Tuesday, November 8, 2011

Vaazhviyal unmaikal aayiram 571-580 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 571-580

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 08/11/2011


571    இடையூறின்றி நிலைப்பதே நட்பு.
572    ஆராயாமல் நட்பு கொள்ளாதே; நட்பு கொண்டபின் விடாதே.
573    ஆராய்ந்து கொள்ளாத நட்பு சாவதற்கான துன்பத்தைத் தரும்.
574    பழிக்கு அஞ்சுபவனை நட்பாகக் கொள்க.
575    அறிவுறுத்தித் திருத்துவோரின் நட்பைக் கொள்க.
576    துன்பம் நட்பை அளப்பதற்குரிய அளவுகோல்.
577    ஊக்கம் இழக்கும் செயல்களைச் செய்யாதே.
578    துன்பத்;தில் கைவிடுவோரை நட்பாகக் கொள்ளாதே.
579    தீயோர் நட்பை விலக்குக.
580     மாசற்றார்; நட்பை நாடுக.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 561-570)



Know our scholars! :அறிவோம் அறிஞர்களை!

அறிவோம் அறிஞர்களை!


பதிவு செய்த நாள் : 08/11/2011


1. பாட்டறப் புலவர்
பைந்தமிழ்ப் புலவர்
பாடுவார் முத்தப்பர் (176 7-1829)


1.எண்ணங்களைப் பாடலாக்கிய அடுத்த விநாடியே. அவை எதிரே நடந்துவிடும் அற்புதத்தைக் கண்களில் காணவைத்த நிறைமொழிப் புலவர் அறம் பாடிய அருட்புலவர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்



Saturday, November 5, 2011

Vaazhviyal unmaikal aayiram 561-570 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 561-570

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 05/11/2011


561     தலைவரின் கண்ணில் நீர் வருமாறு வரும் இறப்பு பெருமை உடையது.
562        நட்பே சிறந்த காப்பு
563    வளர்பிறை போல் வளரும் பண்பாளர் நட்பு.
564    தேய்பிறை போல் தேயும் பேதையர் நட்பு.
565    படிக்கப் படிக்க இன்பம் தருவது போன்றது  பண்புடையாளர் தொடர்பு.
566    நகைத்து மகிழ்வதற்கு அல்ல நட்பு; இடித்துத் திருத்தவே நட்பு.
567    நட்பிற்குப் பழகுதல் வேண்டா; உணர்ச்சி போதும்.
568    முக நட்பு நட்பன்று; அகநட்பே நட்பு.
569    அழிவில் காத்து நல்வழி காட்டி உடன் துன்புறுவதே நட்பு.
570    உடை அவிழ்ந்தால் உடனுதவும் கை போல் துன்பம் வந்;தால்  விரைந்து நீக்குவதே நட்பு.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 551-560)


Friday, November 4, 2011

Vaazhviyal unmaikal aayiram 551-560: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 551 - 560

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/11/2011



551    பொருள் ஆகிய விளக்கு எண்ணிய நாட்டில் பகை இருள் போக்கும்.
552    தீமையல்லாத வழியில் வந்த பொருளே அறத்தையும் இன்பத்தையும் தரும்.
553    அருளோடும் அன்போடும் வராத பொருள் ஈட்டத்தை நீக்குக.
554    அன்பின் மகளாகிய அருள், பொருள் என்னும் செவிலித் தாயாலேயே வளருவாள்.
555    செல்வம் சேர்க்க.
556    நல்வழியில் பெற்ற பொருள் அறமும் இன்பமும் தரும்.
557    பகைவனுக்கு விலைபோகாத் தொன்று தொட்டச் சிறப்பு உடையதுவே படை.
558    எமனே  வந்தாலும் எதிர்ப்பதே படை.
559    முயல் வேட்டையின் வெற்றியைவிட யானை வேட்டையின் தோல்வியே சிறந்தது.
560     பகைவர்க்குக் குறைபாடு வந்த பொழுது உதவுவதே சிறந்த பேராண்மை.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 541-550)
 

Thursday, November 3, 2011

Vaazhviyal unmaikal aayiram 541-550 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்541 - 550

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/11/2011


541    அவைக்கு அஞ்சிச் சொல்லத் தொpயாதவர் இருந்தும் இல்லாதவராவார்.
542    நல்விளையுள், தக்கார், தாழ்விலாச் செல்வர் சேர்ந்ததே நாடு.
543    மிகுந்த பசி, நீங்கா நோய், அழிக்கும் பகை அற்றதே நாடு.
544    கேடு அறியாத, கேடு வந்தாலும் வளம் குன்றாத நாடே சிறந்த நாடு.
545    நோய் இன்மை, செல்வம், (அறிவு, பொருள்) ஆக்கம், இன்பம், பாதுகாப்பு உடையதே நாடு.
546    தன்னிறைவான நாடே நாடு.
547    எல்லா வளம் இருப்பினும் நல்லாட்சி இல்லையேல் ஒன்றும் இல்லை.
548    வினைச் சிறப்பு இல்லையேல் பாதுகாப்பால் பயன் இல்லை.
549    பொருள் இல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருளைப் போல் வேறு பொருள் இல்லை.
550    இல்லாரை எள்ளுவர்; செல்வரைச் சிறப்பிப்பர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 531-540)


Wednesday, November 2, 2011

Vaazhviyal unmaikal aayiram 531-540 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 531-540

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 02/11/2011



531    அறிந்தவரிடம் அறிந்தவராய் நடந்து கொள்க.
532    அறியாதவரிடம் அறியாதவராய் நடந்து கொள்க.
533    உணரும் அறிவுடையோர் முன் பேசுக.
534    நல்லவையில் பேசுவோர் புல்லவையில் பேசற்க.
535    கற்றவர் முன் தெளிவாகப் பேசுநரே கற்றவர் ஆவார்.
536    போர்க்களத்திற்கு அஞ்சாதவரும் அவைக்களத்திற்கு அஞ்சுவர்.
537    கற்றதைக் கூறிக் கல்லாததை அறிக.
538    அஞ்சுவோருக்கு வாளால் என்ன பயன்? அவை அஞ்சுவோருக்குக் கற்ற நூலால் என்ன பயன்?
539    சொல்லும் திறனற்றோர் படித்துப் பயனில்லை.
540    நல்லார் அவை அஞ்சுபவர் கல்லாதவரிலும் கடையராவார்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 521-530)
 
 

Tuesday, November 1, 2011

Vaazhviyal unmaikal aayiram 521-530 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 521-530

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 01/11/2011


521    செயலும் பகையும் குறையாய் முடிப்பது பாதி அணைத்த தீ போல்அழிவு தரும்.
522    பொருள், கருவி, காலம், செயல், இடம் முதலியவற்றை ஆராய்ந்து செய்க.
523    செயலின் முடிவு, வரும் இடையூறு, கிடைக்கும் பயன் பார்த்துச் செய்க.
524    செய்யும் முறை அறிந்தும் பட்டறிவு உள்ளவரின் துணை கொண்டும் செயல் முடிக்க.
525    யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயல் மூலம் மற்றெhரு செயலை முடிக்கவும்.
526    வேண்டியவர்க்கு வேண்டியன செய்யும் முன் வேண்டாதவரை வேண்டியவராக்கு.
527    தாழ்வினைத் தடுக்க உயர்ந்n;தாரைத் துணைக்கொள்.
528    கடமை, காலம், இடம் உணர்ந்து சொல்பவனே தூதன்.
529    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுதலே சொல்வன்மை.
530    பேசும் அவையறியாதவர் சொல்லும் வகையறியாதவர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 511-520)



Followers

Blog Archive