வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/11/2011
552 தீமையல்லாத வழியில் வந்த பொருளே அறத்தையும் இன்பத்தையும் தரும்.
553 அருளோடும் அன்போடும் வராத பொருள் ஈட்டத்தை நீக்குக.
554 அன்பின் மகளாகிய அருள், பொருள் என்னும் செவிலித் தாயாலேயே வளருவாள்.
555 செல்வம் சேர்க்க.
556 நல்வழியில் பெற்ற பொருள் அறமும் இன்பமும் தரும்.
557 பகைவனுக்கு விலைபோகாத் தொன்று தொட்டச் சிறப்பு உடையதுவே படை.
558 எமனே வந்தாலும் எதிர்ப்பதே படை.
559 முயல் வேட்டையின் வெற்றியைவிட யானை வேட்டையின் தோல்வியே சிறந்தது.
560 பகைவர்க்குக் குறைபாடு வந்த பொழுது உதவுவதே சிறந்த பேராண்மை.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 541-550)
No comments:
Post a Comment