Friday, November 25, 2011

Vazhviyal unmaikal aayiram 748-757 iniyavai naarpathu : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 748-757: இனியவை நாற்பது

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


91. முற்றிலுமாய் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுக,
92. ஆள்வோர், ஒருவரிடம் மட்டும் பற்று வைக்காமல் பல்லுயிர்கள் மீதும் அன்பு வைக்க,
93. பொறாமை கொண்டு பேசாதே,
94. சினம் நீக்கிச் செப்பமுடையவராய் வாழ்க,
95. கண்ட பொருளை யெல்லாம் விரும்பிக் கவர்ந்து கொள்ளாமல் மறந்து விடுக,
96. இளமையும் மூப்பின் பகுதி என உணர்க,
97. விலை மகளிரை நஞ்சென எண்ணுக,
98. பிச்சை கேட்பவன் கோபம் கொள்ளாதே,
99. குடிசையில் இருந்தாலும் துன்பம் கொள்ளாதே,
100. பேராசை கொண்டு அறவழி நீங்கும் மனத்தளர்ச்சி கொள்ளாதே,
101. பழுது இல்லா நல்ல நூற்களைக் கற்று வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 81-90)
0
Tags:  ,


Vaazhviyal unmaikal aayiram 738-747: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 738-747: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011



81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0

Thursday, November 24, 2011

Vaazhviyal unmaikal aayiram 728-737 : inaiyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 728-737 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011


81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0





Wednesday, November 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 718-727: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 718-727: – இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011


71. செல்வத்திற்கு அழிவு வந்தாலும் நல்லதல்லன சொல்லாத தெளிவு கொள்க,
72. கயவரிடம் விலகி வாழ்க,
73. உயர்வு எண்ணி ஊக்கம் கொள்க,
74. யாரையும் எளியவர் என்று இகழ்ந்து பேசாமல் புகழ்பட வாழ்க,
75. பிறர் செய்த நன்றியின் பயனை நினைத்து வாழ்க,
76. நடுவர் மன்றத்தில் ஒருதலைச் சார்பாக உரைக்காதே,
77. யாருமறியாமல் அடைக்கலமாய் வந்த பொருளாயினும் கவர்ந்து கொள்ளாதே,
78. அடைக்கலமாய் வந்தவர் மேலும் துன்புறாமல் செய்க,
79. கடன் பெற்றாவது செய்ய வேண்டியவற்றைச் செய்க,
80. சிறப்பான கேள்வியறிவு இருப்பினும் ஆராய்ந்து சொல்லுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 61-70)
0

Tuesday, November 22, 2011

Vaazhviyal unmaikal aayiram 708-717 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 708-717: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

 இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/11/2011


61. கல்லாதவரை விட்டு நீங்குக,
62. நிலையற்ற அறிவுடைய நிறைவற்ற மனிதரை விட்டு நீங்குக,
63. ஒருபொருளை வேண்டி வந்தவரின் விருப்பத்தை அழிக்காதே,
64. மதிக்கா இடத்தில் வாழாத மன எழுச்சி கொள்க,
65. உள்ளவற்றை மறைக்காமல் கொடுக்கும் அன்பு கொள்க,
66. தானம் கொடுக்கும் தகையாண்மை கொள்க,
67. தன்மானத்திற்கு இழுக்கு நேராமல் வாழ்க,
68. குற்றத்தைப் பொpது படுத்தாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்க,
69. செய்ய முடியாதவனைச் செய்யுமாறு வற்புறுத்தாதே,
70. நிலையற்றது வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்க,

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 51-60)

0

Monday, November 21, 2011

vaazhviyal unmaikal aayiram 698-707: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 698-707 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


51. வருவாய் அளவறிந்து பிறருக்குக் கொடுப்பீர்,
52. ஒருவர் பக்கம் சாயாத நடுவுநிலைமை கொள்க,
53. பெரும் பயன் கிடைத்தாலும் விரும்பியவாறெல்லாம் செய்யாமல் தம் இயல்பில்மாறுபடாமல் வாழ்க,
54. சோலை வளர்த்தலும் குளம் தோண்டலும் செய்க,
55. அறவோர்க்குக் கொடுப்பீர்,
56. சூதாடிகளுடன் சேராதே,
57. வெற்றி அடைய வேண்டி சினம் அடையாதே,
58. தன்னால் முடியக் கூடிய வரையில் செயல் புரிக,
59. தம்மிடம் இல்லாத பொருளுக்கு ஏங்கித் துன்புறாமல் கிடைத்தது கொண்டு முடிந்ததைச் செய்க,
60. ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளை அடக்குக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 41-50)
0


Sunday, November 20, 2011

Vaazhviyal unmaikal aayiram 678-697: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 678-697: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011


41. தவவாழ்க்கை இனிது,
42. பெற்றோரைக் காலையில் வணங்கி எழுக,
43. நண்பரைப் பற்றிப் புறஞ்சொல் கூறாது வாழ்க,
44. பணிவான வாழ்க்கை இனிது,
45. குறைவில்லாத செல்வம் பெற்றுத் தக்கவர்க்குக் கொடுப்பீர்,
46. வஞ்சகருடன் சேராமல் விலகுக,
47. புலவர்களின் சொற்களைப் போற்றுக,
48. பிறர் பொருளைப் பறிக்;காமல் வாழ்க,
49. அறம் புரிந்து அல்லவை நீக்குக,
50. மறந்தும், சிறப்பில்லா அறிவிலிகளை அறிந்து சேராமல் வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 31-40)
0

Followers

Blog Archive