Saturday, April 13, 2019

நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்


நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும்

 சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப்பரிமாறிக்கொள்கிறோம்.  ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கிலஆண்டுமல்லகிறித்துவ ஆண்டுமல்லநடைமுறையில் இவ்வாண்டு பயன்பாட்டில் உள்ளமையால் இதனை நாம் நடைமுறை ஆண்டு என்று சொல்லலாம்.

கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும்எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர்.கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தனஅப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது.
கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்றுஅழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது.
அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய மருத்துவர்வானியல் அறிஞர்மெய்யியலாளர்காலக்கணிப்பர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார்இவர் உலுயிகி  இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார்இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது.
உலகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கனவு கண்டாலும் அவர் கனவு நனவாகும் என எதிர்பார்த்திருக்கவில்லைஅலோசியசு மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கனவு நனவாகியதுதொடக்கத்தில் ஆண்டுமுறை மாற்றத்திற்கான கருத்துருவை அவர்தான் அளித்திருந்தார்எனினும் 1575 இல் அவரது தம்பி அந்தோனியோ இலிலியோ (Antonio Lilio) நாட்காட்டிச் சீர்திருத்த ஆணையத்திடம் அதனை அளித்தார்இந்த ஆணையம் நாட்காட்டி மீட்புப் புதுச் செறிவுத் திட்டம்(Compendium novae rationis restituendi kalendarium) என்ற பெயரில் 1577 இல் அச்சிட்டு 1578இல் உலகிலுள்ள உரோமன் கத்தோலிக்கு அமைப்புகளுக்குஅனுப்பியது.
அவற்றின் ஒப்புதலையும் சில திருத்தஙு்களையும் ஏற்றுஇவ்வாண்டு முறையைத் திருத்தந்தை பதின்மூன்றாம்கிரகோரி [Pope Gregory XIII,  07.01.1502 – 10.04.1585] 24.02.1582 இல் நடைமுறைப் படுத்தினார்எனவே,இதனைக் கிரகோரியன் ஆண்டு அல்லது கிரிகோரியன் நாட்காட்டி என அவர் பெயரால் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் 8 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டுமுறையைப் பின்பற்றினஇப்பொழுது பெரும்பாலான உலக நாடுகள் இம்முறையையே பயன்படுத்துகின்றன.
இயேசுநாதர் பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் குறிக்கப் பெற்றமையால் கிறிததுவ ஆண்டுஅல்லது ஆண்டவரின் ஆண்டு அல்லது  பொதுமுறை ஆண்டு என்றும் அழைக்கின்றனர்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்காகும் காலம் என்பது 365 நாள் 5 மணி நேரம் 49 நிமையம் 12நொடி ஆகும்கணக்கிடுவதற்கு  எளிமையாக இருக்கும் பொருட்டு 365 நாள் என்பதையே ஆண்டுக் காலமாகக் கொள்கிறோம்ஏறத்தாழ கால் நாள் குறைவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 366 நாள் எனக் கணக்கிடுகிறோம்இதுதான் மிகைநாள் ஆண்டு(leapyear). எனினும்400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளில் மிகை நாள் இருக்காதுஅஃதாவது 1900, 2100,2200,2300 ஆகியனமிகைநாள் ஆண்டுகளன்றுஆனால் 2000, 2400,2800 முதலான ஆண்டுகள் மிகைநாள்ஆண்டுகள்.
3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்ற தொல்காப்பியத்தில் அதன் ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவதன் வாயிலாகத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு இருந்தே 6பருவங்கள் கொண்ட ஆண்டு முறை இருந்தது என்பதை அறிகிறோம்ஒவ்வொரு பருவத்திற்கும் 2 மாதங்கள்எனவேஆண்டிற்கு 12 மாதங்கள்இதனைப் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்மார்கழியும் தையும் முன்பனிக்காலம்மாசியும் பங்குனியும் பின்பனிக்காலம் சித்திரையும் வைகாசியும் இளவேனில் காலம்ஆணியும் ஆடியும் முதுவேனில் காலம் என விளக்குகிறது. (ஆவணி முதலான மாதங்களின் பெயர்கள் யாவும் தமிழே எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான தமிழறிஞர்கள் மெய்ப்பித்துள்ளனர்.)
பூமி தன்னைத்தானே சுற்றும் கால அளவினை நாளாக வகுத்தனர் தமிழர்கள்.
நிலா பூமியைச் சுற்றிவரும் கால அளவைத் திங்கள் அல்லது  மாதம் என்றனர். (மதியால் அளவிடப்படும் காலம் மாதம் எனப்படுவது தமிழே). பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலத்தை ஆண்டு என வகுத்தனர் நம் தமிழ் முன்னோர்கள்இவ்வாறாகஉரோமானியர்கிரேக்கர் முதலான அன்றைய அயல்நாட்டார் ஆண்டிற்குப் பத்து மாதங்கள் என வரையறுத்திருந்த பொழுது துல்லியமாக 12மாதங்கள் கொண்டது 1 ஆண்டு எனக்   காலத்தைப் பகுத்திருந்தனர்.
எனவே பொதுமுறை ஆண்டு  அல்லது நடைமுறை ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்த தமிழ் ஆண்டுப் பகுப்புச் சிறப்பை நாம் மறந்துவிட்டோம்எந் த ஆண்டு முறையைப் பின்பற்றினாலும் நம் ஆண்டுச் சிறப்பை நாம் மறவாதிருப்போம்.
திருவள்ளுவர் ஆண்டுதொல்காப்பியர் ஆண்டுபெரியார் ஆண்டுகொல்லம் ஆண்டு,பசலிஆண்டு என்றெல்லாம் கூறுவதுபோல் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஆண்டுகள் பழக்கத்தில் உள்ளன. இருப்பினும் அனைவரும் செய்திகள்வரலாற்றுக் குறிப்புகள் முதலானவற்றில் கிரகோரியன் ஆண்டுமுறையையே நடைமுறையில் பயன்படுத்துவதால் இதனை நடைமுறை ஆண்டு எனலாம்.
 அவ்வாறாயின் தமிழ் ஆண்டு எது எனலாம்இன்றைய நிலையில் நாம் தை முதல்நாள் பிறக்கும் காலப் பகுப்பையே தமிழ் ஆண்டுப் பிறப்பாகக்கெண்டாடுவோம்அதே நேரம்சித்திரைப் பிறப்பையும் புறந்தள்ள வேண்டா.
சித்திரைத் தொடக்க ஆண்டு முறைக்குத் தவறாகப் புனையப்பெற்ற கதையும்பழந்தமிழ்ப்பெயர்களை மாற்றி அயற்பெயர்களைச் சூட்டிய கொடுமையும்நீங்கவே தமிழறிஞர்கள் திருவள்ளுவர் ஆண்டினை அறிமுகப்படுத்தினர்.
இன்றைய தமிழ்த் தலைறையினரின் 100க்குத் 90 பெயர்கள் தமிழாக இல்லை. பலரின் புனை பெயர்கள் தமிழாக இல்லை. அதனால் நாம் அவர்களைத் தமிழர் அல்லர் எனச் சொல்ல முடியாது. சித்திரை ஆண்டுப் பிறப்பின் பெயர்களை இடைக்காலத்தில் அயற்பெயர்களாக மாற்றி விட்டனர். எனவே, அதனால் அதனை நாம் நம் ஆண்டு இல்லை என ஒதுக்க வேண்டா. பிரபவ முதலான ஆண்டு வட்டத்தை நாம் வேறு பெயர்களில் அழைக்கவும் வேண்டா. முதலாம் ஆண்டு முதல் 60 ஆம் ஆண்டு ஈறாக நாம் பயன்படுத்துவோம்.
ஆவணியில் பிறக்கும் காலப் பகுப்பை நாம் தொல்காப்பியர் ஆண்டு என்போம். சூரியச் சுழற்சியின் அடிப்படையில் அது திசை மாறும் நாளான தைப் பிறப்பில் தொடங்கும் காலமுறையைத் திருவள்ளுவர் ஆண்டாகக் கொண்டாடுவோம்.  வியாழன் சுழற்சி வட்டத்தின் அடிப்படையில் சித்திரையில் வருடையில் தொடங்கும் வருடத்தினை இளங்கோவடிகள் வருடம் எனக் கொண்டாடுவோம்.
நாளைக் குறிக்க வேண்டிய எல்லா இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்துவோம்.
அனைவருக்கும் சித்திரை வருட வாழ்த்துகள்!
– அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைஅகரமுதல

