Saturday, October 29, 2011

vaazhviyal unmaikal aayiram 511-520: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 511-520


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 29/10/2011


511 சொல்லுதல் எளிது; சொல்லியதைச் செய்தல் அரிது.
512 சிறந்தோர் செயல் உயர்ந்தோராலும் போற்றப்படும்.
513 திண்ணிய எண்ணம் எண்ணியதைத் தரும்.
514 உருவத்தைப் பார்த்து இகழாதே,அச்சாணி இல்லையேல் தேரோட்டம் இல்லை.
515 கலங்காமல் தயங்காமல் கருமம் செய்க.
516 இறுதியில் இன்பம் தருவனவற்றைத் துன்பம் வந்தாலும் செய்க.
517 வினைத்திட்பம் உடையோரையே உலகம் விரும்பும்.
518 துணிவுடன் செயல்படு; துணிந்தபின் தயங்காதே.
519 செயலுக்கேற்றவாறு காலந்தாழ்ந்தோ விரைந்தோ செய்க.
520 முடியக் கூடிய வழியில் எல்லாம் செயல் ஆற்றுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 501- 510)

Friday, October 28, 2011

vaazhviyal unmaikal aayiram 501-510 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 501-510

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/10/2011



501 தவறென உணர்ந்தால் மீண்டும் செய்யாதே.
502 தாயின் பசியைப் போக்குவதற்குக் கூடப்; பழிப்பன செய்யாதே.
503 பழிச்செயல் தரும் செல்வத்தைவிடச் சான்றோர் வறுமையே சிறந்தது.
504 கடிந்தன செய்தால் முடிந்தாலும் துன்பம் தரும்.
505 பிறர் அழக் கொண்ட பொருள் நாம்; அழப் போகும்.
506 அறவழி வந்தன இழந்தாலும் மீண்டும் கிடைக்கும்.
507 குறுக்கு வழியில் வரும் பொருள் பச்சை மண்பாத்திரத்தில் வைக்கும் நீர்.
508 மன உறுதியே வினை உறுதி.
509 தீயன செய்யாமையும் துன்பம் வந்;தால் தளராமையுமே சிறந்த வழி.
510 வினை முடிக்கும் முன் விளம்பரம் தேடினால் துன்பமே வரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 491 – 500)


Thursday, October 27, 2011

Vaazhviyal unmaikal aayiram 491- 500 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 491-500

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/10/2011



491 வெல்லும் சொல் பிறிதின்றிச் சிறந்ததைச் சொல்க.
492 விரும்புமாறு கூறுக; கேட்பவற்றுள் பயனுள்ளவற்றை அறிக.
493 சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை உடையவரை வெல்லுவார் யாருமில்லை.
494 இனிதாய் முறைப்படக் கூறுவோனிடம் உலகம் அடைக்கலம்.
495 சுருக்கமாய்ச் சொல்லத் தொpயாதவர் விரிவாய்ப் பேச விரும்புவர்.
496 கற்றதைச் சொல்ல இயலாதவர் மணமற்ற மலர் ஆவார்.
497 ஆக்கம் தருவது துணைநலம்;; வேண்டுவன தருவது வினைநலம்.
498 புகழும் நன்மையும் தராதனவற்றை என்றும் கைவிடுக.
499 நற்பெயர் வேண்டுமாயின் தீச்செயல் தவிர்க்க.
500 நல்லெண்ணம் கொண்டோர் அல்லல் வரினும் இழிவான செய்யார்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 481 – 490)



Vaazhviyal unmaikal aayiram 481-490 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 481-490

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/10/2011


481 துன்பத்தின் இலக்கு உடம்பு என உணர்ந்து கலங்காதிரு.
482 துன்பத்தை இயல்பு என்போன் துன்புற மாட்டான்.
483 துன்பமே இன்பம் எனக் கொண்டால் பகைவரும் மதிப்பர்.
484 நூலறிவுடன் உலகியல் அறிவும் தேவை.
485 தீயன எண்ணும் அமைச்சர் பல கோடிப் பகைவர்க்குச் சமம்.
486 திறனில்லாதவர் நன்கு திட்டமிட்டாலும் அரைகுறையாகவே முடிப்பர்.
487 ஆற்றலில் சிறந்தது பேச்சாற்றல்.
488 ஆக்கமும் கேடும் தருவது சொல்க.
489 கேட்டவர் மகிழவும் கேளாதவர் கேட்க விரும்பவும் அமைவதே சொல்வன்மை.
490 திறன் அறிந்து சொல்லுதலே அறமும் பொருளுமாகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 471 – 480)




Monday, October 24, 2011

vaazhviyal unmaikal aayiram 471-480 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 471-480

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/10/2011





471 முயற்சி செல்வத்தைத் தரும்; முயலாமை வறுமையைத் தரும்.
472 பொறியின்மை குறைபாடு அன்று; முயற்சி இன்மையே குறைபாடாகும்.
473 தெய்வத்தால் ஆகாததையும் முயற்சி முடித்துத் தரும்.
474 அயரா உழைப்பு விதியை ஓட்டும்.
475 இடையூறுகளைச் சிரிப்புடன் எதிர்கொள்க.
476 வெள்ளம் போன்ற துன்பமும் உள்ளத்தின் உறுதியால் நீங்கும்.
477 துன்பத்திற்குத் துன்பப்படாதவர் துன்பத்திற்கே துன்பம் தருவர்.
478 கடுமையான உழைப்பாளியிடம் இடுக்கண் இடர்ப்படும்.
479 மனம் கலங்காதவன் அடுக்கடுக்காய் வரும் துன்பத்திற்கே துன்பம் தருவான்.
480 செல்வம் பெற்ற பொழுது பேணாதவர் இல்லாத பொழுது அல்லல் படுவதேன்?
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 461 – 470)


Vaazhviyal unmaikal aayiram 461-470 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 461-470

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/10/2011



461 காலத்தாழ்ச்சி கெட்டுப் போகவிரும்புவோரின் ஊர்தி.
462 சோம்பல் குடிப்பெருமைக்குக் கேடு.
463 குடி உயர்த்த மடி அகற்று. (மடி-சோம்பல்)
464 யார் துணை இருப்பினும் சோம்பல் உடையார் பயனடையார்.
465 மடியுடையார் இகழ் அடைவார்.
466 சோம்பல் இல்லா ஆளுமை உலகையே ஆளும்.
467 முடியாது என்று தளரக் கூடாது.
468 முயற்சியால் பெருமை வரும்.
469 செயலை முடிக்காதவனை உலகம் ஏற்காது.
470 இன்பம் விரும்பாமல் செயலை விரும்புபவன் சுற்றத்தாரின் துன்பம் துடைக்கும் தூண்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 451 – 460)


Sunday, October 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 451-460: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 451-460


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/10/2011


451 கண்ணோட்டம் இல்லாதவர் நிலத்திற்குச் சுமை.
452 செயலில் ஊறு நேரா வண்ணம் கண்ணோட்டம் உடையவர்க்கு உரியது இவ்வுலகு.
453 தனித்தனி மூன்று ஒற்றர் மூலம் செய்தியை அறிக.
454 ஒற்றர்க்குச் சிறப்பு ஊரறியச் செய்யற்க.
455 பொருளுடைமை நீங்கும்; உள்ளமுடைமை நிலைக்கும்.
456 ஊக்கம் உடையவனிடம் வழிகேட்டு ஆக்கம் செல்லும்.
457 உள்ளத்தின் அளவே உயர்வின் அளவு.
458 மனவலிமையே செல்வம்.
459 முயற்சி உடையவனே உயர்ச்சி அடைவான்.
460 சோம்பல் துன்பமே தரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 441 – 450)

Followers

Blog Archive