thedupori-thalaippu6

9.] தண்டியலங்காரம்
தேடுதல் பகுதி சென்றால்
சொல் தேடல்
பாடல் தேடல்
ஆகியன உள்ளன. ஆனால், ஒவ்வொரு பக்க மேற்தலைப்பிலும் தேடுபொறி இடம் பெறவில்லை. இடப்பக்க அட்டவணையில் உள்ள உரைப்பகுதிக்குச் சென்று சொடுக்கினால்தான் உரையைப் படிக்க இயலும். அவ்வாறு சொடுக்காமல், மூலப்பகுதிகளில் உள்ள ‘உரை’ என்னும் இடத்தில் சொடுக்கினால் அப்பகுதியைக் காண இயலாது. உரைப் பகுதி செயல்படவில்லை என்ற எண்ணம் அல்லது உரை இல்லை என்ற எண்ணம் படிப்போருக்கு ஏற்படும்.
10] நன்னூல்
முதலில் உரைநூல் தேர்வு செய்தால் மட்டுமே உரையை அறிய இயலும் என இருந்தது. பின்னர் நூற்பா அமையும் பக்கங்களிலேயே இதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், மூலப்பகுதியில் அல்லது மூலப்பகுதி உள்ள பக்கங்களில் உள்ள உரைப்பகுதி இணைப்பு மூலம் செல்லும் உரைப்பகுதியில் தேடுதல் வாய்ப்பு இல்லை (பட உரு 32).
தேடுபொறி32
தேடுபொறி32
முகப்பு அட்டவணைமூலம் நேரடியாக உரை நூல்களுக்குச் சென்றால், ஆறுமுகநாவலர் காண்டிகையுரை நூலில் பக்கம் தேடல், சொல் தேடல் மட்டும் உள்ளன(படவுருக்கள் 33 &34).
தேடுபொறி 33
(தேடுபொறி 33)
தேடுபொறி 34
தேடுபொறி 34
மயிலை நாதர் உரை, சங்கர நமச்சிவாயர் உரை ஆகிய) பிற உரைநூல்களில்  பக்கம்  தேடல், பாடல்  தேடல், சொல் தேடல்  என முப் பகுதியும் வரும்(படவுருக்கள் 35, 36 & 37)
தேடுபொறி 35
(தேடுபொறி 35)
தேடுபொறி 36
(தேடுபொறி 36)
தேடுபொறி 37
(தேடுபொறி 37)
ஒரே நூலின் உரை நூல்களில்கூடத் தேடுபொறிகளில் சீர்மைத்தன்மை இல்லை.
(தொடரும்)
ilakkuvanar thiruvalluvan