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 71-80: இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்
(குறள்நெறி)

71. மக்கள் அறிவுடைமை நம்மினும் மாநிலத்தவர்க்கு இனிது என உணர்!
72. மகனையும் மகளையும் பிறர் புகழுறுமாறு வளர்!
73. “பெற்றோர் செய்த தவம் யாதோ” எனச் சொல்லுமாறு வாழ்!
74. அன்பினை அடைக்கும் தாழ் இல்லை என அறி!
75. “எல்லாம் எனக்கே” என்று சொல்லாது பிறர்க்குத் தா!
76. பெற்றோர் அன்பால் பிறந்ததை எண்ணி அன்பு கொண்டு வாழ்!
77. அன்பினால் பழகும் விருப்பத்தையும் சிறந்த நட்பையும் பெறு!
78.அன்பின் பயனால் சிறப்பு பெறு!
79. அன்பை அறத்திற்கும் மறத்திற்கும் துணையாய்க் கொள்!
80. அன்பு இல்லாது அறத்தால் துன்புறாதே!
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்

Friday, April 12, 2019

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி?

2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்காகவும் உடன் நடத்தப்படுகின்ற இடைத் தேர்தல்களுக்காகவும் வழக்கம்போல் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்துள்ளன. வழக்கம்போல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துச் செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் பாசகவுடனும் பாசகவுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் வைத்துள்ள கூட்டணி மக்கள் யாவரும் அறிந்ததே.  ஆனால் இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றால் எதிர் விளைவுகளால் வெற்றி மாலை நழுவிப்போகும் என்பதே உண்மை.
வாக்காளர்களை விலைக்கு வாங்கி வாக்கு பெறும் ஊழல் முறை மிகவும் மோசமானது என்பதில் ஐயமில்லை. ஆனால், இதனைத் தடுத்து நிறுத்த அரசு நேர்மையான வழியைக் கையாள வேண்டும். எதிர்க்கூட்டணி வேட்பாளர் அல்லது அவரது உறவினர்கள், நண்பர்களிடம் பணம் இருந்தாலே கைப்பற்றிப் பரபரப்பை ஏற்படுத்துவது முறையல்ல்.
இயல்பான கையூட்டு வழக்கில் ஊழல் ஒழிப்புத் துறை என்ன செய்கிறது? பணம் கேட்டவரிடம் கொடுப்பதற்காக மை தடவிய பணத்தாள்களைக் கொடுத்து அனுப்பி கையூட்டு கேட்டவர் அதைப் பெறும்பொழுதுதான் கையும் களவுமாகப் பிடிக்கிறது. அதுபோல் வாக்காளர்கள் பணம் பெறும் பொழுது நடவடிக்கைஎடுத்தால் வாக்காளர்களும் பணம் வாங்க அஞ்சுவர். எனவே, பணம் கொடுக்க முன்வருவோர்களும் பின்வாங்கிச் செல்வர்.
எங்கேனும் தேர்தல் ஆணையத்தின் கூட்டணிக்கட்சியினரிடம் பறக்கும் படை பணத்தைப் பறிமுதல் செய்திருந்தால் அதற்கு இலக்கானவர் கட்சி மாற இருக்கிறார் அல்லது கட்சி மாறிவிட்டார் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.
கடலூர் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆளுங்கட்சித் தலைவர் வீட்டிலேயே அதிரடி ஆய்வா என மக்கள் வியந்த பொழுதுதான் அவர் கட்சி மாற இருக்கும் செய்தி வந்தது.
இதுபோல் உத்தரகாண்டம் பா.ச.க. தலைவர் அனில் கோயல், அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். பிறகுதான் தெரிந்தது அவர் கட்சியில் இருந்து நீங்கி விட்டார் என்று.
இவ்வாறு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும்  அதிகாரமில்லாதஇடைவேளை அரசு அரசின் துறைகள் மூலம் தவறான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணம் யாவும் திடீரென்று ஒருவரிடம் குவிந்திருக்க முடியாது. வருமானவரித்துறையினர் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரோதேர்தல் முடிந்த பின்னரோ நடவடிக்கை எடுக்கலாம். இப்பணம் வருமானவரியிலிருந்து தப்பிய பணமாக இருக்கலாமே தவிர திருட்டுப் பணமல்ல.
தி.மு.க.பொருளாளர் துரைமுருகன் முதலான தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் அவர்களது நண்பர்கள் அலுவலகங்களிலும் வீடுகளிலும் கைப்பற்றப்பட்ட பணமும்  வருமானவரித்துறையினரின் ஆய்விற்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால், இப்பொழுது மேற்கொண்டு பரபரப்பான செய்தியைப் பரப்பவிடுவதுஉள்நோக்கம் கொண்டதுதானே.
..மு.கட்சியின் கோரிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஓரவஞ்சனையுடன் தொடர்ந்து நடந்துகொள்வதற்குக் காரணமும் அதன்  ஆளுங்கட்சிக் கூட்டணிப் பாசத்தால்தான் என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
அண்மையில்  நாம் தமிழர் கட்சிவாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சியின்கரும்பு உழவர் சின்னம் தெளிவாக இல்லை என முறையிட்டும் கால வாய்ப்பு இல்லை எனத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. புதிய இளைய வாக்காளர்களிடம் செல்வாக்கு பெற்று வரும் கட்சி. நாடு முழுவதும் கூட்டணி யின்றித் தனித்துப் போட்டியிடும் தன்னம்பிக்கையுள்ள இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறாமல் போகலாம். ஆனால், பிறரின் வெற்றியை முடிவெடுக்கும் வகையில் இவர்கள் பெறும் வாக்குகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திட்டமிட்டுவாக்குப்பதிவு இயந்திரத்தில் அதன் சின்னம் மங்கலாக இருக்கும்படிவைத்துள்ளனர் என அக்கட்சியினர் நம்புவதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆந்திராவில் சனசேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் ச.ம.உ. மதுசூதன்(குப்தா)வாக்கு எந்திரத்தில் சின்னம் சரியாக வைக்கவில்லை என்பதால் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தினார் எனச் செய்தி வந்துள்ளது. ஆந்திரத் தேர்தலில் பல வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சரியாகச் செயல்படவில்லை எனவும் கலவரங்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் அமைதியாகநடைபெறத் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்அதற்குத் தன்னுடைய கூட்டணியை அது கைவிட வேண்டும்.
வாக்காளர்கள் எவ்விதத் தயக்கமும் குற்ற உணர்வுமின்றித் தேர்தல் கால பண அளிப்பை எதிர்பார்க்கின்றர். எனவே, அதிரடி ஆய்வுகளால் பணம் கைப்பற்றப்படுவதால், நமக்கு வரவேண்டிய பணத்தைப் பறிமுதல் செய்து விட்டனரே என எண்ணுகிறார்களே தவிர நேர்மையான நடவடிக்கை எனப் பாராட்டும் மனநிலையில் இல்லை. எனவே, பண இருப்பு உள்ள இடங்களில் அல்லது பணப்பெட்டிகள் இடம் பெயரும் ஊர்திகளில் அதிரடி ஆய்வு மேற்கொள்வதை விட, அந்த நேரங்களில் பொறுமை காத்து, வாக்காளர்களிடம்பணம் கொடுக்கும் பொழுது வாக்காளர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் வாக்காளர்களுக்கு ஏற்படும் அச்சம் தேர்தலில் பணம் பெறும் முதன்மையைத் தடுக்கும். ஆனால் இவ்வாறு செய்தால் தேர்தல் ஆணையத்தின் கூட்டணியில் உள்ள ஆளுங்கட்சியினரும் அவர்களது பிற கூட்டணியினரும் மக்களைக் கவனிக்க முடியாதே என ஒன்றும் செய்யாமல் இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அதன்மீது மக்களுக்கு எரிச்சல் ஏற்டும் விதமாகத்தான் உள்ளது. எனேவ, அதன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும்வாகைசூடும் கனவு பலிக்காதுஆதலின் இனியாவது தேர்தல் ஆணையம்கூட்டணியிலிருந்து விலகி நடுவுநிலைமயுடன் செயல்பட வேண்டும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.    (திருவள்ளுவர்திருக்குறள் 118)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைஅகரமுதல

Wednesday, April 3, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 61-70: இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்
(குறள்நெறி)

  1. காதற் துணையை அடைந்து கடவுட் பெருமையை அடை!
  2. புகழ்மிகு துணையால் பெருமித நடை கொள்!
  3. இல்லறப் பெருமையே பொலிவுநன்மக்களே அழகு! என உணர்!
  4. நன்மக்கட்பேறே சிறந்த பேறு என அறி!
  5. எப்பருவத்திலும் துன்பங்கள் நெருங்காவண்ணம் பழியிலா மக்கள் பெறு!
  6. நம் மக்கள் நம் செல்வம். அவர் முயற்சியால் அவர் செல்வம் வரும் என அறி!
  7. நம் மக்கள் சிறு கையால் தரும் உணவை அமிழ்தினும் இனிதாய்ச் சுவை!
  8. மக்களைத் தீண்டி உடலுக்கும் சொற்கேட்டுச் செவிக்கும் இன்பம் பெறு!
  9. மழலைச்சொற் கேளாமல் குழலும் யாழும் இனிதெனாதே!
  10. மக்களை முற்பட்டவராக ஆக்கு!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive