Showing posts with label Ilakkuvanar Thiruvalluvan.. Show all posts
Showing posts with label Ilakkuvanar Thiruvalluvan.. Show all posts

Saturday, December 13, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 8: இலக்குவனார் திருவள்ளுவன்

     14 December 2025      கரமுதல



(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7: தொடர்ச்சி)

திட்டத்தை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு செய்யக்கூடியது

ஒன்றிய அரசுடன் இணைந்து செய்யக்கூடியது

ஒன்றிய அரசு செய்யக்கூடியது

போன்ற மூவகை திட்டங்கள் போட்டுச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் முன் வந்து செய்யக்கூடியதும் வர வேண்டும். அது மட்டுமல்ல இங்கே சமற்கிருத கல்விக்கூடங்கள் எல்லாவற்றையும் கருதுநிலை பல்கலைக்கழகங்களாக அஃதாவது டீம்டு யுனிவர்சிட்டி (Deemed University) என்று ஆக்கினார்களோ, அதே போன்று உலகின் பல நாடுகளில் ,பல தமிழ் அமைப்புகள் தமிழைக் கற்றுக் கொடுக்கின்றன. தமிழார்வலர்கள் தமிழைக் கற்பித்து வருகிறார்கள். அவர்கள் ஏதோச் சொந்த செலவிலும் ,நிதி, நன்கொடை வாங்கி ஏதோ ஒரு வகையிலும் செலவழித்துக் கொண்டுவருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை எல்லாம் அரசு உதவி தந்து அத்தகைய கல்வி நிறுவனம் ஏறத்தாழ ஒரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்பாக, ஒரு கல்வியகமாக அரசு சார் கல்வியகமாக மாற்ற வேண்டும். யார் யாரெல்லாம் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்களோ – பிற நாடுகளிலே – அவர்கள் அமைப்பை அரசு நிதி உதவி பெறும் கல்வியகமாக மாற்ற வேண்டும். அதற்கான முழு உதவியும் தர வேண்டும். எங்கெல்லாம் தமிழர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் இந்தியும், சமற்கிருதமும் இந்திய அரசு கற்றுக் கொடுக்கிறது . அதை நிப்பாட்ட வேண்டும். நிறுத்தி அங்கு தமிழைத்தான் கற்றுத் தர வேண்டும். மொரிசியசில் தமிழன் தமிழ் படிக்க வேண்டும் என்றால், நீ இந்தியன். இந்தி படி என்றார்கள் சமற்கிருதத்தைத் திணித்தார்கள். அப்படித்தான் அங்கெல்லாம் சென்றது. பல நாடுகளைச் சொல்லலாம் 80 நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்கள் அல்லவா ஆனால் சமற்கிருதம் எப்படி இப்பொழுது கூட இந்தியாவில் 25 ஆயிரம் பேர் பேசுவார்கள் என்றார்கள் இல்லையா? 25 ஆயிரம் பேர் கிடையாது. ஏறத்தாழ 10000 பேர் தான். அதனைக் கூட நாம் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெளிவாகக் கூறுகிறது, அவர்களில் பெரும்பாலோர் சமற்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். பலர் கோயில்களிலே ஓதக்கூடிய ஓதுபவர்கள் . அது அவர்களுக்குத் தாய்மொழி ஆக முடியாது.

மாத்தூர் என்று கருநாடகாவில் ஓர் இடம் இருக்கிறது .அங்கே சமற்கிருதத்திற்குப் பல நிதி உதவிகளை அரசு தருகிறது. அந்த மாத்தூரில் உள்ளவர்கள் பேசுவது சங்கேத மொழி என்று பெயர். தமிழர் தான் அவர்கள். போறேன் வாரேன் என்ற இந்த பேச்சுத் தமிழ்தான் அங்கே இருக்கிறது, ஆகப் பேச்சுத் தமிழைச் சமற்கிருதம் என்றாக்கி சமற்கிருத நிதி வருகிறது சமற்கிருதத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும்.

