Saturday, January 3, 2015

கலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில் - cuisine


cuisinekalaicho,_thelivoam01

அட்டில் - cuisine

தமிழில் சமையலறை எனப் பொதுவாகச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் இருவகையாகச் சொல்லப்படுகிறது; kitchen-அடுக்களை, சமையலறை என வேளாண்துறையிலும் மனை அறிவியல் துறையிலும் கையாளப்படுகின்றது. cuisine-என்பதும் சமையலறை என்றே கையாளப்படுகிறது. அவற்றுக்குத் தமிழிலும் தனித்தனிச் சொற்களைக் கையாளலாம்.
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறுபாண் ஆற்றுப்படை 132
அறம்நிலைஇய அகன்அட்டில் – பட்டினப் பாலை 43
விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில் – பட்டினப் பாலை 262
அட்டில் ஓலை தொட்டனன் நின்மே –நற்றிணை 300.12
உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து – அகநானூறு 168.7
சிறுபாணாற்றுப்படை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றிலும் அட்டில் கையாளப்பட்டுள்ளது. அட்டில்(cuisine)  என்பது சமையல் முறையையும் குறிக்கும்
எனவே,
சமையலறை- kitchen
அட்டில்- cuisine என வேறுபடுத்தலாம்.
 - இலக்குவனார் திருவள்ளுவன்


Friday, January 2, 2015

கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker



cooker
kalaicho,_thelivoam01

21: அடுகலன்- cooker



சமைக்கப்பயன்படுத்தும் ஏனம் ஆங்கிலத்தில் குக்கர்/cookerஎனப்படுகிறது. அதனைப் பெரும்பான்மையர் அவ்வாறே கையாள்கின்றனர். வேளாணியலிலும் மீனியலிலும்
cooker-சமையற்கலன் எனக் குறித்துள்ளனர். அடு என்பதன் அடிப்படையில் அடுகலன் என்பதே பொருத்தமாக இருக்கும்.
அடுகலன்- cooker/cooking vessel
அடு என்பதன் அடிப்படையில் உருவாயுள்ள மற்றொரு சொல்
அடுமனை-பேக்கரி (bakery), பேக்-அவுசு (bake-house). இவற்றின் அடிப்படையில் பின்வரும் சொல்லாக்கங்களை உருவாக்கலாம்.
அடுவப்பம் (உரொட்டி/bread), மெத்தப்பம்(bun)முதலானவை செய்யும் பணிகள்
அடுபணி – பேக்கிங் (baking)
இவற்றைச் செய்யும் பணியாளர்,
அடுநர்- பேக்கர் (baker)
 - இலக்குவனார் திருவள்ளுவன்
 

Thursday, January 1, 2015

கலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமகன் -male cook



female-cookkalaicho,_thelivoam01

 20:அடுமகள் -female cook ; அடுமகன் -male cook

 


அடு என்பதன் அடிப்படையில் சமையல் செய்யும் பெண் அடுமகள் எனப்படுகின்றாள்.
அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் - புறநானூறு399.1
நாம் இப்பொழுது female cook—சமைப்பவள்/பெண்சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகள் என்றே குறிக்கலாம்.
male cook-சமைப்பவன், ஆண் சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகன் என்றே குறிக்கலாம்.
அடுமகள் -female cook
அடுமகன் -male cook
- இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive