இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 19, 2011
291. ‘நான்’, ‘எனது’ என்னும் செருக்கினை ஒழிப்போர் உயர்ந்தோர் உலகம் புகுவர்.
292. பற்றினைப் பற்றாதவரைத் துன்பங்கள் பற்றா.
293. பற்றினை விடப் பற்றற்றவரைப் பற்றுக.
294. சொல்லப்படுவது எத்தன்மையாயினும் அதன் உண்மைப் பொருள் காண்பதே அறிவு.
295. வேண்டாமையே சிறந்த செல்வம்.
296. ஆசைக்கு அஞ்சுவதே அறமாகும்.
297. ஆசை இல்லையேல் துன்பமும் இல்லை.
298. வேண்டுவன கிட்டா; வேண்டாதவை போகா; இதுவே ஊழாகும்.
299. நன்மையே ஏற்போர் தீயவற்றையும் தாங்குக.
300.ஆள்வோர் எளிமையாயும் இனிமையாயும் இருக்க வேண்டும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 281-290)
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 17, 2011
281 துறவியிலும் உயர்ந்தவன் கொல்லாமை பேணுபவன்.
282 தன்னுயிர் போவதாயினும் பிற இன்னுயிர் போக்காதே.
283 கொன்றால் வரும் ஆக்கம் இழிவானதே.
284 நிலையற்றதை நிலையென எண்ணுவது அறியாமை.
285 சிறுகச் சிறுகச் சேருவதும் மொத்தமாகப் போவதும் செல்வத்
திற்கு இயல்பு.
286 நிலையற்ற செல்வம் பெற்றால் நிலையான அறம் உடனே செய்க.
287 நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் நிலையாமையே நிலைத்த உண்மை.
288 உறங்குவதும் விழித்தலும் போன்றது இறத்தலும் பிறத்தலும்.
289 எதன் எதன் மீதான பற்றை நீக்குகிறோமோ அதன் அதனில் இருந்து துன்பம்
இல்லை.
290 ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 271-280)
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 16, 2011
271 பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதுவதே அறிவின் பயன்.
272 உனக்குத் தீயன எனக் கருதுபவற்றைப் பிறருக்குச் செய்யாதே.
273 எவர்க்கும் எப்பொழுதும் எவ்வழியிலும் தீங்கு செய்யாதே.
274 பிறருக்குச் செய்யும் தீமை உனக்கே திரும்பும்.
275 துன்பம் செய்தவர் துன்பமே அடைவார்.
276 துன்பம் வேண்டாம் எனில் துன்பம் செய்யாதே.
277 கொல்லாமையே உயர் அறமாம்.
278 பகுத்துண்டு வாழ்தலே தலைசிறந்த பண்பாம்.
279 பொய்யாமையினும் நன்று கொல்லாமையே.
280 கொல்லா வழியே நல்ல வழியாகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 261-270)
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 15, 2011
261 சினம் கொண்டார் பிழைப்பது அரிது.
262 சினம் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடுதரும்.
263 சினம் கொண்டவர் இனத்திற்கே துன்பம் தரும்.
264 தீப் பிழம்பு போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே.
265 வெகுளியை மறந்தால் எண்ணியதை வெல்லலாம்.
266 சினம் உடையார் உயிர் இழந்தார்; சினம் இழந்தார் உயிர் உடையார்
போல்வர்.
267 செல்வமே கிடைத்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.
268 துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாமையே சிறந்தது.
269 தீமை செய்தவர்க்குச் செய்யும் தீமையும் தீதே.
270 துன்புறுத்துவோர்க்குத் தண்டனை நன்மை செய்தலே.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 251-260)
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 13, 2011
251 வாய்மை என்னும் அறம் செய்தால் பிற அறம் எதுவும் தேவையில்லை.
252 நீரால் உடல் தூய்மை ஆவது போல் உண்மையால் உள்ளம் தூய்மை ஆகும்.
253 சான்றோர்க்கு உண்மை என்னும் விளக்கே உண்மையான விளக்கு ஆகும்.
254 உண்மை பேசுவதைவிட உயர் அறம் வேறு இல்லை.
255 எளியோரிடமும் வலியோரிடமும் சினம் தீமையே தரும்.
256 தீயன தரும் சினத்தை மற.
257 மகிழ்ச்சியைக் கொல்லும் சினமே நமக்குப் பகை.
258 உன்னைக் காக்க வேண்டும் என்றால் சினத்தில் இருந்து காத்துக் கொள்க.
259 சினம் கொண்டவனையே கொல்லும்.
260 சினத்தின் அழிவு இனத்திற்காகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 241-250)
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 9, 2011
241 பொருள்¢ ஆசையில் திருடுபவன் அருளும் அன்பும் கொண்டு வாழ முடியாது.
242 திருட்டு ஆசை உடையோர் ஒழுக்கமுடையராய் வாழமாட்டார்.
243 களவு அறிந்தோர் நெஞ்சில் வஞ்சனையே நிலைக்கும்.
244 களவு வாழ்க்கை அழிவு வாழ்க்கை.
245 தீமை விளைவிக்காத சொல்லே வாய்மையாகும்.
246 குற்றம் இல்லாத நன்மையைப் பிறருக்குத் தரும் பொய்யும் வாய்மையாகும்.
247 மனமறிய பொய் சொன்னால் மனமே துன்புறுத்தும்.
248 பொய் சொல்லா உள்ளத்தான் உலகத்தார் உள்ளத்துள் உள்ளான்.
249 தானம் தவம் இரண்டையும் விட வாய்மையே சிறந்தது.
250 பொய்யாமை ஒன்றே எல்லா அறப் பயன்களையும் தரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 231 – 240)
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 8, 2011
231 துன்பம் பொறுத்தலும் செய்யாமையுமே தவமாகும்.
232 ஆக்கமும் அழிவும் தவத்தால் வரும்.
233 சுட்டால் சுடரும் பொன்போல் துன்பம் பட்டால் ஒளிர்வர்.
234 தன்னலம் அற்றவரை மன்னுயிர் தொழும்.
235 உலகம் பழித்ததை ஒழித்தால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலும் வேண்டா.
236 கூடா ஒழுக்கம் கேடாய் முடியும்.
237 பிறரால் எள்ளப்பட வேண்டாதவன் கள்ளத்தனத்தில் இருந்து தன் நெஞ்சைக் காக்கவும்.
238 திருட எண்ணுவதும் தீது.
239 திருட்டுச் செல்வம், பெருகுவது போல் தோன்றினாலும் அழியும்,
240 திருட்டு ஆசை தீராத் துன்பம் தரும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 221 -230