வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 09/11/2011
582 நட்பு உரிமையால் கேளாமல் செய்வதை ஏற்பதே சிறந்த நட்பு.
583 இனிமையாய் இருப்பினும் பண்பில்லார் நட்பு குறைவதே நன்று.
584 பயன்நோக்கிப் பழகும் நண்பர் கள்வருக்கு இணையானவர்.
585 செய்யக் கூடியதையும் செய்யாமல் கெடுக்கும் நட்பைக் கைவிடுக.
586 சொல் வேறு செயல்வேறு உடையவர் நட்பு கனவிலும் துன்பமே.
587 முகத்தில் இனிமையும் அகத்தில் வஞ்சகமும் கொண்டோர் நட்பைக் கைவிடுக.
588 மனத்தால் இணையாதவரை நம்பாதே.
589 கயவர் தொழும் கையிலும் ஆயுதம் இருக்கும்;அவர் அழுகை
யிலும் வஞ்சகம் இருக்கும்.
590 வெளியே புகழ்ந்து உள்ளத்தில் இகழ்வோரை உள்ளத்தில் வைக்காதே.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 571-580)
No comments:
Post a Comment