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்!
  9. இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு!
  10. அறன் ஆக்கம்  வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே!  
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive