புவி உயிரிகள்
- இலக்குவனார் திருவள்ளுவன்
புவியில் உள்ள உயிரினங்களை ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை
விலங்குகள்
ஆகியன ஆகும்.
உட்கருவிலிகள், நுண்ணியங்கள் எனவும் பாசியங்கள் எனவும் இருவகைப்படும்.
நுண்ணியங்கள்,
அ.) கோளியங்கள், ஆ.) கோலியங்கள், இ.) சுருளியங்கள் என மூ வகைப்டும்.
ஒற்றை உயிர்மி உயிரிகள்
அ.) பிளவி, ஆ.) சுருளி, இ.) தாவி என மூவகைப்படும்.
தாவரங்கள்
அ.) பூக்கும் தாவரங்கள், ஆ.) குவிகாய்மரங்கள், இ.)படர் செடிகள், ஈ.) பூக்காத் தாவரங்களும் மூலிகைகளும், உ.) கடற்பாசிகள்என ஐவகைப்படும்.
பூஞ்சைகள்
அ.) நொதிப்பூஞ்சை, ஆ.) துருப்பூஞ்சை, இ.) மென்பூஞ்சை என மூவகைப்படும்.
விலங்குகள்
அ.) முதுகெலும்பில்லாதவை (20,00,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்), ஆ.) முதுகெலும்பு உள்ளவை(42,000 இற்கும் மேற்பட்ட சிறப்பினங்கள்) என இருவகைப் படும்.
முதுகெலும்பில்லா விலங்குகள்
கடற்பஞ்சுகள்
இழுதுமீன் கிண்ண வடிவிகள், பவழ உயிரிகள்
புழுக்கள்
மெல்லுடலிகள்( நத்தை, சிப்பி, இப்பி வகைகள்)
பூச்சிகள்
சிலந்திகள், தேள்கள்
நண்டு வகைகள்,
நட்சத்திர மீன்களும் முள்ளமைப்பு உயிரிகளும்
என 8 வகையாகப் பகுக்கப்பட்டுள்ளன.
முதுகெலும்புள்ள விலங்குகள்
பாலூட்டிகள்,
பறவைகள்,
ஊர்வன,
இருநிலை வாழ்விகள்(நீரிலும்நிலத்திலும் வாழ்வன)
மீனினங்கள்
என ஐவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன.
சாறுண்ணி, ஒட்டுண்ணி போன்ற கருப்படலமுள்ள உயிர்த்தொகுதியே பூஞ்சை என அழைக்கப் பெறுகின்றன. இவை, 90, 000 வகையினவாகும்.
நிலத்தில் அல்லது நீரில் ஓர் உயிரி இயல்பாக வாழுமிடமே வாழிடம் எனப்படும். நிலம், நீர் இரண்டையும் வாழிடமாகக்கொண்டவையே இரு நிலை வாழ்விகள்.
சேர்ந்து வாழும் ஒரே வகைத் தனி உயிரிகளின் தொகுதி வாழிருப்பு எனப்பெறும். சில உயிரிகள் நிலையான வாழ்விருப்பை அமைத்துக் கொள்ளும்.
உயிருள்ளனவும் உயிரற்றனவும் ஒன்றையொன்று சார்ந்து வாழும் தொகுதிமுறை சூழ்(நிலைத்)தொகுதி எனப்பெறும். சூழ்தொகுதியானது இயற்கைத் தொகுதி, செயற்கைத் தொகுதி என இருவகைப்படும்.
விலங்கின் கூட்டம் சாலம் என்றும் வருந்தம் என்றும் குலம் என்றும் கணம் என்றும் அழைக்கப் பெறும்.
நிறமாற்றம் : உயிரிகள் சூழ்நிலைக்கேற்ப தம் நிறத்தை மாற்றிக் கொள்ளுதல் .
இதன் மூலம் இரை கொல்லியிடமிருந்து தப்பிக்கவும் இரையாகும் உயிரிகளை ஏமாற்றவும் உதவும்.
மரபற்றுப்போன உயிரினங்கள், தாவரங்களின் எச்சமாகப் பாறைகளில் பாதுகாப்பாக அமைந்துள்ள படிவங்கள் தொல்படிவங்கள் எனப் படுகின்றன.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் உயிரினங்களை ஆராய வேண்டும்.

- உட்கருவிலிகள்(உட்கரு இல்லாதவை ; 10,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்)
- ஒற்றை உயிர்மி உயிரிகள்( உட் கரு உள்ளவை;70,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்)
- தாவரங்கள் (3,50,000 முதல் 4,00,000 வரையிலான கிறப்பினங்கள்)
விலங்குகள்
ஆகியன ஆகும்.
உட்கருவிலிகள், நுண்ணியங்கள் எனவும் பாசியங்கள் எனவும் இருவகைப்படும்.
நுண்ணியங்கள்,
அ.) கோளியங்கள், ஆ.) கோலியங்கள், இ.) சுருளியங்கள் என மூ வகைப்டும்.
ஒற்றை உயிர்மி உயிரிகள்
அ.) பிளவி, ஆ.) சுருளி, இ.) தாவி என மூவகைப்படும்.
தாவரங்கள்
அ.) பூக்கும் தாவரங்கள், ஆ.) குவிகாய்மரங்கள், இ.)படர் செடிகள், ஈ.) பூக்காத் தாவரங்களும் மூலிகைகளும், உ.) கடற்பாசிகள்என ஐவகைப்படும்.
பூஞ்சைகள்
அ.) நொதிப்பூஞ்சை, ஆ.) துருப்பூஞ்சை, இ.) மென்பூஞ்சை என மூவகைப்படும்.
விலங்குகள்
அ.) முதுகெலும்பில்லாதவை (20,00,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்), ஆ.) முதுகெலும்பு உள்ளவை(42,000 இற்கும் மேற்பட்ட சிறப்பினங்கள்) என இருவகைப் படும்.
முதுகெலும்பில்லா விலங்குகள்
கடற்பஞ்சுகள்
இழுதுமீன் கிண்ண வடிவிகள், பவழ உயிரிகள்
புழுக்கள்
மெல்லுடலிகள்( நத்தை, சிப்பி, இப்பி வகைகள்)
பூச்சிகள்
சிலந்திகள், தேள்கள்
நண்டு வகைகள்,
நட்சத்திர மீன்களும் முள்ளமைப்பு உயிரிகளும்
என 8 வகையாகப் பகுக்கப்பட்டுள்ளன.
முதுகெலும்புள்ள விலங்குகள்
பாலூட்டிகள்,
பறவைகள்,
ஊர்வன,
இருநிலை வாழ்விகள்(நீரிலும்நிலத்திலும் வாழ்வன)
மீனினங்கள்
என ஐவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன.
சாறுண்ணி, ஒட்டுண்ணி போன்ற கருப்படலமுள்ள உயிர்த்தொகுதியே பூஞ்சை என அழைக்கப் பெறுகின்றன. இவை, 90, 000 வகையினவாகும்.
நிலத்தில் அல்லது நீரில் ஓர் உயிரி இயல்பாக வாழுமிடமே வாழிடம் எனப்படும். நிலம், நீர் இரண்டையும் வாழிடமாகக்கொண்டவையே இரு நிலை வாழ்விகள்.
சேர்ந்து வாழும் ஒரே வகைத் தனி உயிரிகளின் தொகுதி வாழிருப்பு எனப்பெறும். சில உயிரிகள் நிலையான வாழ்விருப்பை அமைத்துக் கொள்ளும்.
உயிருள்ளனவும் உயிரற்றனவும் ஒன்றையொன்று சார்ந்து வாழும் தொகுதிமுறை சூழ்(நிலைத்)தொகுதி எனப்பெறும். சூழ்தொகுதியானது இயற்கைத் தொகுதி, செயற்கைத் தொகுதி என இருவகைப்படும்.
விலங்கின் கூட்டம் சாலம் என்றும் வருந்தம் என்றும் குலம் என்றும் கணம் என்றும் அழைக்கப் பெறும்.
நிறமாற்றம் : உயிரிகள் சூழ்நிலைக்கேற்ப தம் நிறத்தை மாற்றிக் கொள்ளுதல் .
இதன் மூலம் இரை கொல்லியிடமிருந்து தப்பிக்கவும் இரையாகும் உயிரிகளை ஏமாற்றவும் உதவும்.
மரபற்றுப்போன உயிரினங்கள், தாவரங்களின் எச்சமாகப் பாறைகளில் பாதுகாப்பாக அமைந்துள்ள படிவங்கள் தொல்படிவங்கள் எனப் படுகின்றன.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் உயிரினங்களை ஆராய வேண்டும்.
No comments:
Post a Comment