அடுத்தது, எழுத்து இல்லாத மறைந்த அஃதாவது குறைந்த எண்ணிக்கை உள்ள மொழிகளில் எல்லாம் எழுத்தை அதாவது ஒலி வரி வடிவத்தை மாற்றி விட்டு, தேவ நாகரி வடிவத்தைப் புகுத்தி விடுகிறது. தேவ நாகரியைப் புகுத்தி விட்டு இது தேவ நாகரி வடிவம் என்று சொல்லிவிட்டு, உங்கள் மொழி இந்தி அல்லது சமற்கிருதம் என்று சொல்லிவிடுவார்கள் ஏன்? அப்படித்தான் வடக்கே செய்தார்கள் பீகாரில் மட்டுமே என்பது 80 மொழிகளை இந்தி மொழியாக மாற்றினார்கள். ஒன்றல்ல இரண்டல்ல 80 மொழிகள், பொய்யல்ல 80 மொழிகள் கற்றவர்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். புள்ளி விவரங்கள் இருக்கின்றன. குறிப்புகள் இருக்கின்றன. எல்லாமே இருக்கிறது. 80 மொழிகளை இந்தி மொழியாகக் காட்டினார்கள். இவ்வாறு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் குறைந்த எண்ணிக்கை உடைய தமிழ்க் குடும்பமொழி திராவிடமொழி என்று சொல்கிறோமே, பேராசிரியர் இலக்குவனார் சொல்படி தமிழ்க்குடும்ப மொழி என்று சொல்கிறோமே, தமிழ்க்குடும்ப மொழிகள்தான். அந்த தமிழ்க்குடும்ப மொழிகளை எப்படி மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், தேவ நாகரி என்று சொல்லி மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆக நாம் இங்குதான் திராவிடம் திராவிடம் என்று சொல்லுவோமே தவிர அந்த திராவிட மொழி என்று சொல்லக்கூடிய தமிழ் குடும்ப மொழியினரிடம் போய் டேய் உனது தாய்மொழி தமிழ் என்று சொல்லி அவர்களை தமிழ் படிக்கவோ எழுதவோ செய்வது கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் திராவிடம் என்று குரல் கொடுத்தால் போதுமா ஏன் அந்தத் தவற்றை செய்து கொண்டு இருக்கிறோம் என்று உணர வேண்டும்.

(தொடரும்)

13.07.2025

Friday, April 4, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1

 




(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – -தொடர்ச்சி)

இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றமை போல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தப் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபாடு இருந்ததில்லை.

பெரியார் ஈ. வெ. இராமசாமியும்  எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய, முதற்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் பெண்கள் பங்களிப்பு அளப்பற்கரியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வகைகள் மாநாடுகள், அணிவகுப்புகள், மறியல் போராட்டங்கள், உண்ணா நோன்பு, பேரணிகள், கறுப்புக் கொடி காட்டுதல்  எனப் பலவகையாக இருந்தன. இவை அனைத்திலுமே பெண்களின்பங்களிப்பு முதன்மையாக இருந்தது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இலக்காகவும் செயற்பாடுகளாகவும் பின்வருவன இருந்தன.

•         இந்தியை கட்டாயப் பாடமாக்குவதை ஒழிக்க வேண்டும்

•         இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்ததை எதிர்த்தல்

•         மாணவர்களை இந்திப் பாடங்களைப் புறக்கணிக்கும் படி செய்தல்

•         இந்தியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்கள் நடத்துதல்

•         பேராயக்கட்சி(காங்கிரசு) அமைச்சர்களுக்கு எதிராக்க கறுப்புக் கொடி காட்டுதல்

•         முதலமைச்சர் வீட்டிற்கு முன்பு மறியல் நடத்துதல்

ஆண்களுக்குத் தாங்கள் எவ்வகையிலும் சளைததவ்கள் இல்லை என்று சொல்லும்படிப் பெண்களி்ன் பங்களிப்பு இவற்றில் தீவிரமாக இருந்தது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக் தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அமைப்பின் பெயரில் உள்ள ‘முன்னேற்றக் கழகம்’ என்ற தொடரைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் மருத்துவர் தருமாம்பாள் அம்மையார். இத்தொடரே முன்னேற்றக் கழகம் என்று தமிழ்நாட்டில் தொடங்கப்படும் கட்சிகளின் பெயர்களில் இடம் பெற்றது. கழகம் என்று அரசியல் கட்சிகளின் பெயர்களில் இடம் பெறவும் இதுவே தொடக்கமாக அமைந்தது.

பெண்களின் போராட்ட உணர்வுகளுக்கு  தூண்டுகோலாகவும் வடிகாலாகவும் இவ்வமைப்பு செயற்பட்டது. இத்தகைய போராட்டப் ப்ங்களிப்புகளில் ஒன்றுதான் சென்னையில்  ஒற்றைவாடை அரங்கில் 13.11.1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாடு.

மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் மாநாட்டுத் தலைமை தாங்கினார். மீனாம்பாள் சிவராசு தமிழ்க் கொடி ஏற்றினார்; பண்டிதை நாராயணி அம்மையார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரை ஆற்றினார். நாகம்மையார் படத்தைத் தோழியர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார் பெரியார் ஈ.வெ.இராமசாமி சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மரு, தருமாம்பாள், அலர்மேலுமங்கை தாயாரம்மாள், மஞ்சுளாபாய் சண்முகம், புவனேசுவரி என்.வி. நடராசன் முதலானோர் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு பெண்களுக்கு இந்தி எதிர்ப்பில் ஈடுபட அழைப்பு விடுத்தார். தமிழ்மொழி,  தமிழ்ப்பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார்

அம்மாநாட்டில்தான் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது. “இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையானும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்கவேண்டும்” என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடுகள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதோடு மட்டுமன்றி ஆண்களைப் போலவே பெண்களும் சிறைபுகும் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தது. முதல் பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய பெரியாரும் அதையே வலியுறுத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறச் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சாற்றப்பட்டுப் பெரியார் ஈ.வெ.இரா.விற்குத் தண்டனை வழங்கப் பட்டது. தந்தை பெரியார் உரை கேட்டு மகளிர் போர்க் கோலம் பூண்டனர்.

இம்மாநாட்டின் மறுநாள் – 1938 நவம்பர் 14 – சென்னையில் பெத்து நாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் அருகிலிருந்து மரு.தருமாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், மலர்முத்தம்மையார்,  (பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியார்)பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் இந்து இறையியல் பள்ளி நோக்கி மறியலுக்குப் புறப்பட்டனர்; தளையிடப்பட்டனர். வீரத்தாய்மார்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறியலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கு நீதிபதி எவ்வளவோ கேட்டுக் கொண்டும் முன் வைத்த காலைப் பின் வைக்க மறுத்தனர். நீதிமன்றத்தையே பரப்புரை மேடையாக மாற்றி இறுதி வரை தாங்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், சிறை சென்றனர் பெண்கள். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மட்டும் 73 பெண்கள் மற்றும் அவர்களுடன் 32 குழந்தைகளும் சிறை சென்றுள்ளனர். இவர்களோடு 1164 ஆண்களும் சிறை சென்றுள்ளனர்.

தி.மு.க.தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் மகளிர்அணி தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தது. பேரறிஞர் அண்ணா முதலில் தயங்கினார். பின்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் பங்குகளை நினைவு கூர்ந்தார்.அதனால் மகளிர் அணியை 21.8.1956-இல் உருவாக்கினார். என்.வி.நடராசன் வீட்டில் நடந்த அமைப்புக் கூட்டத்தில்,

சத்தியவாணிமுத்து தலைவராகவும் செயலாளர்களாக:

இராணி அண்ணாதுரை,

அருண்மொழிவில்வம்,

வெற்றிச்செல்வி அன்பழகன்.

புவனேசுவரி நடராசன்

ஆகியோரும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தயாளு கருணாநிதி,

நாகரத்தினம் கோவிந்தசாமி,

சுலோச்சனா சிற்றரசு,

பரமேசுவரிஆசைத்தம்பி,

என்எசுகேயின்மனைவி  டிஏமதுரம் முதலானோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்வை இங்கே குறிப்பிடுவதன் காரணம்  முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் பெ்ண்களின் தீவிர பங்களிப்பு இருந்தமையே பின்னர்க் கட்சிகளில் மகளிர் அணிகள் உருவாக அடித்தளமாக இருந்தது எனச் சுட்டிக்காட்டவே!

(தொடரும்)

Saturday, March 29, 2025

பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்! : சங்கப்புலவர்கள் பொன்னுரை– 6 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5 : தொடர்ச்சி)

               நல்லந்துவனார்கலித்தொகை 139, 1-3

நோ என்றால் துன்பம் எனப் பொருள்நோ என்பதிலிருந்து பிறந்ததே நோய்பிணியாளர்களுக்குத் துன்பம் தருவதால் பிணியும் நோய் எனப்படுகிறதுஇங்கே நோய் என்பது துன்பத்தையே குறிக்கிறது.

பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல் கருதும் அறத்தைச் செய்தல் சான்றோர் கடமை என்கிறார் புலவர் நல்லந்துவனார்.

பிற உயிரினத் துன்பத்தையும் தம் துன்பம்போல் ஒருநாள் கருதினால் போதாதுஎன்றும் கருத வேண்டும் என்கிறார் புலவர்இதுவே தமிழ் நெறி.

                (திருக்குறள் ௩௱௰௫  315)

என்கிறார் திருவள்ளுவரும்.

பிற உயிர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதாவிட்டால் அறிவினால் என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர்.

மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்லபறவையினம்விலங்கினம்ஊர்வன இனம்நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.

அடுத்தவர்க்கு வரும் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுதல் சான்றோர்க்கே கடமை எனில் இந்த உயர்ந்த பண்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமல்லவா?

தன்னைப்போல் பிறரை நினை என்னும் விழுமிய ஒழுக்க நெறியை இப்பாடலில் புலவர் வலியுறுத்துகிறார்நாமும் இப்பொன்னுரையை என்றும் பின்பற்றுவோம்.

Followers

Blog Archive