27 September 2015 No Comment
84.] சங்க இலக்கிய ஓலைச்சுவடிகள்
இவற்றுள் குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,
மலலைபடுகடாம் ஆகியவற்றின் ஓலைச்சுவடிகள் இல்லை. அவ்வாறு இல்லை என்பதற்கான
குறிப்புகள் இல்லை. பிறவற்றுள் ‘ஓலை எண் தேடுதல்’ பகுதி மட்டும் உள்ளது.
சொல் தேடுதல் அமையவில்லை (பட உரு 67).
சிலவற்றுள்
மேற்குறித்தவாறு தேடுதல் பகுதி ஓலை எண் வழி அறிவதற்கு உள்ளது. சிலவற்றுள்
பின்வரும் வகையில் தேடுதல் பகுதி அமைந்துள்ளது (பட உரு 68).
“சுவடி உள்ளடக்கம்” எனக்
குறிக்கப்பட்டிருப்பினும், உள்ளடக்கம் தட்டச்சு வடிவில் தரப்பட்டவை எனத்
தெரிவிக்கப்பட்டிருப்பினும் பலவற்றுள் சுவடி உள்ளடக்கம் தட்டச்சு வடிவில்
இல்லை. அனைத்திற்கும் தட்டச்சு வடிவம் தரப்படுவதே முறையாகும். அத்துடன்
உரிய சங்க இலக்கிய நூல்கள் பக்கங்களுக்கும் இணைப்பு இருக்க வேண்டும்.
ஓலைச்சுவடிகள் தலைப்பில், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவற்றுடன் சங்கச் செய்யுள் என்னும் தலைப்பும் பின்வருமாறு உள்ளது (பட உரு 69).
சங்க இலக்கியத் தொகுப்பில் இல்லாமல்
மேற்கோள்வழி அறியப்பட்ட பாடல்களாயின் குறிப்பு தேவை. சங்க இலக்கியப்
பாடல்களுக்கும் சங்கச் செய்யுள்களுக்கும் என்ன வேறுபாடு என்று புரியவில்லை.
இரண்டும் ஒன்றெனில் மீள் பதிவு தேவையில்லை. சுவடிகளுக்கு வகை எண்
தரப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் ஒவ்வொரு நூற்பக்கத்திலும் இருக்க
வேண்டும். இல்லாவிட்டால் சுவடி எண் கொண்டு தேட இயலாது. பிற இலக்கியங்களின்
ஓலைச்சுவடிகளுக்கும் இதே போல் படிப்பதற்கும் தேடுதற்கும் தட்டச்சு
வடிவத்திற்கும் ஒத்த வாய்ப்பு அளிக்க வேண்டும்.
85.] பாட்டும் தொகையும்
இதில் எவ்வகைத் தேடல் வாய்ப்பும் இல்லை.
86.] உரோமன் வடிவ நூல்கள்
இவற்றுள் தேடுதல் பகுதி இல்லை.
இவற்றுள் உரோமன் வடிவச்சொற்களுக்கு உரிய
தமிழ்ச்சொற்களும் உரிய பொருள்கள் தமிழ் வடிவிலும் உரோமன் வடிவிலும்
மொழிபெயர்ப்புடன் தரப்பட்டிருக்க வேண்டு்ம். பொருளே அறியாமலும் புரியாமலும்
அயல் மொழி வரிவடிவில் படித்து என்ன பயன்?
அரிய சொற்கள் அருகே சுட்டியைக் கொண்டுபோனால், தமிழ்வடிவமும் பொருளும் காணும் வாய்ப்பைத் தந்தால்தானே அயல்மொழியாளர் தமிழிலக்கியங்களை நன்கு புரிந்துகொள்ள இயலும். இல்லாவிட்டால்
இவற்றைத் தந்து என்ன பயன்? நாங்களும் ஒலிபெயர்ப்பு வடிவில் நூல்களை
அளித்துவிட்டோம் எனக் கணக்கு காடடுவதற்காக எதையும் அளித்து எப்பயனும் இல்லை
என்பதை த.இ.க.க. உணரவேண்டும்.
இவற்றை ஒப்பு நோக்கில் அறியப் பின்வரும் அட்டவணை துணை புரியும். (இதில் அகராதிகள் இடம் பெறவில்லை.)
-இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment