வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/11/2011
542 நல்விளையுள், தக்கார், தாழ்விலாச் செல்வர் சேர்ந்ததே நாடு.
543 மிகுந்த பசி, நீங்கா நோய், அழிக்கும் பகை அற்றதே நாடு.
544 கேடு அறியாத, கேடு வந்தாலும் வளம் குன்றாத நாடே சிறந்த நாடு.
545 நோய் இன்மை, செல்வம், (அறிவு, பொருள்) ஆக்கம், இன்பம், பாதுகாப்பு உடையதே நாடு.
546 தன்னிறைவான நாடே நாடு.
547 எல்லா வளம் இருப்பினும் நல்லாட்சி இல்லையேல் ஒன்றும் இல்லை.
548 வினைச் சிறப்பு இல்லையேல் பாதுகாப்பால் பயன் இல்லை.
549 பொருள் இல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருளைப் போல் வேறு பொருள் இல்லை.
550 இல்லாரை எள்ளுவர்; செல்வரைச் சிறப்பிப்பர்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 531-540)
No comments:
Post a Comment